வீட்டு சுவற்றில் படங்கள் மாட்டுவதற்கான வாஸ்து விதிகள்

vasthu wall pictures

வீடுகள் என்பது நாம் வசிப்பதற்கான ஒரு இடம் என்றாலும், அதில் நமது மனதிற்கு இன்பம் தருகின்ற, வீட்டில் நன்மையான அதிர்வுகளை உண்டாக்குகின்ற பொருட்களை நாம் வைப்பதால் நமக்கும், நம்மை சார்ந்தவர்களுக்கும் பல நன்மைகளை கொடுக்கும். அப்படி வீட்டை அலங்கரிக்க நாம் பல வகையான படங்களை சுவற்றில் மாட்டுகின்றோம். வாஸ்து சாஸ்திரத்தில் வீட்டில் படங்களை மாட்டுவதற்கு சில விதிகள் கூறப்பட்டிருக்கின்றன அவை என்ன என்பதை இங்கு அறிந்து கொள்ளலாம்.

வீட்டில் கடவுளின் படங்களை மாட்ட சரியான இடங்கள் மற்றும் திசைகள் குறித்து வாஸ்து சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. போர், வன்முறை மிக்க காட்சிகளை கொண்ட படங்களை வீட்டின் எந்த ஒரு அறையிலும் மாட்டக்கூடாது. ரதத்திலிருக்கும் குருச்சேத்திர கிருஷ்ணன் அர்ஜுனன் படத்திற்கு பதிலாக, அர்ஜுனனுக்கு கிருஷ்ண பரமாத்மா காட்டிய விஸ்வரூப தரிசன காட்சி கொண்ட படத்தை வீட்டின் வரவேற்பறையில் மாட்டலாம்.

வீட்டில் செல்வ வளம் பெருக பூஜையறையில் லட்சுமி, குபேரர் போன்றோரின் படங்களை வடக்கு திசையிலிருந்து தெற்கு திசை நோக்கி பார்த்தவாறு மாட்ட வேண்டும். வீட்டை துஷ்ட சக்திகள் அண்டாதிருக்க சஞ்சீவி மலையை தூக்கியவாறு இருக்கும் ஆஞ்சநேயர் படத்தை தென் திசையை பார்த்தவாறு மாட்டலாம். உக்கிர தோற்றத்தில் இருக்கும் துர்க்கை, காளி, நரசிம்மர், ஆஞ்சநேயர் ஆகிய தெய்வங்களின் படங்களை வீட்டில் எங்கும் மாட்டக்கூடாது.

lions

கிருஷ்ண பரமாத்மா மற்றும் ராதை சேர்த்திருக்கும் படங்களை வீட்டில் படுக்கையறையில் மட்டுமே மாட்டுவது நல்லது. இதனால் கணவன் மனைவிக்குள் இருக்கும் அந்நோன்யம் எப்போதும் நீடிக்கும். புலி, சிங்கம் போன்ற விலங்குகள் பற்களை காட்டியவாறு, வேட்டையாடும் வகையில் இருக்கும் படங்களையம் மட்டக்கூடாது. ஆனால் இவ்விலங்குகள் ஜோடியாக குட்டிகளோடு இருக்கும் படங்களை வீட்டின் கிழக்கு மற்றும் மேற்கு திசை பார்த்தவாறு மாட்டிவைக்கலாம்.

இதையும் படிக்கலாமே:
ஸ்டோர் ரூம் வாஸ்து முறைகள்

இது போன்று மேலும் பல வாஸ்து சாஸ்திரம் குறிப்புக்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Home picture vastu in Tamil. It is also called as Vastu padangal in Tamil or Veetil sami padangal in Tamil or Veedu vastu in Tamil or Vastu vidhigal in Tamil.