உங்கள் வீட்டில் அடிக்கடி சண்டை வந்து கொண்டே இருக்கிறதா? அதற்கு காரணம் வாஸ்து பிரச்சனையாகவும் இருக்கலாம். இதனை உடனே சரிசெய்ய இந்த இரண்டு பொருட்கள் இருந்தால் போதும்

vasthu
- Advertisement -

சொந்த வீடு என்பது பலரின் பெரிய கனவாகும். “கல்யாணம் பண்ணிப்பார்” “வீட்டைக் கட்டிப்பார்” என்பது பழமொழியாகும். எப்படி ஒரு கல்யாணம் செய்வதற்கு பல வேலைகள் செய்ய வேண்டுமோ= அதே போல் தான் வீடு கட்டுவதில் பல பொறுப்பான வேலைகள் இருக்கிறது. கொஞ்சம் தவறினாலும் நாம் நினைத்த கனவு இல்லம் நிறைவேறாமல் போய்விடும். அந்த வீடு கட்டுவதற்கு தேவையான பணம் சரியாக வரவேண்டும், வேலைசெய்யும் ஆட்களும் நம்முடன் எந்த பிரச்சனையும் செய்யாமல் வீட்டை கட்டி தரவேண்டும் இவ்வாறு வீடு கட்டுவதன் ஒவ்வொரு நிலையிலும் ஒவ்வொரு விதமான அனைத்து விஷயங்களும் சரியாக நடைபெற்றால் மட்டுமே ஒரு வீட்டை முழுமையாக கட்டி முடிக்க முடியும். இவற்றில் ஏதேனும் ஒரு சிறு தடங்கல் வந்து விட்டாலும் வீடு என்பது முழுமை பெறாமல் அப்படியே நின்றுவிடும். இப்படி கட்டி குடியேறிய வீட்டில் அடிக்கடி பிரச்சினைகள் வந்து கொண்டிருந்தால் அவற்றை எப்படி சரி செய்ய வேண்டும் என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

புதியதாக ஒரு வீடு கட்டி அதில் நிம்மதியாக வாழ நினைத்து குடியேறும் ஒவ்வொருவருக்கும் அதனைத் தொடர்ந்து பிரச்சனைகள் வந்து கொண்டிருந்தால் மனவேதனை அதிகமாக வந்துவிடும். வாடகை வீட்டில் இருந்த நிம்மதி சொந்த வீட்டில் இல்லையே என்ற மனப் பதட்டம் உருவாகிவிடும். இந்த நிலமை இப்படியே தொடர்ந்தால் என்னென்ன பிரச்சனைகள் உண்டாகுமோ என்ற பயமும் நம்மை சூழ்ந்து கொள்ளும்.

- Advertisement -

சிறிய விஷயமாக இருந்தாலும் வீட்டில் உள்ளவர்களுக்கு இடையில் சண்டை உண்டாவது, ஏதேனும் புதிய விஷயம் தொடங்குவதாக இருந்தால் அதில் தடைகள் ஏற்படுவது, வேலையில் பிரச்சனை உண்டாவது, வியாபாரத்தில் நஷ்டம் ஏற்படுவது இது போன்ற பிரச்சனைகள் வந்து கொண்டிருந்தால் அதற்கு காரணம் அந்த வீட்டின் வாஸ்து குறைபாடாக கூட இருக்கலாம்.

இப்படி வாஸ்து குறைபாடு இருந்தால் வீட்டின் வாசலை மாற்றுவது, கதவை மாற்றுவது இதுபோன்ற செயல்களை நம்மால் செய்ய முடியாது. ஏனென்றால் ஒரு வீடு கட்டுவதற்கு எவ்வளவு கடின உழைப்பு தேவைப்படும் என்பது அனைவரும் அறிந்ததே. எனவே இவ்வாறு எதையும் செய்யாமல் சிறிய பரிகாரம் செய்வதன் மூலம் இந்த வாஸ்து குறைபாடுகளை சரிசெய்ய முடியும். அதற்கு நமக்கு தேவையானது இரண்டு பொருட்கள் மட்டும் தான்.

- Advertisement -

முதலில் அதற்காக நமது வீட்டிலிருக்கும் கல் உப்பை ஒரு கண்ணாடிக் கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு வீட்டின் ஈசானிய மூலையில் இருந்து ஒரு கைப்பிடி மண்ணை எடுத்துக் கொள்ள வேண்டும். அதனையும் உப்பின் மீது சேர்த்துக் கொள்ள வேண்டும்.

பிறகு அந்தக் கண்ணாடி பாத்திரத்தை காலை பிரம்ம முகூர்த்தத்துக்கு முன்பாக எடுத்துக் கொண்டு, அதனை வீட்டில் பூஜை அறையில் வைத்து விட வேண்டும். பிறகு மாலை 5 மணியளவில் இந்த கண்ணாடிப் பாத்திரத்தைக் கையில் வைத்துக்கொண்டு வீட்டை ஐந்து சுற்று சுற்ற வேண்டும். வீட்டிற்கு வெளியில் சுற்ற முடியாதவர்கள் வீட்டிற்குள்ளேயே ஐந்து சுற்று சுற்றி வந்த பிறகு, இந்தக் கல் உப்பு மற்றும் மண்ணை ஒரு பக்கெட் தண்ணீரில் கொட்டி விட வேண்டும். பிறகு இதனை கால் படாத இடத்தில் ஊற்றிவிட வேண்டும்.

- Advertisement -