கண்ணுக்குத்தெரியாத வாஸ்து தோஷத்தால், வீட்டில் வரக்கூடிய பெரிய பெரிய பிரச்சினைகளுக்கு கூட ஒரே நாளில் தீர்வை கொடுக்கும் அதிசக்தி வாய்ந்த பரிகாரம்.

vastu

ஒரு வீட்டில் கண்ணுக்கு தெரியாத வாஸ்து தோஷங்கள் இருக்கும் பட்சத்தில் அந்த வீட்டில் நிச்சயமாக தொடர் கஷ்டங்கள் வரத்தான் செய்யும். 100% ஒரு வீட்டை வாஸ்து தோஷம் இல்லாமல் கட்டிவிட முடியாது. எந்த வாஸ்து தோஷமாக இருந்தாலும் அதை நிவர்த்தி செய்யக் கூடிய பரிகாரங்கள் ஆன்மீக ரீதியாக, நம்முடைய சாஸ்திரத்தில் நிறையவே கொடுக்கப்பட்டுள்ளது. அந்த வரிசையில் சுலபமாக சொல்லப்பட்டிருக்கும் வாஸ்து தோஷத்தை நீக்கக் கூடிய சக்திவாய்ந்த ஒரு குறிப்பை பற்றிதான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

vasthu-logo

நம்முடைய வீட்டில் எந்த பொருளை, எந்த இடத்தில் வைக்க வேண்டும் என்று வாஸ்துவைப்பார்த்து பார்த்து வைக்க முடியாது. தவறான இடத்தில், வைக்கக் கூடாது பொருள் கூட, எதிர்மறை ஆற்றலை உண்டாகி நம்முடைய வீட்டில் காற்றின் மூலமாக கூட வாஸ்து தோஷம் உண்டாகும் என்று சொல்லப்பட்டுள்ளது.

இந்த வாஸ்து தோஷத்தால் வீசும் காற்றினை வீட்டில் உள்ளவர்கள் சுவாசிக்கும் போது, அவர்களுடைய மன நிலைமையில் மாற்றம் ஏற்பட்டு தேவையில்லாத பிரச்சினைகள் வந்து வீட்டில் சண்டை சச்சரவுகள் வருவதற்கும் வாய்ப்பு உண்டு. இதை தவிர்க்க என்ன செய்வது? உங்களுடைய வீட்டு நிலை வாசல் படியில், வெளியே பார்த்தவாறு கற்பக விநாயகரின் திருவுருவப் படத்தை மாட்டி வைக்கலாம். இது ஒரு சுலபமான வழி. வீட்டிற்குள் கெட்ட சக்தியும் நுழையாமல் இருக்கும்.

karpaga-vinayagar

இதைத் தவிர்த்து இன்னொரு பரிகாரமும் உங்களுக்காக! ஒரு சிறிய மண் குடுவையை வாங்கி வைத்துக்கொள்ளுங்கள். அந்தக் குடுவைக்குள் கஸ்தூரி மஞ்சள், வசம்பு, இந்து உப்பு, ஏலக்காய், வென்கடுகு, ஒரு எலுமிச்சை பழம் இதில் எண்ணிக்கை எல்லாம் கிடையாது. எந்த அளவிற்கு நீங்கள் மண் பானையை எடுத்துக் கொள்கிறீர்களோ அந்த அளவிற்கு அந்த மண்பானை நிரம்பும் அளவிற்கு இந்த பொருட்களை எல்லாம் அந்த குடுவையில் போட்டு, ஒரு மஞ்சள் துணி போட்டு, அந்தக் குடுவையின் வாய் பக்கத்தை மூடி, ஒரு நூல் போட்டு கட்டி விட வேண்டும். அவ்வளவு தான்.

- Advertisement -

இந்த சிறிய மண் பானையை உங்களுடைய வீட்டில் கண்ணுக்குத் தெரியாமல் ஒரு அலமாரியின் மீதோ அல்லது பரணையின் மீது தூக்கி வைத்து விட்டால் போதும். வீட்டில் இருக்கக் கூடிய காற்று சம்பந்தப்பட்ட வாஸ்து தோஷங்கள் எதுவும் உங்களுடைய வீட்டை நிச்சயம் தாக்காது. வருடத்திற்கு ஒருமுறை இந்த பொருளை மாற்றினால் போதும்.

paanai

இந்த குடுவையை எந்த கிழமையில் வேண்டுமென்றாலும் தயார் செய்யலாம். ஆனால் நல்ல நேரம் பார்த்து தயார் செய்து, அந்த நல்ல நேரத்திலேயே உங்களுடைய வீட்டில் வைத்து விடுங்கள். இந்த பொருளிலிருந்து வீசக்கூடிய அந்த வாசம், வாஸ்து குறைபாட்டை நீக்கும். கெட்ட சக்திகளையும் உங்கள் வீட்டிற்குள் நுழைய விடாது என்பது குறிப்பிடத்தக்கது. முயற்சி செய்து பாருங்கள். வீட்டில் எதனால் பிரச்சினை வருகிறது என்றே தெரியாது, என்பவர்களுக்கு இந்த பரிகாரம் ஒரு தீர்வை தரும்.

இதையும் படிக்கலாமே
இதெல்லாம் கூட சாபம் ஆகுமா? தெரியாமல் நீங்கள் வாங்கிய சாபம் நீங்க வீட்டில் உடனே இப்படி செய்து விடுவது நல்லது தெரியுமா?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.