இதெல்லாம் கூட சாபம் ஆகுமா? தெரியாமல் நீங்கள் வாங்கிய சாபம் நீங்க வீட்டில் உடனே இப்படி செய்து விடுவது நல்லது தெரியுமா?

crow-pepper

சாபம் என்பது என்ன? உண்மையிலேயே சாபங்கள் பலிக்குமா? எவையெல்லாம் சாபங்களாக மாறுகின்றன? சாபம் நீங்க நாம் செய்ய வேண்டியது என்ன? இது போன்ற கேள்விகளுக்கு எல்லாம் இந்த பதிவின் மூலம் விடையை தெரிந்து கொள்வோம். சாபங்கள் என்பது வெறும் வார்த்தைகள் அல்ல. ஒருவர் உண்மையிலேயே மனதால், உடம்பால் மற்றவர்களால் துன்பத்தை அனுபவித்து, அதைப் பொறுக்க முடியாமல், எதிர்த்து ஒன்றும் செய்ய முடியாமல் வயிற்றெரிச்சலுடன் விடும் சாபங்கள் நிச்சயமாக பலிக்கும். இதற்கு பரிகாரம் என்பதே கிடையாது. ஆனால் இப்படி அல்லாமல் வேறு வகைகளிலும் நமக்கு சாபங்கள் உண்டாகின்றன. அதைப் பற்றி தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்..

sabam

நம்மால் கஷ்டங்களை அனுபவித்து ஒருவர் நமக்கு வார்த்தைகளால் கொல்வதற்கு சமமானது சாபமாக கருதப்படுகிறது. இவைகள் மட்டுமல்லாமல் நாம் முன்ஜென்மத்தில் செய்த பாவங்களுக்கு ஏற்ப நமக்கு கர்மாக்கள் வழியே சாபங்களும் ஏற்படுகின்றன. இவ்வகையான சாபங்கள் பறவைகளின் எச்சங்கள், மற்றவர்களுடைய எச்சில் போன்ற விஷயங்களிலிருந்து கிடைக்கப் பெறுகின்றன. திடீரென மேலே பறக்கும் பறவை நம்மீது எச்சமிட்டு சென்றாலும் அது சாபமாக மாறுகின்றன என்று சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது.

பறவைகளின் எச்சங்கள் நம் மீது படும் பொழுது அல்லது பறவைகள் தூக்கி செல்லும் ஏதாவது ஒரு மாமிச பொருட்கள் திடீரென நம் மீது படுவது போன்றவைகளும் சாபங்களாக மாறுகின்றனவாம். சாபம் என்பது தோஷத்திற்கு இணையானது தான். இதற்கான பரிகாரம் செய்து கொண்டால், அதிலிருந்து வரும் பாதிப்புகளை தடுத்துக் கொள்ள முடியும். நாம் செய்த கர்மாக்கள் நிறைய விஷயங்கள் மூலமாக நமக்கு துன்பத்தைக் கொடுக்கும். அவ்வகையில் சாபங்களும் துன்பத்திற்கு காரணமாக அமைந்து விடுகிறது.

crow-dung

ஒருவருடைய எச்சில் தெரியாமல் நம் மீது பட்டு விட்டால் கூட, அதுவும் சாபம் தான். இது தெரிந்தும், தெரியாமலும் நிகழலாம். சிலர் வெற்றிலை பாக்கு மென்று விட்டு துப்புவார்கள் அது மற்றவர்கள் மீது பட்டுவிடும். இது போல எந்த வகையில் நிகழ்ந்தாலும், ஒருவருடைய எச்சில் இன்னொருவர் மீது பட்டுவிட்டால் அது சாபம் ஆகிறது. அது போல் மலஜலம் மிதித்து விடுவது, அல்லது நம்மீது படுவது போன்றவையும் சாபமாக, தோஷமாக மாறுகிறது. இதனால் தான் வெளியிலிருந்து வீட்டிற்குள் செல்லும் முன் பின்னங்கால்களை கழுவி விட்டு செல்ல வேண்டும் என்று நம் முன்னோர்கள் கூறுவதுண்டு.

- Advertisement -

நாம் ஏதாவது சிறிய விதமான தவறுகள் செய்திருந்தாலும் சிலரது சாபத்தை எளிதாக பெற்று விடுவோம். அது போன்ற தேவையில்லாத வார்த்தைகள் கூட ஏதாவது விதத்தில் நமக்கு தடையை ஏற்படுத்தும். இதற்கு பரிகாரம் செய்து கொண்டால் எந்த வகையான சாபங்களும் நமக்கு ஒன்றும் செய்யாமல் செய்து விடலாம். அதற்கு என்ன செய்யலாம்? சிறிதளவு கல் உப்பு எடுத்து தூப காலில் போட்டுக் கொள்ளுங்கள். பச்சை கற்பூரம், மிளகு, வெண்கடுகு இந்த மூன்று பொருட்களையும் உடல் முழுவதும் தடவி விட்டு, அந்த உப்பில் போட்டு அதனுடன் ஒரு கற்பூரம் சேர்த்து எரித்துவிட வேண்டும்.

Milagu-1

பின்னர் இவற்றை கால் படாத இடத்தில் கொட்டி விட்டு, ஓடிக் கொண்டிருக்கும் நீர்நிலைகளில் சென்று குளித்து விடலாம். உடனே நீர் நிலைகளில் குளிக்க முடியாதவர்கள் வீட்டில் கிழக்கு பார்த்து சாதாரமாக வஸ்திரம் இல்லாமல் குளித்து விட்டு, அன்றிலிருந்து ஏழு நாட்களுக்குள் கடல் அல்லது ஏதாவது ஒரு நீர்நிலைகளில் ஸ்நானம் செய்து விட்டு வந்து விட்டால் போதும்! எந்த ஒரு தோஷமும், எந்த ஒரு சாபமும் நம்மை ஒன்றும் செய்ய முடியாது.

இதையும் படிக்கலாமே
ஆயுசுக்கும் உங்களுக்கு சனிபகவானால் வாழ்க்கையில் கஷ்டமோ நஷ்டமோ வரவே வராது. இந்த பரிகாரத்தை செய்து வந்தால், ஏழரை சனி தாக்கத்தில் இருந்தும் தப்பித்துக்கொள்ளலாம்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.