வத்தக்குழம்பு செய்வது எப்படி என்று பார்ப்போம்

vathakuzhambu
- Advertisement -

சீக்கிரமாகவும், எளிமையாகவும் மற்றும் விரைவாகவும் தயாராகும் வத்தக்குழம்பு பற்றி இந்த பதிவில் காண்போம் வாருங்கள். வத்தக்குழம்பு அனைவரும் விரும்பி உண்ணும் ஒரு குழம்பு வகை. தினசரி வீட்டில் சமைக்கவில்லை என்றாலும் அவ்வப்போது நாம் இதை சுவைக்க தவறுவதில்லை.

vathakuzhambu 1

வத்தக்குழம்பு செய்ய தேவையான பொருட்கள்:

- Advertisement -

சுண்டக்காய் – 1/4 கப்
மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன்
சீரகத்தூள் – 2 டீஸ்பூன்
மல்லித்தூள் – 1/2 டீஸ்பூன்
கருவேப்பிலை – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
உளுந்தம் பருப்பு – 1/2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 2
கடுகு – 1/4 டீஸ்பூன்
வெந்தயம் – 1/4 டீஸ்பூன்
சின்ன வெங்காயம் – 12
புளித்தண்ணீர் – சிறிதளவு
பூண்டு – 6 பல்

வத்தக்குழம்பு செய்முறை:

முதலில் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, வெந்தயம், உளுந்தம் பருப்பு, காய்ந்த மிளகாய் மற்றும் நசுக்கிய பூண்டு சேர்த்து மேலாக வறுக்கவும். பிறகு அதனுடன் முழு சின்ன வெங்காயத்தை சேர்த்து 2 நிமிடம் வரை வதக்கவும்.

- Advertisement -

vathakuzhambu 2

பிறகு, அதனுடன் சுண்டைக்காய் சேர்த்து கலந்து பிறகு அதனுடன் நாம் வைத்திருக்கும் மசாலாவினை ஒன்றன்பின் ஒன்றாக சேர்க்கவும். பிறகு கருவேப்பிலை மற்றும் புளிக்கரைசல் சேர்த்து தண்ணீர் ஊற்றி அதனுடன் உப்பு போட்டு மிதமான கொதிக்க விடவும்.

வத்தக்குழம்பு 10 நிமிடம் வரை நன்றாக கொதித்தால் தான் அது நன்றாக கெட்டியாகி எண்ணெய் தளர்ந்து சாப்பிடும் பதத்திற்கு வரும். 10 நிமிடம் கொதித்த பிறகு அடுப்பில் இருந்து இறக்கினால் சுவையான வத்தக்குழம்பு தயார்.

- Advertisement -

vathakuzhambu 3

சமைக்க ஆகும் நேரம் – 15 நிமிடம்
சாப்பிடும் நபர்களின் எண்ணிக்கை – 3

இதையும் படிக்கலாமே:
சப்பாத்தி டால் செய்வது எப்படி என்று பார்ப்போம்

இது போன்ற மேலும் பல சமையல் குறிப்புக்கள், ஆன்மீக தகவல்கள் என பலவற்றை அறிய எங்களோடு இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Vaththakuzhambu recipe in Tamil. It is also called as Vaththakuzhambu seimurai or Vaththakuzhambu seivathu eppadi in Tamil.

- Advertisement -