ராகு தோஷ பரிகாரம்

ragu-parigaram
- Advertisement -

சூரிய மற்றும் சந்திர கிரகணங்கள் ஏற்படும் போது விண்ணில் இருக்கும் பாம்பு சூரிய – சந்திர கிரகங்களை விழுங்குவதாக கூறப்படும் கதைகளை நாம் கேட்டிருபோம். கிரகணங்களின் போது ஏற்படும் நிழல் தான் நவகிரகங்களில் “நிழல்” கிரகங்களான ராகு மற்றும் கேது. நிழல் கிரகங்களாக இருந்தாலும் “குரு, சனி” போன்ற கிரகங்களுக்கு நிகரான வலிமை கொண்ட கிரகங்கள் ராகு மற்றும் கேது ஆகும். இதில் ராகு கிரகத்தின் தன்மை குறித்தும், ராகு கிரகத்தால் ஏற்படும் ராகு தோஷம் நீங்குவதற்கான பரிகாரங்கள் குறித்து இங்கு அறிந்து கொள்ளலாம்.

rahu 1

ராகு தோஷ பரிகாரம்

“ராகு” கிரகம் ஒரு நபரின் ஜாதகத்தில் நல்ல நிலையில் இருந்தால் அந்த நபருக்கு சிறந்த பேச்சாற்றலும், எதற்கும் அஞ்சாமல் துணிந்து காரியங்களில் ஈடுபட்டு வெற்றிபெறும் திறனும், வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரியும் வாய்ப்பும் ஏற்படும். அதிக சோம்பல்தனம், போதை பழக்கம், சமூக விரோதிகளுடன் சகவாசம், இல்லற வாழ்வில் தினந்தோறும் ஏதாவது ஒரு பிரச்சனை ஆகியவை ராகு கிரகத்தின் பாதகமான நிலை மற்றும் ராகு கிரக தோஷத்தின் தீவிர தன்மையாலும் ஏற்படும் பாதகமான பலன்கள் ஆகும்.

- Advertisement -

ராகு கிரகத்தின் பாதக பலன்கள் நீங்குவதற்கு தினந்தோறும் காலையில் எழுந்து குளித்து முடித்ததும், ராகு பகவானை மனதில் நினைத்து “ஓம் ரம் ராகுவே நமஹ” எனும் மந்திரத்தை 108 முறை துதித்து வழிபட வேண்டும். வாரத்திற்கு ஒருமுறை அல்லது இருமுறை நீங்கள் குளிக்கும் நீரில் அசோக மரத்தின் சில இலைகள், சந்தன மர எண்ணெய் சில துளிகள் ஆகியவற்றை போட்டு கலக்கி, அந்நீரில் குளித்து வர வேண்டும். இரவில் நேரங்கடந்து சாப்பிடுவதையும், கெட்டு போகும் நிலையில் இருக்கின்ற உணவுகளையும் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

feeding fish

மக்களின் தாகத்தை தணிக்கும் தண்ணீர் பந்தல் அமைப்பது ராகு பகவானின் அருளை பெற்று தரும் ஒரு மிக சிறந்த பரிகாரமாகும். சந்தனமர கட்டையின் சிறிய துண்டு ஒன்றை எடுத்து, அதை நீல நிற கயிற்றில் காட்டி உங்கள் கையில் காப்பு கயிறாகவோ அல்லது கழுத்திலோ அணிந்து கொள்ளலாம். அமாவாசை தினங்களில் அருகிலுள்ள சிவன் கோவிலில் பூஜை சடங்கிற்கு 4 தேங்காய்கள் தானமாக வழங்கி வந்தால் ராகு கிரகத்தால் பாதக பலன்கள் ஏற்படாமல் தடுக்கும். செவ்வாய் கிழமைகளில் ராகு பகவானுக்கு நெய் தீபமேற்றி, அவருக்குரிய மந்திரங்களை கூறி வழிபடுவதும் சிறந்த பலன்களை ஏற்படுத்தும். கோவில் குளங்களிலுள்ள மீன்களுக்கு அவ்வப்போது பொரியை உணவாக அளிப்பதும் நற்பலன்களை ஏற்படுத்தும்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே:
குரு பெயர்ச்சி பரிகாரம்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Rahu dosham pariharam in Tamil language or Rahu pariharam in Tamil or Ragu Pariharam in Tamil. This is very powerful pariharam for Rahu baghavan.

- Advertisement -