செல்வத்தை தன்வசம் ஈர்க்கும் இந்த வாஸ்து பொருட்கள் உங்கள் வீட்டில் இல்லையா!

ஒருவரது வீட்டில் செல்வவளம் உயர்ந்துகொண்டே செல்கிறது என்றால் நிச்சயமாக அதற்கு ஒரு காரணம் இருக்கும். ஒருவரது வீட்டில் செல்வ வளம் குறைந்து கொண்டே செல்கிறது என்றால் நிச்சயமாக அதற்கும் ஒரு காரணம் இருக்கும். இதை சற்று ஆழமாகப் பார்த்தால், ஒரு குடும்பத்தில் ஒன்றுக்கு மேற்பட்டோர் இருப்பார்கள். ஒருவரது ராசி, ஜாதக கட்டம் யோகமாக இருக்கும். ஒருவரது ராசி, ஜாதக கட்டம் சற்று பிரச்சினையாக இருக்கலாம். இப்படிப்பட்டவர்களது வீட்டில், அதிர்ஷ்டம் மேலோங்கி இயிருக்குமா? துரதிர்ஷ்டம் மேலோங்கி இருக்குமா? யோசித்தால் பதில் சொல்வது கொஞ்சம் கடினமாக தான் இருக்கும். அதாவது அதிர்ஷ்டமானது உச்சக்கட்டத்தில் இருந்தால், துரதிருஷ்டம் வெளியேறிவிடும் விடும். துரதிருஷ்டமானது உச்சகட்டத்தில் இருந்தால் அதிர்ஷ்டத்தை வெளியேற்றிவிடும். எது எப்படியாக இருந்தாலும் கெட்ட காலத்திலும், துரதிஷ்டம் நம்மோடு ஒட்டிக் கொள்ளக் கூடாது. அதுதான் நமக்கு தேவை. அதற்கு வாஸ்துப்படி சில பொருட்களை நமக்கு பாதுகாப்பாக நம் வீட்டில் வைத்து கொள்வதே புத்திசாலித்தனம். உங்களது வீட்டில் அதிர்ஷ்டம் நிலைத்து இருக்க எந்தெந்த வாஸ்து பொருட்களை வாங்கி, எப்படி வைத்துக் கொள்ளலாம் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

vastu

முதலாவதாக அதிகமாக பணம் சேர்த்துக் கொண்டே இருக்கும் வடமாநிலத்தவர்கள் பின்பற்றும் இந்த முறையைப் பற்றி பார்த்துவிடலாம். மண்ணால் செய்யப்பட்ட சிறிய அளவு பானையை வாங்கி வடக்கு மூலையில் வைத்து அதில் முழுவதும் தண்ணீரை நிரப்பி, வைத்து விடவேண்டும். நம் ஊரில் மண்பானை தான் கிடைக்கும். உங்களுக்கு ‘சுராஹி’ எனப்படும் மண்பானை கிடைத்தால் அதை வாங்கி வைப்பது இன்னும் சிறப்பானது. வடமாநிலத்தவர்கள் இந்த சுராஹியை தங்களது வீட்டில் பயன்படுத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்தப் பானையை வடக்கு மூலையில் வைத்துவிட்டால், தினம்தோறும் மறக்காமல் தண்ணீரை புதியதாக மாற்றிக்கொண்டே இருப்பது முக்கியம்.

அடுத்ததாக நம் வீட்டின் கூடத்தில், அதாவது வரவேற்பறை, ஹால் எப்படி வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். நம் வீட்டுக் கூடத்தில் செம்பினாலோ அல்லது பித்தளையால் செய்யப்பட்ட ‘பிரமிட்’ வைப்பது நல்ல பலனைத் தரும். வீட்டில் இருப்பவரது கெட்ட நேரத்தை கூட, இது நல்ல நேரமாக மாற்றும் சக்தி கொண்டது. வீட்டில் இருக்கும் வாஸ்து தோஷங்களையும் நீக்க கூடிய வல்லமை கொண்டது தான் இந்த பொருள். இந்தப் பிரமிடை வாங்கி உங்கள் வீட்டில் வைத்து தான் பாருங்களேன்! கண்டிப்பாக நல்ல மாற்றத்தை உணர முடியும்.

panjamuga anjaneyar

ஏதாவது ஒரு உலோகத்தில் வடிவமைக்கப்பட்ட பஞ்சமுக ஆஞ்சநேயர் சிலையை வாங்கி உங்களது வீட்டின் தென்மேற்கு மூலையில் வைப்பது நல்ல பலனைத் தரும். பணத்திற்கு எந்த ஒரு தட்டுப்பாடும் வராது. வீண் விரையம் ஆகாது. வீட்டில் எந்த ஒரு கெட்ட சக்தியும் வந்து தங்கி, பணவரவை தடுக்கவும் முடியாது.

- Advertisement -

உங்கள் வீட்டின் நில வாசல் கதவில், லட்சுமி படமோ, குபேரர் படமோ, அல்லது ஸ்வஸ்திக் சின்னமோ நிச்சயமாக இருக்க வேண்டும். இவை மூன்றும் சேர்ந்த படி ஒரு படம் இருந்தால் அது இன்னும் சிறப்பு. லட்சுமி படம், குபேரர் படம் வீட்டிற்கு உள்ளே வருவது போல் இருக்கவேண்டும். சுவஸ்திக் சின்னம் வீட்டின் வெளி பகுதியில் இருப்பது தவறில்லை. வீட்டில் இருக்கும் செல்வத்தை அனாவசியமாக வெளியே அனுப்பாமல் தடுக்கும் சக்தி இந்தப் தெய்வப் படங்களுக்கு கண்டிப்பாக உள்ளது. விருப்பம் உள்ளவர்கள் ஒரு சிறிய ஆமை பொம்மையையும் நம் வீட்டில் வாங்கி வைத்துக் கொள்ளலாம். இதுவும் ஒரு அதிர்ஷ்டத்தை அள்ளித் தரக்கூடிய பொருளாகத்தான் வாஸ்துவில் கூறப்பட்டுள்ளது. வாஸ்து பகவானின் திருவுருவப் படத்தை வாங்கி வீட்டில் மாட்டி வைப்பது நல்ல பலனைத் தரும்.

இது ஒரு முக்கியமான குறிப்பு. சில பேரது மாடிப்படி கீழ் பகுதியில் வெற்றிடம் இருக்கும். அந்த இடம் யார் கண்ணுக்கும் தெரியாமல் இருப்பதால், வீட்டில் தேவையற்ற பொருட்கள் அல்லது செருப்பு துடைப்பம் இப்படிப்பட்ட பொருட்களை அந்த இடத்தில் போட்டு குப்பைகளை சேர்த்து வைத்திருப்பார்கள். ஆனால் இது வீட்டிற்கு தரித்திரத்தை தேடித் தரக் கூடிய முதல் விஷயமாக வாஸ்துவில் கூறப்பட்டுள்ளது. முடிந்தவரை படியின் கீழ்ப்பக்கம் சுத்தமாக வைத்துக் கொள்வது நல்ல பலனைத் தரும்.

வாஸ்துப்படி சமையலறையில் வைக்கப்பட்டிருக்கும் அடுப்பு, வடக்குப் பக்கம் பார்த்தவாறு இருக்கக் கூடாது. வீட்டில் இருக்கும் செல்வத்தை தங்க விடாமல் தடுக்க இதுவும் ஒரு முக்கியமான காரணம் தான். உங்களது வீட்டில் இருக்கும் கடுமையான பிரச்சனைகளை சுலபமாக தீர்க்க வேண்டும் என்றால் இந்த சின்ன சின்ன விஷயங்களை பின்பற்றினாலே போதும் என்பது குறிப்பிடத்தக்கது. அதிகமாகப் பணம் கொடுத்து வாஸ்து நிபுணர்கள் கூறினால்தான் வாஸ்துசாஸ்திரம் என்பது அர்த்தமில்லை. சில நல்ல தகவல்களை யார் கூறினாலும் முயற்சி செய்து பார்ப்பதில் தவறில்லை. நம்பிக்கையுள்ளவர்கள் பின்பற்றித்தான் பாருங்களேன்!

இதையும் படிக்கலாமே
உங்களுக்கு பொருளாதார லாபங்களை தரக்கூடிய வாஸ்து குறிப்புக்கள் இதோ

இது போன்ற ஜோதிடம் சார்ந்த பல தகவல்களை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Vastu for home. Vastu tips for home Tamil. Vastu kurippugal Tamil. Veedu vastu Tamil.