2019 புத்தாண்டு ராசி பலன்

2019 New year rasi palan

2019 மேஷம் ராசி பலன்
Mesham Rasi

வீர உணர்வு அதிகம் கொண்ட மேஷ ராசிக்காரர்களே உங்களுக்கு 2019 ஆம் ஆண்டு தொடக்கத்தில் பொருளாதார நிலையில் சில நெருக்கடிகள் வந்தாலும் பின்பு வரும் காலங்களில் வருமானத்திற்கு எந்த ஒரு குறையும் இருக்காது. நீங்கள் எதிர்பார்க்கும் உதவிகள் உங்களுக்கு கிடைக்கும். ஒரு சிலர் உடல்நலம் பாதிக்கப்பட்டு குணமாவீர்கள். எந்த ஒரு காரியத்திலும் கடின முயற்சிகளை மேற்கொண்டாவது வெற்றிபெறுவீர்கள். அரசு, தனியார் நிறுவன ஊழியர்கள் பதவி உயர்வுகளை பெரும் யோகம் உண்டு. கோவில் சம்பந்தமான புனித காரியங்களில் ஈடுபட்டு கௌரவத்தையும் ஆண்டவனின் அருளையும் பெறுவீர்கள்.

2019 Mesha Rasi Palan Video
.

அடிக்கடி பயணங்களின் போது புதிய உணவுகளை உண்பதாலும் சிலருக்கு வயிறு சம்பந்தம்மான பிரச்சனைகள் ஏற்படக்கூடும். அடிக்கடி உடல் சோர்வு ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்களும் சில உடல் நலக்குறைவுகளால் பாதிக்கப்பட்டு மீள்வார்கள். வீட்டில் திருமண வயதை எட்டியவர்களுக்கு திருமணம் இந்தாண்டு நடக்க அதிக வாய்ப்புண்டு. புதிதாக தொடங்கப்படும் தொழில் வியாபார முயற்சிகளில் சிறிது கடிமான காலகட்டங்களை கடந்த பிறகே சிறந்த பலன்களை பெற முடியும். உங்களுக்கு கீழ் பணிபுரியும் தொழிலார்கள் மற்றும் வேலையாட்களின் ஒத்துழைப்பு உங்களுக்கு கிடைக்கும்.

பணியிலிருப்பவர்கள் அதிகப்படியான வேலைப்பளுவை சுமக்க நேரிடும். புதிதாக வேலை தேடும் நபர்களுக்கும் பல தடங்கல்களுக்கு பிறகு நல்ல வேலை வாய்ப்பு அமையும். வெளியூர் மற்றும் வெளிநாடுகளின் பணிகளுக்கான முயற்சிகள் வெற்றியடையும். அரசியல் மற்றும் பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு சற்று தர்ம சங்கடமான நிலை ஏற்படும். விவசாய தொழிலில் இருப்பவர்களுக்கு பயிர்கடன்கள் சற்று தாமதத்திற்கு பின்பு கிடைக்கும். கலைத்தொழிலில் இருப்பவர்களுக்கு இந்தாண்டு நல்ல வாய்ப்புகள் அமையும். பெண்கள் உடல் நலத்தில் அக்கறை செலுத்த வேண்டும். பெற்ற பிள்ளைகள் வழியில் ஒரு சில சங்கடங்கள் ஏற்படலாம். மாணவ – மாணவியர் கல்வியில் மிகுந்த அக்கறை செலுத்தினால் கல்வியில் சிறக்கலாம்.

2019 ரிஷபம் ராசி பலன்
Rishabam Rasi

- Advertisement -

தன்னை எப்போதும் அழகாக காட்டிக்கொள்வதில் அக்கறை கொண்ட ரிஷப ராசிக்காரர்களுக்கு 2019 ஆம் ஆண்டு சிறந்த ஆண்டாக இருக்கும். குடும்பத்தில் எப்போதும் மகிழ்ச்சி நிலைத்திருக்கும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். தடைபட்டு கொண்டிருந்த காரியங்கள் அனைத்தும் ஒவ்வொன்றாக நிறைவேறும். புத்திர பேறில்லாமல் அவதிப்பட்டவர்களுக்கு புத்திர பாக்கியம் உண்டாகும். ஒரு சிலருக்கு புதிய வீடு, வீட்டு மனை மற்றும் அசையா சொத்துக்களை வாங்கும் யோகம் உண்டாகும். உடல் நலத்தில் அவ்வப்போது சிறு சிறு பாதிப்புகள் உண்டாகி மறையும். எதிர்பார்க்கும் பதவி உயர்வுகள் கிடைக்கும்.

2019 Rishaba Rasi Palan Video

உங்களுடைய உடல்நிலை பெரும்பாலும் நன்றாக இருக்கும். ஆனாலும் குடும்பத்தில் உள்ள சிலருக்கு மருத்துவ செலவுகள் செய்ய வேண்டி வரும். கடந்தகாலங்களில் வாங்கிய கடன்களை அடைத்து விடுவீர்கள்.தொழில், வியாபாரங்களில் போட்டிகள் இருந்தாலும் உங்கள் கடின உழைப்பின் மூலம் வெற்றியை பெறுவீர்கள். உங்கள் தொழில், வியாபாரங்களை விரிவு படுத்தும் முயற்சிகள் அனைத்திலும் அனுகூலங்கள் ஏற்படும்.

வெளியூர், வெளிநாட்டு வியாபாரங்களில் மிகுந்த லாபம் ஏற்படும். பணிபுரிபவர்கள் உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவார்கள். ஒரு சிலருக்கு புதிய இடங்களுக்கு இடமாறுதல்கள் ஏற்படும். அரசியல் துறையில் இருப்பவர்களுக்கு எதிலும் ஏற்ற, இறக்கமான பலன்களே ஏற்படும். விவசாயத்தில் ஈடுபடுபவர்களுக்கு அமோக விளைச்சல் உண்டாகும். கலைத்தொழிலில் இருப்பவர்களுக்கு வெளியூர், வெளிநாடு கலை பயணங்கள் செல்லும் சூழல் உண்டாகும். புதிய வாகனங்கள் வாங்குவீர்கள். பெண்களுக்கு உடல் நலம் நன்றாக இருந்தாலும் ஆரோக்கியத்தில் தொடர்ந்து அக்கறை செலுத்த வேண்டும். கல்வி பயிலும் மாணவர்கள் கல்வியில் சிறப்பார்கள். விரும்பிய மேற்படிப்புகளை படிக்க கூடிய வாய்ப்புகள் அமையும்.

2019 மிதுனம் ராசி பலன்
midhunam

சிறந்த ஞாபகசக்தி கொண்ட மிதுன ராசிகர்களுக்கு பிறக்கின்ற 2019 ஆம் ஆண்டு சாதக, பாதகங்கள் சம அளவு கலந்ததாகவே இருக்கும். அவ்வப்போது நோய்களால் பாதிக்கப்படும் சூழ்நிலை உண்டாகும். பண விவகாரங்களில் நம்பியவர்களே உங்களை மோசம் செய்யக்கூடும். உடன் பணிபுரிபவர்களிடம் அனுசரணையாக இருப்பது உங்களுக்கு நன்மையை தரும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை வருடத்தின் முதல் மூன்று மாதம் வரை ஒத்தி வைப்பது நல்லது. வெளிநாட்டு தொடர்புடைய தொழில் வியாபாரங்களில் அனுகூலங்கள் ஏற்படும். தம்பதிகளிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும்.

2019 Mithuna Rasi Palan Video

மனைவி மற்றும் பிள்ளைகள் வழியே மருத்துவ செலவுகள் ஏற்படக்கூடும். இந்தாண்டு நீங்கள் அதிக பயணங்களை மேற்கொள்வீர்கள். உங்களுக்கும் உங்கள் உறவினர்களுக்குமிடையே சில பிரச்சனைகள் ஏற்படலாம். பிறருக்கு கடன் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. தொழில், வியாபாரங்களில் சக போட்டியாளர்கள் உங்களுக்கு எதிராக மறைமுகமான சதிகளை செய்வார்கள். இருந்தாலும் அவற்றை முறியடித்து நல்ல லாபங்களை ஈட்டுவீர்கள்.

– Advertisement –
- Advertisement -

பணிபுரிபவர்களுக்கு வேலைபளு அதிகரித்தாலும், சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் எல்லாம் நலமாக முடியும். அரசியல் துறையில் இருப்பவர்கள் எதிரிக்கட்சியினருக்கு பணிந்து செல்ல கூடிய நிலை ஏற்படும். எல்லாவற்றிலும் எச்சரிக்கையாக இருப்பது அவசியமாகும். விவசாய தொழிலில் இருப்பவர்களுக்கு ஓரளவு லாபம் ஏற்படும். கலைத்துறையினர் கிடைக்கின்ற வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். . திருமணம் வயது கொண்ட பெண்களுக்கு நல்ல வரன் அமையும். படிக்கும் மாணவர்கள் கல்வியில் முதலில் சில காலம் சற்று மந்த நிலையை அடைந்தாலும், பிறகு கல்வியில் சிறப்பார்கள்.

2019 கடகம் ராசி பலன்
Kadagam Rasi

பிறரின் மனநிலையை சரியாக கணிக்கும் கடக ராசிகாரர்களுக்கு 2019 ஆம் ஆண்டு நற்பலன்களை அதிகம் தரக்கூடியதாக இருக்கும். வருமானம் அதிகரிக்கும். உங்களுக்கு நீண்ட காலமாக இருந்து வந்த ஆரோக்கிய குறைபாடுகள், நோய்கள் நீங்கும். திருமணம் நடக்காமல் ஏங்கியவர்களுக்கு மனதிற்கேற்ற வாழ்க்கை துணி அமைய பெறுவார்கள். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். உங்கள் பணிகளில் நீங்கள் எதிர்பார்த்த ஊதிய உயர்வு, பணியிட மாற்றம் மற்றும் பதவி உயர்வு ஆகியவை நீங்கள் விரும்பிய படியே கிடைக்கும்.

2019 Kadaga Rasi Palan Video

குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். உங்கள் வீட்டில் நீண்ட நாட்களாக தாமதமான சுபநிகழ்ச்சிகள் சீக்கிரத்திலேயே நடக்கத்தொடங்கும். உறவினர்கள் மத்தியில் உங்களுக்கு செல்வாக்கும், மதிப்பும் ஏற்படும். புதிய வீடு, மனை, வாகனங்களை வாங்குவீர்கள். நீதிமன்றங்களில் உங்களுக்கு எதிராக போடப்பட்டிருந்த சொத்து சம்பந்தமான வழக்குகளில் உங்களுக்கு சாதகமாக தீர்ப்பு அமையும்.

– Advertisement –
- Advertisement -

தொழில், வியாபாரங்களில் உங்களின் மறைமுக எதிரிகள் ஒழிவார்கள். பணியிடங்களில் உங்களுக்கு சக பணியாளர்களின் ஆதரவும், விசுவாசமும் கிடைக்கும். அரசியல் துறையில் இருப்பவர்களுக்கு பதவிகள் கிடைக்கும். விவசாய தொழிலிருப்பவர்களுக்கு விளைபொருட்களுக்கு கேட்ட விலை கிடைக்கும். கடன்கள் அனைத்தையும் அடைத்து முடிப்பீர்கள். பெண்களின் உடல்நிலை சிறப்பாக இருக்கும். புதிய ஆடை மற்றும் ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். உடன்பிறந்தவர்களிடம் இருந்துவந்த கருத்துவேறுபாடுகள், மனஸ்தாபங்கள் நீங்கும்.

2019 சிம்மம் ராசி பலன்
simmam

தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகம் கொண்ட சிம்ம ராசிக்காரர்களுக்கு 2019 ஆம் ஆண்டு சம அளவிலான பலன்கள் ஏற்படும். சுக வாழ்க்கையில் பாதிப்புகளை உண்டாகும். சுப காரிய முயற்சிகள் சற்று தாமதத்திற்கு பிறகு வெற்றியடையும். ஆடம்பர செலவுகள் செய்வதை தவிர்க்க வேண்டும். மற்றவர்களுக்கு பெரிய அளவில் கடன்கள் கொடுக்க கூடாது. தொழில் வியாபாரங்களில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. உடல் ஆரோக்கியம் சிறப்பாகவே இருக்கும்.

2019 Simma Rasi Palan Video

ஒரு சிலருக்கு ஜீரண கோளாறுகள் போன்றவை ஏற்படும். குடும்பத்தில் வயதானவர்களுக்கு ஆரோக்கிய குறைவு ஏற்பட்டு மருத்துவ செலவுகளை செய்ய வேண்டிய சூழல் உண்டாகும். குடும்ப பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாக தான் இருக்கும். குடும்ப பாரம்பரிய சொத்துகள் சிறிது இழுபறிக்கு பின்பு உங்களுக்கான பாகம் வந்து சேரும். அரசு டெண்டர், காண்ட்ராக்ட் தொழில்களில் இருப்பவர்களுக்கு சற்று தாமதங்களுக்கு பிறகு ஒப்பந்தங்கள் கிடைக்கும்.

– Advertisement –
- Advertisement -

புதிய தொழில் வியாபாரங்களில் ஈடுபடுபவர்களுக்கும், அவற்றை விரிவு படுத்த நினைப்பவர்களுக்கும் சிறிது தடங்கல்களுக்கு பின்பு வெற்றி உண்டாகும். தொழிலாளர்கள் மற்றும் பணியாட்களின் முழுமையான ஒத்துழைப்பு கிடைக்கும். வெளிநாடு சென்று பணிபுரியும் யோகமும் சிலருக்கு உண்டாகும். பணியாளர்கள், ஊழியர்களுக்கு மேலதிகாரிகளின் கெடுபிடிகள் அதிகரிக்கும். எதிர்பாரா பணியிடமாற்றங்களும் சிலருக்கு கிடைக்கும். புதிய வேலை தேடுபவர்கள் கிடைக்கின்ற வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்வது நல்லது. பொது வாழ்வில் இருப்பவர்கள் மக்களின் ஆதரவை பெற கடுமையாக உழைக்க வேண்டும்.

2019 கன்னி ராசி பலன்
Kanni Rasi

அனைவரிடமும் இதமாக பழகும் தன்மை கொண்ட கன்னி ராசியினருக்கு 2019 ஆம் ஆண்டில் சில காலம் வரை எல்லாவற்றிலும் மிக கடின முயற்சிகள் மேற்கொண்ட பிறகே வெற்றிபெறக்கூடிய நிலையிருக்கும். உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்படும். திருமணம், புது வீடு போன்ற சுப காரியங்கள் சம்பந்தமான முயற்சிகளில் இழுபறி நிலை இருக்கும். மறைமுக எதிர்ப்புகளை சமாளிக்க கூடிய திறன் உண்டாகும். பயணங்களால் அனுகூலங்கள் உண்டாகும். பொருளாதாரம் ஏற்ற இறக்கமான நிலையிலேயே இருக்கும்.

2019 Kanni Rasi Palan Video

குடும்பத்தில் ஒற்றுமை இருக்கும் ஆனால் உறவினர்களிடையே சுமூக உறவு இருக்காது. தொழில், வியாபாரங்களில் உங்களுக்கு வர வேண்டிய வாய்ப்புகள் வேறு வியாபாரிகளுக்கு செல்ல கூடிய நிலை ஏற்படும். கூட்டாளிகளின் ஆலோசனையை கேட்பது சிறந்தது. அரசாங்க வழியில் ஏதிர்பார்த்த உதவிகள் வந்து சேரும்.

– Advertisement –
- Advertisement -

உங்களுக்கான பதவி உயர்வுகளை பிறர் தட்டி பறிக்க முயல்வார்கள் என்ற போதிலும், உங்களுக்கான பதவி மற்றும் ஊதிய உயர்வுகள் வந்து சேரும். அரசியல்வாதிகள் தங்களின் பதவிகளை காப்பாற்றி கொள்ள கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். விவசாய தொழில் இருப்பவர்களுக்கு சுமாரான லாபம் தான் கிடைக்கும். அவசரப்பட்டு கடன்கள் வாங்குவதை தவிர்க்க வேண்டும். கலைத்தொழிலில் இருப்பவர்கள் தங்களின் சக தொழிலாளர்களுடன் அனுசரித்து செல்வதால் நன்மைகள் ஏற்பட்டும்.

2019 துலாம் ராசி பலன்
Thulam Rasi

கள்ளமில்லா உள்ளம் கொண்ட துலாம் ராசியினருக்கு பிறக்கின்ற 2019 ஆண்டு சிறப்பாகா இருக்கும். இது நாள் வரை இருந்து வந்த அத்தனை பிரச்சனைகளும் தீரும். நின்று போன, தடைபட்ட சுப காரியங்கள் அனைத்தும் நடக்கும். உடல் நிலை நன்றாக இருக்கும். பண வரவுகள் தடையில்லாமல் வந்து கொண்டே இருக்கும். பிரிந்து சென்ற உறவினர்களும் உங்களிடம் வலிய வந்து சொந்தம் கொண்டாடுவார்கள். பல புனித தலங்களுக்கு யாத்திரைகளை மேற்கொள்வீர்கள். தொழில், வியாபாரங்களில் நல்ல லாபம் ஏற்படும். விரும்பிய இடங்களுக்கு பணியிட மாற்றங்கள் கிடைக்கும். குழந்தைகள் இல்லாமல் ஏங்கியவர்களுக்கு குழந்தைகள் பிறக்கும்.

2019 Thulam Rasi Palan Video

பொன், பொருள், ஆபரணங்கள், புதிய ஆடைகள், புதிய வீடு, புதிய வாகனம் என அனைத்து வகையான செல்வ சேர்க்கையும் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களிடையே இருந்த பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும். அவர்களின் அனைத்து விருப்பங்களையும் பூர்த்தி செய்வீர்கள். வாங்கிய கடன்களை எல்லாம் வட்டியுடன் கட்டி தீர்ப்பீர்கள். பணியிடங்களில் உங்களின் திறன்களை வெளிப்படுத்துவதற்கு சூழ்நிலை உருவாகும். சக பணியாளர்களின் ஒத்துழைப்பும் உங்களுக்கு கிடைக்கும். உயரதிகாரிகளின் ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.

– Advertisement –
- Advertisement -

பொது வாழ்வில் இருப்பவர்கள் மக்களின் பாராட்டுகளை பெறுவார்கள். விவசாயத்திற்காக வாங்கிய கடன்களை அடைத்து விடக்கூடிய அளவில் பொருளாதார நிலை உயரும். வெளிநாடுகளுக்கு சென்று பெயரும், புகழும் பெரும் யோகம் கலைஞர்களுக்கு உண்டாகும். பெண்களின் உடல் நிலை நன்றாக இருக்கும். அதோடு ஆபரணம், ஆடை போன்றவற்றின் சேர்க்கை ஏற்படும்.

2019 விருச்சிகம் ராசி பலன்
Virichigam Rasi

மனதில் பட்டதை நேரடியாக பேசும் விருச்சிக ராசிக்காரர்ளை பொறுத்தவரை 2019 ஆண்டில் அவ்வப்போது உடல்நல பாதிப்புகள் ஏற்படக்கூடும். பேச்சிலும், செயலிலும் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. எல்லாவற்றிலும் கடினமாக செயல்பட்டே விரும்பிய பயன்களை பெற முடியும். தொழில், வியாபாரங்களில் நல்ல வாய்ப்புகள் சற்று தாமதமாகவே கிடைக்கும். எவ்வளவு கடிமனமாக உழைத்தாலும் அதற்கேற்ற பலன்களை விரைவில் பெற முடியாது. ஆடம்பர மற்றும் தேவையற்ற செலவுகளை குறைத்து கொள்ள வேண்டும்.

2019 Virichiga Rasi Palan Video

வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் அடிக்கடி ஏற்படும். உற்றார் உறவினர்களின் ஆதரவு ஓரளவிற்கு இருக்கும். புதிய வீடு, நிலம் வாங்குவதில் இருக்கும் பிரச்சனைகள் தீரும். பிறருக்கு கொடுத்த கடன்கள் சற்று இழுபறிக்கு பின்பே வசூலாகும். தொழில், வியாபாரங்களை பொறுத்தவரை ஆண்டின் தொடக்க மாதங்களில் ஏற்ற இறக்கமான பலன்களையே பெறுவீர்கள். சக போட்டியாளர்களின் சவால்களை எதிர்கொண்டு கடுமையாக உழைத்து வெற்றி காண்பீர்கள். உங்கள் வியாபார ரீதியன பயணங்கள் வெற்றியை தரும்.

– Advertisement –
- Advertisement -

உத்தியோகங்களில் ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வு தாமதமாகி பின்பு கிடைக்கும். பொது வாழ்வில் இருப்பவர்கள் தாங்கள் பேசும் போது கவமுடன் பேசுவதால் சர்ச்சைகளில் சிக்கி கொள்வதை தவிர்க்கலாம். விவசாயிகளுக்கு தொடக்கத்தில் சிறிது பொருளாதார நெருக்கடிகள் ஏற்பட்டாலும் பின்வரும் காலங்களில் நல்ல லாபங்கள் பெறுவார்கள். மாணவர்கள் மனதை அலைபாயவிடாமல் கல்வியில் மட்டும் கவனம் செலுத்தினால் கல்வியில் சிறக்க முடியும்.

2019 தனுசு ராசி பலன்
Dhanusu Rasi

பிறருக்கு உதவி புரியும் நல்ல மனதை கொண்ட தனுசு ராசிக்கார்களை பொறுத்தவரை 2019 ஆம் ஆண்டில் தொடக்கத்தில் சில தேவையற்ற அலைச்சல்களால் உடல் நலம் பாதிக்கப்படும். எல்லாவற்றிலும் நிதானமாக சிந்தித்து செயல்படுவது உங்களுக்கு மிகுந்த நன்மையை ஏற்படுத்தும். உங்களுக்கு இது நாள் வரை இருந்து வந்த மறைமுக எதிர்ப்புகள் மறையும். தொலை தூர பயணங்களால் ஓரளவிற்கு அனுகூலங்கள் இருக்கும். பதவி உயர்வுகள் சிறிது தடை தாமதங்களுக்கு பிறகு கிடைக்கும்.


2019 Dhanusu Rasi Palan Video

உடல் நலக் குறைவுகள் அடிக்கடி ஏற்பட்டு நீங்கும். குடும்பத்தில் ஒருவருக்கொருவர் உறுதுனையாக இருப்பார்கள். உறவினர்களின் வருகையால் உங்களுக்கு சற்று நிம்மதி ஏற்படும். காண்ட்ராக்ட் தொழிலில் இருப்பவர்களுக்கு ஆண்டின் தொடக்கத்தில் பொருள்வரவு குறைந்தாலும் பின் வரும் காலங்களில் நல்ல தனவரவு உண்டாகும். தொழில், வியாபாரங்களில் நல்ல லாபங்கள் கிடைக்கும்.

– Advertisement –
- Advertisement -

உத்தியோகிஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியும் திருப்தியான நிலையும் ஏற்படும். உயரதிகாரிகளின் நன்மதிப்பிற்கு ஆளாவீர்கள். அரசியல்வாதிகள் பொது மக்களின் ஆதரவை பெற கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். விவசாயிகளுக்கு அரசு வழியில் எதிர்பார்த்த பயிர் மானியங்கள் கிடைக்கும். கலைஞர்கள் கிடைக்கின்ற வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். பணிபுரியும் பெண்களுக்கு வேலை பளு சற்று அதிகரிக்கும். மாணவர்கள் தீய சிந்தனைகள் மற்றும் செயல்களை தவிர்த்து கல்வியில் கவனம் செலுத்துவது அவசியமாகும்.

2019 மகரம் ராசி பலன்
Magaram rasi

பிறருடன் அன்புடன் பழகும் மகர ராசிக்காரர்களை பொறுத்தவரை 2019 ஆண்டில் பொருளாதார நெருக்கடி நிலை நீங்கும். இவ்வளவு நாட்கள் தடைபட்டு வந்த சுபகாரியங்கள் அனைத்தும் ஒவ்வொன்றாக நிறைவேறும். உங்களின் பூர்வீக சொத்துகளிலிருந்த பிரச்சனைகள் அனைத்தும் விலகும். பிரிந்து சென்ற உறவினர்களும் தேடிவந்து சொந்தம் கொண்டாடுவார்கள். வெளிநாடுகள் செல்வது சம்பந்தமான முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். தொழில் வியாபாரங்களில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்த வேண்டும்.

2019 Magara Rasi Palan Video

குடும்பத்தில் மகிழ்ச்சியும், தன்னிறைவு ஏற்படும். உறவினர்கள் உங்களிடம் உதவி கேட்டு வந்து நிற்பார்கள். உங்களின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்து கொள்வீர்கள். வாங்கிய கடன்கள் அனைத்தையும் வட்டியுடன் அடைத்துவிடக்கூடிய சூழல் உண்டாகும். வேலைவாய்ப்பு தேடி அலைந்தவர்களுக்கு அவர்களின் தகுதிக்கேற்ற வேலை கிடைக்கும். ஊழியர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த பதவி உயர்வுகளும், ஊதிய உயர்வுகளும் கிடைக்கும்.

– Advertisement –
- Advertisement -

பணியில் இருப்பவர்களுக்கு புதிய இடங்களுக்கு பணிமாறுதல்கள் கிடைப்பதால் உங்களுக்கு பல அனுகூலங்கள் ஏற்படும். உயரதிகாரிகளின் நன்மதிப்பை பெறுவீர்கள். பொது வாழ்வில் இருப்பவர்கள் மக்கள் பாராட்டை பெறக்கூடிய காரியங்களை செய்வீர்கள். விவசாயிகளுக்கு விளைச்சல் சிறப்பாக அமையும். புதிய நிலங்கள் வாங்கி அதிலும் விவசாயம் செய்து லாபத்தை அடைவீர்கள். பெண்களுக்கு உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். குழந்தை இல்லாமல் ஏங்கிய பெண்களுக்கு குழந்தைகள் பிறக்கும். மாணவ மாணவியரின் கல்வி நிலை உயரும்.

2019 கும்பம் ராசி பலன்
Kumbam Rasi

திடமான மன உறுதி கொண்ட கும்ப ராசிக்காரர்களை பொறுத்தவரை 2019 ஆண்டின் தொடக்க மாதங்களில் சிறிது சங்கடங்கள் இருந்தாலும் பின்வரும் காலங்களில் அனைத்தும் நன்மையாக முடியும். குடும்பத்தின் தேவைகளை ஓரளவிற்கு பூர்த்தி செய்ய முடியும். பிறரை நம்பி பெரிய அளவிலான தொகைகளை கடனாக தருவதை தவிர்ப்பது நல்லது. உங்களுக்கு இருந்து வந்த மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். நீதிமன்ற வழக்குகள் உங்களுக்கு சாதகமாக அமையும். வீட்டில் சுப காரியங்களுகான செலவுகள் அதிகரிக்கும். உடல் நலத்தில் பாதிப்புகள் ஏற்பட்டு நீங்கும்.

2019 Kumba Rasi Palan Video

குடும்ப உறுப்பினர்களிடம் ஒற்றுமை மேலோங்கும் உணவு விடயங்களில் கட்டுப்பாட்டை கடைபிடிக்க வேண்டும். வீண் செலவுகளை தவிர்ப்பது நல்லது. கடுமையாக உழைத்து உங்களுக்கான செல்வத்தை ஈட்டுவீர்கள். தொழில் வியாபாரங்களில் போட்டியாளர்களாலும், அரசாங்கத்தாலும் பல நெருக்கடிகளை சந்தித்தாலும் அனைத்தையும் சமாளித்து வெற்றி வாகை சூடுவீர்கள். தொலைதூர பயணங்களால் லாபங்கள் உண்டாகும்.

– Advertisement –
- Advertisement -

உத்தியோகிஸ்தர்கள் கடுமையாக உழைத்தாலும் அதற்கான பலனை உடனே பெற முடியாது. அரசியலில் இருப்பவர்களுக்கு 2019 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாத காலம் சோதனையான காலகட்டமாகவே இருக்கும். விவசாயிகளுக்கு விளைபொருட்களுக்கான லாபம் ஓரளவுக்கே கிடைக்கும். கலைஞர்கள் கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டாள் பொருளாதார சிக்கலின்றி வாழலாம். பெண்களுக்கு உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். உறவினர்களிடம் விட்டு கொடுத்து செல்வது நல்லது.

2019 மீனம் ராசி பலன்
Meenam Rasi

அனைத்திலும் சிறந்த ஞானம் கொண்ட மீன ராசிக்காரர்களை பொறுத்தவரை 2019 ஆம் ஆண்டு சிறப்பாகவே இருக்கும். இதுவரை பட்ட கஷ்டங்கள் அனைத்தும் தீரும். உங்களை விட்டு விலகி சென்றவர்களும் உங்களிடம் வலிய வந்து நட்பு பாராட்டும் நிலையை உண்டாகும். உத்தியோகிஸ்தர்களுக்கு விரும்பிய பணியிட மாறுதல்கள் கிடைக்கும். ஒரு சிலருக்கு பதவி உயர்வுகளும் உண்டாகும். திருமணம் போன்ற சுப காரியங்கள் கைகூடும். பிள்ளையில்லாதவர்களுக்கு பிள்ளைகள் பிறக்கும். நீங்கள் எதிர்பாரா உதவிகள் உங்களுக்கு தக்க சமயத்தில் கிடைக்கும்.

2019 Meena Rasi Palan Video

நீண்ட நாட்களாக நோய்களால் பாதிக்கப்பட்டவர்களின் நோய்கள் நீங்கும். அசையா சொத்துக்களை வாங்கும் யோகம் உண்டாகும். வாங்கிய கடன்கள் அனைத்தையும் கட்டி முடிப்பீர்கள். குடும்பத்தினர் விரும்பிய பொருட்கள் அனைத்தையும் வாங்கி தருவீர்கள். தொழில், வியாபாரங்களில் கடும் போட்டி நிலவினாலும் உங்களுக்குண்டான லாபத்தில் எந்த ஒரு பங்கமும் ஏற்படாது.

– Advertisement –
- Advertisement -

பணியிடங்களில் உங்களின் திறமைகளை வெளிப்படுத்தி பதவி உயர்வையும் ஊதிய உயர்வையும் பெறுவீர்கள். வேலை தேடி அலைந்தவர்களுக்கு அவர்கள் விரும்பிய பணியே கிடைக்கும். பொது வாழ்வில் உள்ளவர்களுக்கு அவர்களின் சிறந்த செயல்பாடுகளால் கட்சிகளில் உயர்ந்த பதவிகள் கிடைக்கும்.
விவசாயிகளுக்கு விளைச்சல் அமோகமாக இருக்கும். அதோடு அரசு வழியில் கடன் உதவிகளும் கிடைக்கும். கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிட்டும். மாணவ மாணவியர் கல்வியில் ஆர்வமுடன் படித்து சிறந்த மதிப்பெண்களை பெறுவார்கள்.

English Overview:
2019 New year Rasi Palan:
Here he have 2019 New year Rasi Palan in Tamil or new year rasi palangal in Tamil. It is also called as 2019 puthandu palangal in Tamil or 2019 puthandu rasi palangal. Here we have 2019 Rasi Palan for all Rasi in Tamil language. This is the perfect prediction and it contains pariharam too.

2019 Rasi Palan is good for all most all the Rasi but there are some problems for some Rasi. We have given the complete remedies for all those Rasi. Just read our 2019 Rasi palan prediction in Tamil and get complete satisfaction. You can always share your views about our 2019 rasi palan in the comment section.