வாஸ்து குறைகளை நிவர்த்தி செய்யும் வாஸ்து தோஷ பரிகாரம்

Vasthu tips in Tamil

பஞ்ச பூதங்கள், எட்டு திசைகள் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு மக்களுக்கு நன்மைகள் ஏற்பட , விஞ்ஞான முறையில் வீடுகள், கட்டிடங்களை கட்டும் பண்டைய கால இந்திய கலை தான் “வாஸ்து சாஸ்திரம்”. இன்று சொந்த வீடு, கட்டிடங்கள் போன்றவற்றை கட்டும் அனைவருமே வாஸ்து சாஸ்திரத்தை பின்பற்றி தான் கட்டுகின்றனர். ஆனாலும் இவர்கள் அனைவருக்குமே ஏதாவது ஒரு வகையில் “வாஸ்து தோஷம்” ஏற்படவே செய்கிறது. இந்த வாஸ்து தோஷம் குறித்தும், அந்த வாஸ்து தோஷத்தை போக்கும் பரிகாரங்கள் என்ன என்பதை குறித்தும் இங்கு அறிந்து கொள்ளலாம்.

vasthu

வாஸ்து சாஸ்திரம் என்பது மிகப்பெரும் கடல் போன்றது. இதில் பெரும்பாலான மக்கள் தெரிந்து வைத்திருக்கும் விடயங்கள் எல்லாம் சிறு துளிகளுக்கு ஒப்பானது தான். வாஸ்து சாஸ்திர படி கட்டிடங்களை கட்டுபவர்கள் எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டிய நடைமுறை உண்மை என்னவென்றால் எந்த ஒரு வீட்டையோ, கட்டிடங்களையோ 100% வாஸ்து முறை படி கட்ட முடியாது. எந்த வகையான கட்டிடங்களிலும் சிறிதளவு வாஸ்து குறைபாடு இருந்து வாஸ்து தோஷம் இருக்கத்தான் செய்யும்.

வாஸ்து குறைபாட்டால் தங்களுக்கு பிரச்சனைகள் ஏற்படுவதாக கருதும் நபர்கள் சொந்த வீடாக இருப்பின் வீட்டின் வெளிப்புற சுவற்றில் மங்கலகரமான விநாயகர், லட்சுமி படம் வரைந்த “டைல்ஸ்” ஓடுகளை பதிக்க வேண்டும். வாஸ்து குறைபாடு கொண்ட வாடகை வீடுகளில் வசிப்பவர்கள், மேற்கூறிய கடவுள்களின் சிறிய அளவு படங்களை வெளிப்புறத்தில் மாட்டி வைக்கலாம். வீட்டின் வடகிழக்கு பகுதியை சுத்தமாகவும், எப்போதும் அந்த பகுதியில் வெளிச்சம் இருக்குமாறும் பார்த்துகொள்ள வேண்டும். வீட்டின் தென்கிழக்கு பகுதியில் படுக்கை அறை அமைப்பதையும், ஒருவேளை அப்படி அமைத்திருந்தால் அந்த அறையில் படுத்து உறங்குவதையும் தவிர்க்க வேண்டும். இது குடும்பத்தில் தேவையற்ற பிரச்சனைகள், சண்டைகள் ஏற்படுவதைத் தடுக்கும். வீட்டின் படுக்கை அறைகளில் முகம் பார்க்கும் கண்ணாடி, தொலைக்காட்சி பெட்டியின் கண்ணாடி திரை போன்றவை நீங்கள் உறங்கும் போது உங்களை நோக்கியவாறு இல்லாமல் பார்த்து கொள்ளவேண்டும்.

home

வாஸ்து தோஷத்தால் உங்களுக்கு பொருளாதார ரீதியாக பிரச்சனைகள் ஏற்படுவதாக கருதினால் உங்கள் வீட்டில் தண்ணீர் குழாய்கள், தொட்டிகள் போன்றவற்றில் ஓட்டைகள் ஏதேனும் ஏற்பட்டிருக்கிறதா என்பதை சோதித்து, அப்படி ஏதேனும் இருந்தால் அதை உடனடியாக சரி செய்து கொள்ள வேண்டும். வீட்டின் பூஜையறையில் செல்வமகள் “லட்சுமிதேவி” நின்றவாறு இல்லாமல் அமர்ந்திருக்கும் நிலையில் இருக்கும் படத்தை வைக்க வேண்டும். வாஸ்து குறைபாட்டால் பிரச்சனைகள் ஏற்படாமல் தவிர்ப்பதற்கு வாஸ்து பகவானின் சிறு பொம்மை, செம்பு உலோகத்தில் செய்யப்பட்ட சிறிய நாகராஜர் வளையம் அல்லது விக்கிரகம், சிறிதளவு செம்மண் ஆகியவற்றை ஒரு சிகப்பு நிற துணியில் வைத்து கட்டி முட்டிபோட்டு, உங்கள் வீட்டின் கிழக்கு பகுதியில் வைக்க வேண்டும்.

- Advertisement -

போர் காட்சிகள், இச்சையை தூண்டும் வகையிலான படங்களை வீட்டின் சுவற்றில் மாட்டக்கூடாது. முழுமை பெறாத, பின்னப்படுத்தப்பட்ட சிலைகள், விகார உருவங்கள் போன்றவற்றை கலைப்படைப்பு என்ற பெயரில் வீட்டில் வைக்க கூடாது. குழந்தைகள் விளையாடும் மனித உருவம் கொண்ட பொம்மைகளை அவர்கள் விளையாடிய பின்பு வேறொரு இடத்தில வைக்க வேண்டும். அவற்றை சுவற்றில் மாட்டுவதோ, குழந்தைகள் உறங்கும் அறையிலேயே வைப்பதோ கூடாது.வீட்டில் நறுமணம் பரவச்செய்யும் மல்லிகை, மரிக்கொழுந்து போன்ற செடிகளை வளர்ப்பது வாஸ்து குறைபாட்டை சரிசெய்யும். சாமந்தி செடிகளை வளர்ப்பதால் வீட்டில் துஷ்ட சக்திகள் அண்டாது. பல வண்ணங்களில் இருக்கும் பூக்களை தோட்டங்களில் வளர்ப்பதும் வீட்டின் வாஸ்து தோஷத்தை போக்கும்.

இதையும் படிக்கலாமே:
ராகு தோஷ பரிகாரம்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Vastu dosha pariharam in Tamil.