அட, கையை மேலே தூக்கி வைத்திருக்கும் குபேர சிலை உங்கள் வீட்டில் இருக்கா? முதல்ல அந்த சிலையை எடுத்து, இந்த இடத்தில வையுங்க! நம்ப முடியாத அதிசயங்கள் கண்முன்னே நடக்கும்.

இப்போது பெரும்பாலும் எல்லோரது வீட்டிலும் குபேரரது சிலையை வைத்து வழிபாடு செய்கிறார்கள். சிலர் வீட்டில் அதை வழிபாடு செய்யாமல், ஷோ கேசில் வைத்துக் கொள்கிறார்கள். எப்படி வைத்தாலும் தவறில்லை. குபேரர் இருக்கும் இடத்தில், அதிர்ஷ்டம் நிறைந்திருக்கும் என்பது மட்டும் உண்மையான ஒரு விஷயம் தான். ஆனால், சரியான முறையில் நம்முடைய வீட்டில் குபேர சிலையை எப்படி வைக்க வேண்டும்? எந்த இடத்தில் வைக்க வேண்டும்? எந்த உருவத்தில் இருக்கும் குபேரர் சிலை எந்த இடத்தில் வைத்தால் நமக்கு அதிர்ஷ்டம் கொட்டும், என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

guberar

குபேரர சிலைகளில் கையை மேலே உயர்த்தி கொண்டு நிற்பதுபோல குபேரன் சிலை இருக்கின்றது. பெரிய தொப்பையை வைத்துக்கொண்டு காசு பையை மாட்டிக்கொண்டு அமர்ந்திருக்கும் குபேரன் சிலை இருக்கின்றது. குபேர உருவப்படங்கள் இருக்கின்றது. இப்படியாக வெவ்வேறு வடிவத்தில் குபேரனின் சிலையை வடிவமைத்து வைத்துள்ளார்கள். இதில் எந்தக் குபேரரை உங்கள் வீட்டில் வைத்துக் கொண்டாலும் நமக்கு அதிர்ஷ்டம் தான். அதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

குறிப்பாக உங்களுடைய வீட்டில் கையை மேலே உயர்த்தி வைத்திருக்கும் குபேரன் சிலை இருந்தால், அதை இரண்டு சிலைகளாக வைத்துக் கொள்வது நம்முடைய வீட்டிற்கு ரொம்ப நல்லதுங்க! இந்த கையை மேலே உயர்த்தி வைத்திருக்கும் குபேரர் சிலையை உங்களுடைய வீட்டு வாசலை பார்த்தவாறு வைக்க வேண்டும். அதாவது, நீங்கள் வீட்டில் நுழையும் போது, சிரித்துக் கொண்டே கையை மேலே உயர்த்தி வைத்திருக்கும் அந்த குபேரன் சிலை உங்கள் கண்களில் பட வேண்டும்.

guberar2

மேலே கையை உயர்த்தி வைத்து இருக்கிறார் அல்லவா? அந்த குபேரரின், இரண்டு கைகளிலும் ஒரு ரூபாய் நாணயத்தை வைத்து விடுங்கள். இரண்டு கைகளிலும் இரண்டும் ஒரு ரூபாய் நாணயங்கள். கீழே விழாமல் அந்த நாணயம் இருக்க வேண்டும் என்றால், ஒரு செல்லோ டேப்பை வைத்து அந்த நாணயத்தை ஒட்டிக் கொள்ளலாம். தவறொன்றும் கிடையாது. ஆனால் கட்டாயம் அந்த குபேரரின் கையில் நாணயம் இருக்க வேண்டும்.

- Advertisement -

ஒவ்வொரு முறை நீங்கள் வெளியில் சென்று விட்டு, வீட்டுக்குள் நுழையும் போதும் இந்த குபேரன் சிலை உங்களுடைய கண்களில் படும். உங்களது மனது நிறைவடையும். நிச்சயம் உங்கள் வீட்டிற்கு அதிர்ஷ்டமும் வரும். உங்களுடைய மனசிலும் நேர்மறை ஆற்றல் நிறைந்திருக்கும். உங்களுடைய வீட்டு வாசல் தெற்குப்பக்கம் பார்த்தவாறு இருந்தால் மட்டும், கைகளை மேலே உயர்த்தி இருக்கும் குபேரர் சிலையை வாசலை பார்த்தவாறு வைப்பதற்கு முன்பாக, மற்றொரு குபேரரின் திருவுருவப்படத்தை கிழக்கு பார்த்தவாறு மாட்டிக்கொள்ள வேண்டும் என்பது கவனிக்கப்பட வேண்டிய விஷயம்.

guberar3

உங்களுடைய வீட்டு பீரோவில் பணம் வைக்கும் இடத்தில், ஒரு குட்டி குபேரரது சிலையை, அதாவது அவர் பண மூட்டையை சுமந்து கொண்டு செல்லும் வடிவத்தில் இருக்கும் சிலையை, பீரோவிற்கு உள்பக்கம் பார்த்தவாறு, அதாவது அவர் பணத்தை எடுத்துக்கொண்டு பீருக்கு உள்ளே செல்கின்ற மார்க்கத்தில் வைத்தால், நமக்கு பண வரவு அதிகரிக்கும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

cash-rain

இது எல்லாமே சின்ன சின்ன டிப்ஸ் தான். முயற்சி செய்து பாருங்கள். பணவரவில் உங்களுக்கு மாற்றம் தெரிந்தால், மேலே கொடுக்கப்பட்டுள்ள திசையின் படி இந்த சிலைகளை வைத்து கொள்ளலாம். உங்களுக்கு அதிர்ஷ்டம் வரவில்லை என்று தோன்றினால், உங்கள் விருப்பப்படி மாற்றி வைத்துக்கொள்ளலாம். பிரச்சினைகள் எதுவும் இல்லை. நம்பிக்கையோடு உங்களுடைய வீட்டில் இந்த மாற்றங்களை கொண்டு வந்து பாருங்கள். உங்களுக்கான அதிர்ஷ்டம், நிச்சயம் உங்களைத் தேடி வரும் என்ற நம்பிக்கையோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
பெரும் செல்வந்தர்களிடம் தொடர்ந்து பணம் சேர இவைகள் தான் காரணமாம்! இது அவர்களுடைய நம்பிக்கையாம்! அவை என்னவென்று நாமும் தெரிந்து கொள்வோமா?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.