உங்கள் வீட்டின் வடகிழக்கில் இதெல்லாம் இருந்தால்! இந்த கஷ்டங்கள் எல்லாம் உங்களுக்கு நிச்சயம் வரும் தெரியுமா?

vastu-urai
- Advertisement -

மனிதனுக்கு பிராணவாயு போன்றது வீட்டின் வடகிழக்கு மூலை என்பது ஆகும். ஒரு வீட்டில் வடகிழக்கு மூலை சரியாக அமைந்து விட்டால் அந்த வீட்டில் பிரச்சனைகளும் குறைவாகவே இருக்கும். அதுவே ஒரு வீட்டின் வடகிழக்கு மூலையை தவறான அமைப்பில் இருக்கும்படி அமைத்து இருந்தால் அந்த வீட்டில் தொடர் பிரச்சினைகளும், சுபகாரிய தடையும், கடன் தொல்லைகளும் நிச்சயம் இருக்கும். வடகிழக்கு ஏன் வாஸ்துவில் முக்கியமாக பார்க்கப்படுகிறது தெரியுமா?

direction-thisaigal

ஒரு வீட்டின் வடகிழக்கு மூலையில் தான் செல்வத்தையும், அவர்களுடைய ஆடம்பர வாழ்க்கையையும் சுட்டிக் காட்டுகிறது. அதாவது ஒருவர் நன்றாக இருக்கிறாரா? அவர்களுக்கு வருமானம் தடையின்றி வந்து கொண்டிருக்கிறதா? என்பதை வடகிழக்கு மூலை தான் எடுத்துக் காட்டுகிறது.

- Advertisement -

ஒருவர் ஜாதகத்தில் குரு எவ்வளவு முக்கியமோ, அதே போல தான் ஒரு வீட்டின் அமைப்பிலும் வடகிழக்கு என்பது குருவை போன்றவர். குரு பார்வை இல்லை என்றால் ஒரு வீட்டில் சுபகாரியங்களும், நல்ல விஷயங்களும் நடப்பதில்லை. அது போல தான் வடகிழக்கு மூலையும் சரியாக அமையாவிட்டால் கடன் தொல்லைகளும், பொருளாதாரப் பிரச்சினைகளையும் எதிர் கொள்வார்கள். வடகிழக்கு மூலையில் இருக்கக் கூடாத விஷயங்கள் என்ன? அதை எப்படி அமைத்துக் கொள்ள வேண்டும்? என்பதை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்?

sad-man

வடகிழக்கு மூலையில் நீர் சம்பந்தப்பட்ட விஷயங்கள் இடம் பெற்றிருப்பது சிறப்பானது என்றாலும், அந்த இடத்தில் தலைவாசலுக்கு நேரெதிரே இருக்கும் படியான சூழ்நிலை அமைந்து இருந்தால்!! அடியில் நீர்த்தேக்க தொட்டிகள், போர்வெல் போன்றவை அமைத்திருக்கிறோம் என்று வைத்துக் கொள்வோம். அந்தத் தொட்டியின் மீது ஏறி தான் தலைவாசலை மிதிக்க வேண்டும் என்பது போல் வடகிழக்கு பகுதி அமைந்து இருந்தால் அந்த வீட்டில் வீட்டின் தலைவர் வாழ முடியாத சூழ்நிலை ஏற்படும். மனைவியுடன் இருக்க முடியாத நிலைமை உருவாகலாம். கடன் தொல்லை கழுத்தை நெறிக்கும் அளவிற்கு தள்ளிவிடும்.

- Advertisement -

மேலும் அந்த இடத்தில் உயரமான மரங்களை வளர்க்க கூடாது. வட கிழக்கு பகுதி பள்ளமாகவும் இருக்கக் கூடாது. இதனால் வீட்டில் சுபகாரியங்கள் நடைபெறுவதில் பிரச்சனைகள் உண்டாகும். அதே போல் நீருக்கு உரிய இடமான வடகிழக்கு பகுதியில் நெருப்பு சம்பந்தப்பட்ட விஷயங்களை அமைத்து இருந்தாலும் மிகப் பெரிய பாதிப்புகளை உண்டாக்கும். அந்த இடத்தில் சமையலறை வரக்கூடாது. இதனால் வீட்டின் வாரிசுகள் பாதிக்கப்படுவார்கள். செல்வநிலை வெகுவாக குறைந்து விடும் சூழ்நிலை உருவாகலாம்.

kitchen

தோஷங்களைப் போக்க வல்லவர் குரு பகவான். குரு பகவான் உச்சம் பெற்றிருந்தால் தோஷங்கள் நீங்கும். எனவே வடகிழக்கு குரு பகவானுக்கு உரிய இடமாக இருப்பதால் மற்ற திசைகளை விட வடகிழக்கு திசையை நீங்கள் சரியாக அமைத்து விட்டால் மற்ற திசைகளில் இருக்கும் தோஷங்களை இறை வழிபாடுகள் செய்து சுலபமாக நீக்கி விட முடியும். இதனால் தான் வடகிழக்கு திசை இந்த அளவிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

- Advertisement -

vastu 1

உங்கள் வீட்டின் வடகிழக்கு மூலையை சரியாக அமைத்துக் கொள்ளுங்கள். அந்த இடத்தில் அதிக கனமான பொருட்களை வைக்காமல், குறைவான கனமுள்ள மற்றும் நீர் சம்பந்தப்பட்ட விஷயங்கள் வருமாறு பார்த்து சரியாக அமைத்துக் கொண்டால் உங்களுக்கு இருக்கும் வாஸ்து தோஷம், கிரக தோஷம் அனைத்தும் நீங்கி குருவின் அருளால் கடன் பிரச்சினை இல்லாமல் நிம்மதியாக வாழ முடியும். சுப காரியங்கள் தடை இல்லாமல் கைகூடும். வீட்டில் நல்லவை நடக்கும் என்பதைக் கூறி இந்த பதிவை முடித்துக் கொள்வோம்.

இதையும் படிக்கலாமே
நீங்க வீடுகட்ட ஆரம்மிச்சுட்டீங்கன்னா, எந்த பொருளை, எந்த நாளில் வாங்கினால் வீட்டை சீக்கிரம் கட்டி முடிக்கலாம்?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான வாஸ்து சார்ந்த தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -