உங்கள் குழந்தைகளுக்கு சூட்டக்கூடிய சிவனின் 1000 தமிழ் பெயர்கள்

sivan

தமிழர்களின் முழுமுதல் தெய்வமான சிவபெருமானுக்கு எண்ணற்ற பெயர்கள் இருக்கின்றன. அவற்றில் சிவனுக்குரிய 1000 பெயர்களை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

nanda-sivan-viratham

சிவன் பெயர்கள்
1 அடைக்கலம் காத்தான், 2. அடைவார்க்கமுதன், 3. அடைவோர்க்கினியன், 4. ஆடலரசன், 5. ஆடலழகன், 6. அடலேற்றன், 7. ஆடல்வல்லான், 8. அடல்விடைப்பாகன், 9. அடல்விடையான், 10. அடங்கக்கொள்வான், 11. அடர்ச்சடையன், 12 ஆடற்கோ, 13. அதலாடையன், 14. ஆதி, 15. ஆதிபகவன், 16. ஆதிபுராணன், 17. ஆதிரையன், 18. அதிர்துடியன், 19. அதிருங்கழலோன், 20. ஆதியண்ணல், 21. அடிகள், 22. அடியார்க்கினியான், 23. அடியார்க்குநல்லான், 24. ஆடும்நாதன், 25. ஆகமபோதன், 26. ஆகமமானோன், 27. ஆகமநாதன், 28. ஐம்முகன், 29 ஐந்தாடி, 30. ஐந்துகந்தான், 31. ஐந்நிறத்தண்ணல், 32 *ஐந்தலையரவன், 33 ஐந்தொழிலோன், 34. ஐவண்ணன், 35.  ஐயமேற்பான், 36. ஐயன், 37. ஐயர், 38. ஐயாறணிந்தான், 39. ஐயாற்றண்ணல், 40. ஐயாற்றரசு, 41.அகண்டன், 42. அகிலங்கடந்தான், 43. அளகையன்றோழன், 44. ஆலகண்டன், 45. ஆலாலமுண்டான், 46. ஆலமர்செல்வன், 47. ஆலமர்தேன், 48. ஆலமர்பிரான், 49. ஆலமிடற்றான், 50. ஆலமுண்டான், 51 ஆலன், 52. ஆலநீழலான், 53. ஆலந்துறைநாதன், 54. அளப்பரியான், 55. ஆலறமுறைத்தோன், 56. ஆலவாய்ஆதி, 57. ஆலவாயண்ணல், 58.அளவிலான், 59. அளவிலி, 60. ஆலவில்பெம்மான், 61. அளியான், 62. ஆல்நிழற்கடவுள், 63. ஆல்நிழற்குரவன், 64. ஆலுறைஆதி, 65. அமைவு, 66. ஆமையணிந்தன், 67. ஆமையாரன், 68. ஆமையோட்டினன், 69. அமலன், 70. அமரர்கோ, 71. அமரர்கோன், 72. அம்பலக்கூத்தன், 73. அம்பலத்தீசன், 74. அம்பலவான், 75. அம்பலவாணன், 76 அம்மை, 77. அம்மான், 78. அமுதன், 79. அமுதீவள்ளல், 80. ஆனையார், 81. ஆனையுரியன், 82. அனகன், 83. அனலாடி, 84. அனலேந்தி, 85. அனலுருவன், 86. அனல்விழியன், 87. ஆனந்தக்கூத்தன், 88. ஆனந்தன், 89. அணங்கன், 90. அணங்குறைபங்கன், 91. அனற்சடையன், 92. அனற்கையன், 93. அனற்றூண், 94. அனாதி, 95. ஆனாய், 96. அன்பன், 97. அன்பர்க்கன்பன், 98. அன்புடையான், 99. அன்புசிவம், 100. ஆண்டகை, 101. அண்டமூர்த்தி, 102. அண்டன், 103. ஆண்டான், 104. ஆண்டவன், 105 அண்டவாணன், 106. அந்தமில்லாரியன், 107. அந்திவண்ணன், 108. அனேகன்/அநேகன், 109. அங்கணன், 110. ஆணிப் பொன், 111. அணியன், 112. அண்ணா, 113. அன்னை, 114. அண்ணாமலை, 115. அன்னம்காணான், 116. அண்ணல், 117. அந்தமில்லான், 118. அந்தமில்லி, 119. அந்தணன், 120. அந்திரன், 121. அணு, 122. அஞ்சடையன், 123. அஞ்சாடியப்பன், 124. அஞ்சைக்களத்தப்பன், 125. அஞ்சையப்பன், 126. அஞ்செழுத்தன், 127. அஞ்செழுத்து, 128. அப்பனார், 129. ஆராஅமுது, 130. ஆறாதாரநிலயன், 131. அறையணியப்பன், 132. அறக்கண், 133. அறக்கொடியோன், 134. அரன், 135. ஆரணன், 136. அறநெறி, 137. ஆறணிவோன், 138. ஆரரவன், 139. அரசு,140. அரத்துறைநாதன், 141. அரவசைத்தான், 142. அரவாடி, 143. ஆராவமுதன், 144. அறவன், 145. அரவணியன், 146. அரவஞ்சூடி, 147. அரவரையன், 148. அரவார்செவியன், 149 அரவத்தோள்வளையன், 150. அறவாழிஅந்தணன், 151. அரவேந்தி, 152. அறவிடையான், 153 ஆரழகன், 154. அர்ச்சிதன், 155. ஆர்சடையன், 156. ஆறேறுச்சடையன், 157. ஆறேறுச்சென்னியன், 158. அரிக்குமரியான், 159. அரிவைபங்கன், 160. அறிவன், 161 அறிவு, 162. அறிவுக்கரியோன், 163. அரியஅரியோன், 164. அறியஅரியோன், 165. ஆரியன், 166. அரியான், 167. அரியசிவம், 168. அரியவர், 169. அரியயற்க்கரியன், 170. அரியோருகூறன், 171. அற்புதக்கூத்தன், 172. அற்புதன், 173. அரு, 174. அருள், 175. அருளாளன், 176. அருளண்ணல்,177. அருள்சோதி, 178 அருளிறை, 179. அருள்வள்ளல், 180. அருள்வள்ளல்நாதன், 181. அருள்வல்லான், 182 அறுமலருறைவான், 183. அருமணி, 184. அரும்பொருள், 185. அருண்மலை, 186. அருந்துணை, 187. ஆரூரன், 188. ஆறூர்ச்சடையன், 189. ஆறூர்முடியன், 190. அருட்கூத்தன், 191. அருட்செல்வன், 192. அருட்சுடர், 193. அருத்தன், 194. அருட்பெருஞ்சோதி, 195. அருட்பிழம்பு, 196. அருவன், 197. அருவுருவன், 198. ஆர்வன், 199. அதிகுணன், 200. ஆதிமூர்த்தி.

201 ஆதிநாதன், 202 ஆதிபிரான், 203 அதிசயன், 204 அத்தன், 205 ஆத்தன், 206 ஆத்திச்சூடி, 207. ஆட்கொண்டான், 208. ஆட்டுகப்பான், 209. அட்டமூர்த்தி, 210. அவனிமுழுதுடையான், 211. அவிநாசி, 212. அவிநாசியப்பன், 213. அவிர்ச்சடையன், 214. அயவந்திநாதன், 215. அயிற்சூலன், 216. ஆயிழையன்பன், 217. அழகுகாதலன், 218. அழகன், 219. அழல்வண்ணன், 220. அழலார்ச்சடையன், 221 அழல்மேனி, 222. அழற்கண்ணன், 223. அழற்குறி, 224. ஆழிசெய்தோன், 225. ஆழி ஈந்தான், 226. ஆழிவள்ளல், 227. அழிவிலான், 228. ஆழியான், 229. ஆழியர்,
230. ஆழியருள்ந்தான், 231. பாகம்பெண்ணன், 232 பாகம்பெண்கொண்டோன், 233. பூதப்படையன், 234. பூதவணிநாதன், 235. புவன், 236. புவனங்கடந்தொளி, 237. சடைமுடியன், 238. சடையன், 239. சடையாண்டி, 240. சடையப்பன், 241. சலமணிவான், 242. சலமார்சடையன், 243. சலந்தலையான், 244. சலஞ்சடையான், 245. சலஞ்சூடி, 246. சந்தவெண்பொடியன், 247. சங்கார்தோடன், 248. சங்கருள்நாதன், 249. சந்ரமௌலி, 250. சற்குணநாதன், 251. சட்டைநாதன், 252. சட்டையப்பன், 253. செக்கர்மேனி, 254. செம்மேனி, 255. செம்மேனிநாதன், 256. செம்மேனிநீற்றன், 257. செம்மேனியம்மான், 258. செம்பவளன், 259. செம்பொற்சோதி, 260. செம்பொற்றியாகன், 261. செம்பொருள், 262. செங்கன்கடவுள், 263. செந்நெறியப்பன், 264. செஞ்சடையன், 265 செஞ்சடையப்பன், 266. செஞ்சுடர்ச்சடையன், 267. சேராக்கையன், 268. சேட்சியன், 269. சேயிழைபாகன், 270. சேயிழைபங்கன், 271. செய்யச்சடையன், 272. சிற்றம்பலவாணன், 273. சித்தநாதன், 274. சிட்டன், 275. சிவன், 276. சோதி, 277. சோதிக்குறி, 278. சோதிவடிவு, 279. சோதியன், 280 சொக்கலிங்கம், 281. சொக்கன், 282. சொக்கநாதன், 283. சொல்லடங்கன், 284. சொல்லற்கரியான், 285. சொல்லற்கினியான், 286. சோபுரநாதன், 287. சுடலைப்பொடிபூசி, 288. சுடலையாடி, 289. சுடர், 290. சுடரமைமேனி, 291. சுடரனையான், 292. சுடர்ச்சடையன், 293. சுடரேந்தி, 294. சுடர்க்கண்ணன், 295. சுடர்க்கொழுந்து, 296. சுடற்குறி, 297. சுடர்மேனி, 298. சுடர்நயனன், 299. சுடரொளி, 300. சுடர்விடுச்சோதி, 301. சுடர்விழியன், 302. சூலைதீர்த்தான், 303. சூலமாரையன், 304 சூலப்படையன், 305. தாணு, 306. தேவதேவன், 307. தேவன், 308. ஏடகநாதன், 309. எடுத்தபாதம், 310. ஏகம்பன், 311. ஏகபாதர், 312. எளியசிவம், 313. எல்லையிலாதான், 314. எல்லாமுணர்ந்தோன், 315. எல்லோர்க்குமீசன், 316. எம்பெருமான், 317. ஏனக்கொம்பன், 318. ஏனங்காணான், 319. ஏனத்தெயிறான், 320. ஏனவெண்மருப்பன், 321. எண்குணன், 322. எண்மலர்சூடி, 323. எண்ணத்துனையிறை, 324. எந்நாட்டவர்க்குமிறை, 325. எண்ணுறைவன், 326. என்னுயிர், 327. என்றுமெழிலான், 328. எந்தை, 329. எந்தாய், 330. எண் தோளர், 331. எண்டோளன், 332. எண்டோளவன், 333. எண்டோளொருவன், 334. ஏறமர்கொடியன், 335. ஏறெறி, 336. எரிபோல்மேனி, 337. எரியாடி, 338. எரியேந்தி, 339. ஏற்றன், 340. ஏறுடைஈசன், 341. ஏறுடையான், 342. எருதேறி, 343. எருதூர்வான், 344. எரும்பீசன், 345. ஏறூர்கொடியோன், 346. ஏறுயர்த்தான், 347. எயிலட்டான், 348. எயில்மூன்றெரித்தான், 349. ஏழைபாகத்தான், 350. எழுகதிமேனி, 351. ஏழுலகாளி, 352. எழுத்தறிநாதன், 353. கங்கைச்சடையன், 354. கங்கையஞ்சென்னியான், 355. கங்கைசூடி, 356. கங்கைவார்ச்சடையன், 357. ஞானக்கண், 358. ஞானக்கொழுந்து, 359. ஞானமூர்த்தி, 360. ஞானன், 361. ஞானநாயகன், 362. குரு, 363. குருமாமணி, 364. குருமணி, 365. இடபமூர்வான், 366. இடைமருதன், 367. இடையாற்றீசன், 368. இடத்துமையான், 369. ஈசன், 370. ஈடிலி, 371. ஈரோட்டினன், 372. ஈசன், 373. இலக்கணன், 374. இளமதிசூடி, 375. இளம்பிறையன், 376. இலங்குமழுவன், 377. இல்லான், 378. இமையாள்கோன், 379. இமையவர்கோன், 380. இணையிலி, 381. இனமணி, 382. இன்பன், 383. இன்பநீங்கான், 384. இந்துசேகரன், 385. இந்துவாழ்சடையன், 386. இனியன், 387. இனியான், 388. இனியசிவம், 389. இறை, 390. இறைவன், 391. இறையான், 392. இறையனார், 393. இராமநாதன், 394. இறப்பிலி, 395. இராசசிங்கம், 396. இரவாடி, 397. இரவிவிழியன், 398. ஈறிலான், 399. இருவரேத்துரு, 400. இருவர்தேட்டினன்

Sivan

401. இசைபாடி, 402. இட்டன், 403. இயல்பழகன், 404. இயமானன், 405. கடைமுடிநாதன், 406. கடல்விடமுண்டான், 407. கடம்பவனத்திறை, 408. கடவுள், 409. கதிர்நயனன், 410. கதிர்க்கண்ணன், 411. கைச்சினநாதன், 412. காலபயிரவன், 413. காளை, 414. களைகண், 415. காலைப்பொழுதன்னன், 416. கலையான், 417. காளையப்பன், 418. காலகாலன், 419. காளகண்டன், 420. களர்முளைநாதன், 421. களிற்றுரியன், 422. களிற்றுரிவைப்போர்வையான், 423. கல்லால்நிழலான், 424. கள்வன், 425. காமகோபன், 426. கமலபாதன், 427. காமற்காய்ந்தான், 428. கனலாடி, 429. கனலார்ச்சடையன், 430. கனலேந்தி, 431. கனல்மேனி, 432. கனல்விழியன், 433. கணநாதன், 434. கனற்ச்சடையன், 435. கண்சுமந்தநெற்றியன், 436. கண்டன், 437. கந்தனார்தாதை, 438. கண்டிகையன், 439. கண்டிக்கழுத்தன், 440. கங்காளர், 441. கங்காநாயகன், 442. கனி, 443. கணிச்சிவாணவன், 444. கண்மலர்கொண்டான், 445. கண்ணா, 446. கண்ணாளன், 447. கண்ணாயிரநாதன், 448. கண்ணழலான், 449. கண்ணுதல், 450. கண்ணுதலான், 451. கண்டங்கறையன், 452. கண்டங்கருத்தான், 453. காபாலக்கூத்தன், 454. கபாலி, 455. காபாலி, 456. கறைக்கண்டன், 457. கறைமிடற்றன், 458. கறைமிடற்றண்ணல், 459. காரணன், 460. கரந்தைச்சூடி, 461. கரவீரநாதன், 462. கரியாடையன், 463. கரியுரியன், 464. கற்பகநாதன், 465. கற்பகம், 466. கற்றைச்சடையன், 467. கற்றைவார்ச்சடையான், 468. கருமிடற்றான், 469. கறுத்தமணிகண்டர், 470. கருத்தன், 471. கருத்தான், 472. கருவன், 473. காதலன், 474. கட்டங்கன், 475. காவலாளன், 476. காவலன், 477. கயிலைநாதன், 478. கயிலைக்கிழவன், 479. கயிலைமலையான், 480. கயிலைமன்னன், 481. கயிலைப்பதியன், 482. கயிலைபெருமான், 483. கயிலைவேந்தன், 484. கயிலையமர்வான், 485. கயிலையன், 486. கயிலையான், 487. கயிலாயமுடையான், 488. கயிலாயநாதன், 489. கழற்செல்வன், 490. கேடிலி, 491. கேடிலியப்பன், 492. கேழல்மறுப்பன், 493. கேழற்கொம்பன், 494. கீற்றணிவான், 495. கோ, 496. கோடிக்காஈச்வரன், 497. கோடிக்குழகன், 498. கொடுகொட்டி, 499. கொடுமுடிநாதன், 500. கொடுங்குன்றீசன், 501. கோகழிநாதன், 502. கொக்கரையன், 503. கொக்கிறகன், 504. கோலச்சடையன், 505. கோலமிடற்றன், 506. கோளிலியப்பன், 507. கோமகன், 508. கோமான், 509. கொம்பணிமார்பன், 510. கோன், 511. கொன்றை அலங்கலான், 512. கொன்றைசூடி, 513. கொன்றைத்தாரோன், 514. கொன்றைவேந்தன், 515. கொற்றவன், 516. கொழுந்து, 517. கொழுந்துநாதன், 518. குடமுழவன், 519. கூடற்கடவுள், 520. கூடுவடத்தன், 521. குலைவணங்குநாதன், 522. குலவான், 523. குமரன், 524. குமரன்றாதை, 525. குணக்கடல், 526. கூனற்பிறையன், 527. குண்டலச்செவியன், 528. குன்றாஎழிலான், 529. குபிலன், 530. குரவன், 531. குறி, 532. குறியில்குறியன், 533. குறியில்கூத்தன், 534. குறியுருவன், 535. குற்றம்பொருத்தநாதன், 536. கூற்றங்கடிந்தான், 537. கூற்றங்காய்ந்தான், 538. கூற்றங்குமத்தான், 539. கூற்றுதைத்தான், 540. குறும்பலாநாதன், 541. குருந்தமர்குரவன், 542. குருந்தமேவினான், 543. கூத்தன், 544. கூத்தபிரான், 545. கூவிளமகிழ்ந்தான், 546. கூவிளஞ்சூடி, 547. குவிந்தான், 548. குழகன், 549. குழைகாதன், 550. குழைதோடன், 551. குழையாடுசெவியன், 552. குழற்ச்சடையன், 553. மாசிலாமணி, 554. மடந்தைபாகன், 555. மடவாள்பாகன், 556. மாதா, 557. மாதவன், 558. மாதேவன், 559. மதிமுத்தன், 560. மதிநயனன், 561. மாதிருக்கும்பாதியன், 562. மதிவாணன், 563. மதிவண்ணன், 564. மதிவிழியன், 565. மாதொருபாகன், 566. மாதுபாதியன், 567. மைகொள்செய்யன், 568. மைந்தன், 569. மையணிமிடறோன், 570. மையார்கண்டன், 571. மாகாயன் உதிரங்கொண்டான், 572. மாலைமதியன், 573. மலைமகள் கொழுநன், 574. மலைவளைத்தான், 575. மலையாள்பாகன், 576. மலமிலி, 577. மலர்ச்சடையன், 578. மாலொருபாகன், 579. மால்வணங்கீசன், 580. மால்விடையன், 581. மாமன், 582. மாமணி, 583. மாமி, 584. மன், 585. மணக்குழகன், 586. மணாளன், 587. மனத்தகத்தான், 588. மனத்துணைநாதன், 589. மனவாசகம்கடந்தவர், 590. மணவாளன், 591. மணவழகன், 592. மணவெழிலான், 593 மண்சுமந்தான், 594. மந்தரச்சிலையன், 595. மந்திரம், 596. மந்திரன், 597. மானேந்தி, 598. மங்கைபாகன், 599. மங்கைமணாளன், 600. மங்கைபங்கன்

Sivan

601. மணி, 602 மானிடன்,603. மானிடத்தன்,604. மணிகண்டன், 605. மாணிக்கவண்ணன், 606. மாணிக்கக்கூத்தன், 607. மாணிக்கம், 608. மாணிக்கத்தியாகன், 609. மான்மறிக்கரத்தான், 610. மணிமிடற்றான், 611. மணிவண்ணன், 612. மணியான், 613. மஞ்சன், 614. மன்றக்கூத்தன், 615. மன்றவாணன். 616. மன்றுளாடி, 617. மன்றுளான், 618. மாப்பெருங்கருணை, 619. மறைசெய்தோன், 620. மறைக்காட்டு மணாளன், 621. மறைநெறி, 622. மறைபாடி, 623. மறைப்பரியன், 624. மறையப்பன், 625. மறையோதி, 626. மரகதம், 627. மாரநீறன், 628. மறவன், 629. மாறிலாமணி, 630. மாறிலி, 631. மறியேந்தி, 632. மாற்கண்டாளன், 633. மார்கழிஈந்தான், 634. மாற்றறிவரதன், 635. மருதப்பன், 636. மருந்தன், 637. மருந்தீசன், 638. மருந்து, 639. மருவிலி, 640. மாசற்றசோதி, 641. மாசறுசோதி, 642. மாசிலி, 643. மாதேவன், 644. மதியர், 645. மத்தன், 646. மதுரன், 647. மாவுரித்தான், 648. மாயன், 649. மழவிடைப்பாகன், 650. மழவிடையன், 651. மழுப்படையன், 652. மழுவலான், 653. மழுவாளன், 654. மழுவாளி, 655. மழுவாட்படையன், 656. மழுவேந்தி, 657. மழுவுடையான், 658. மேலர், 659. மேலோர்க்குமேலோன், 660. மேருவிடங்கன், 661. மேருவில்லன், 662. மேருவில்வீரன், 663. மெய், 664. மெய்ப்பொருள், 665. மெய்யன், 666. மீன்கண்ணணிந்தான், 667. மிக்காரிலி, 668. மிளிர்பொன்னன், 669. மின்சடையன், 670. மின்னாருருவன், 671. மின்னுருவன், 672. முதலில்லான், 673. முதலோன், 674. முதிராப்பிறையன், 675. முதுகாட்டாடி, 676. முதுகுன்றீசன், 677. முடிவில்லான், 678. முக்கண்மூர்த்தி, 679. முக்கணன், 680. முக்கணான், 681. முக்கண்ணன், 682. முக்கட்கரும்பு, 683. முக்கோணநாதன், 684. முளை, 685. முளைமதியன், 686. முளைவெண்கீற்றன், 687. மூலன், 688. மூலநாதன், 689. மூலத்தான், 690. முல்லைவனநாதன், 691. மும்மையினான், 692. முனி, 693. முன்னயனன், 694. முன்னோன், 695. முன்பன், 696. முந்தை, 697. மூப்பிலர், 698. முப்புரம் எறித்தோன், 699. முற்றாமதியன், 700. முற்றுணை, 701. முற்றுணர்ந்தோன், 702. முற்றுஞ்சடையன், 703. மூர்த்தி, 704. முருகாவுடையார், 705. முருகுடையார், 706. முதலியர், 707. முதல்வன், 708. முத்தன், 709 .முத்தார் வண்ணன், 710. முத்திலங்குஜோதி, 711. முத்தியர், 712. முத்து, 713. முத்துமேனி, 714. முத்துத்திரள், 715. மூவாக்குழகன், 716. மூவாமேனியன், 717. மூவாமுதல், 718. மூவர்முதல், 719. மூவிலைச்சூலன், 720. மூவிலைவேலன், 721. மூவிழையோன், 722. முயற்சிநாதன், 723. முழுதறிந்தோன், 724. முழுதோன், 725. முழுமுதல், 726. முழுதுணர்ச்சோதி, 727. முழுதுணர்ந்தோன், 728. நடன், 729. நதிச்சடையன், 730. நதிசூடி, 731. நதியார்ச்சடையன், 732. நதியூர்ச்சடையன், 733. நடுத்தறியப்பன், 734. நகுதலையன், 735. நக்கன், 736. நல்லான், 737. நல்லசிவம், 738. நள்ளிருளாடி, 739. நம்பன், 740. நம்பி, 741. நண்பன், 742. நந்தி, 743. நந்தியார், 744. நஞ்சமுதோன், 745. நஞ்சணிகண்டன், 746. நஞ்சார்த்தோன், 747. நஞ்சுண்டோன், 748. நஞ்சுண்கண்டன், 749. நஞ்சுண்கருணையன், 750. நஞ்சுண்ணமுதன், 751. நஞ்சுண்பொறை, 752. நற்ச்சடையன், 753. நாரிபாகன், 754. நற்றவன், 755. நற்றுணை, 756. நற்றுணைநாதன், 757. நசையிலி, 758. நாதன், 759. நாதி, 760. நட்டமாடி, 761. நாட்டமூன்றோன், 762. நட்டன், 763. நட்டவன், 764. நாவலன், 765. நாவலேச்சரன், 766. நாயாடி யார், 767. நயன், 768. நயனச்சுடரோன், 769. நயனமூன்றன், 770. நயனநுதலோன், 771. நாயனார், 772. நயனத்தழலோன், 773. நெடுஞ்சடையன், 774. நெல்லிவனநாதன், 775. நெறி, 776. நெறிகாட்டுநாயகன், 777. நெற்றிச்சுடரோன், 778. நெற்றிக்கண்ணன், 779. நெற்றிநயனன், 780. நெற்றியில்கண்ணன், 781.நேசன், 782. நெய்யாடியப்பன், 783. நிட்கண்டகன், 784. நீலகண்டன், 785. நீலக்குடியரன், 786. நீலமிடற்றன், 787. நீள்சடையன், 788. நீனெறிநாதன், 789. நீறாடி, 790. நீறணிச்செம்மான், 791. நீறணிசுடர், 792. நீறணிகுன்றம், 793. நீறணிமணி, 794. நீறணிநுதலோன், 795. நீறணிபவளம், 796. நீறணிசிவன், 797. நீறர்மேனியன், 798. நீர்ச்சடையன், 799. நீறேறுசடையன். 800 நீறேறுசென்னியன்

sivan

801 நீற்றன், 802. நீறுடைமேனி, 803. நீறுபூசி, 804. நிகரில்லார், 805. நிலாச்சடையன், 806. நிலவணிச்சடையன், 807. நிலவார்ச்சடையன், 808. நிமலன், 809. நின்மலன், 810. நீன்மலக்கொழுந்து, 811. நிமிர்புன்சடையன், 812. நிராமயன், 813. நிரம்பஅழகியன், 814. நிறைவு, 815. நிருத்தன், 816. நீதி, 817. நித்தன், 818. நோக்கமூன்றோன், 819. நோக்குறுஅனலோன், 820. நோக்குறுகதிரோன், 821. நோக்குறுமதியோன், 822. நோக்குறுநுதலோன், 823. நொய்யன், 824. நுதலோர்விழியன், 825. நுதல்விழியன், 826. நுதல்விழியோன், 827. நுதற்கண்ணன், 828. நுண்ணிடைகூறன், 829. நுண்ணிடைபங்கன், 830. நுண்ணியன், 831. ஓடணியன், 832. ஓடார்மார்பன், 833. ஓடேந்தி, 834. ஓதஞ்சூடி, 835. ஒளிர்மேனி, 836. ஓங்காரன், 837. ஓங்காரத்துட்பொருள், 838. ஒப்பாரிலி, 839. ஒப்பிலி, 840. ஒற்றைப்படவரவன், 841. ஒருதாளர், 842. ஒருத்தன், 843. ஒருதுணை, 844. ஒருவமனில்லி, 845. ஒருவன், 846. ஓட்டீசன், 847. படர்ச்சடையன், 848. பாதகம்பரிசுவைத்தான், 849. பாதிமாதினன், 850. படிகாசீந்தான், 851. படிக்காசு வைத்த பரமன், 852. படிறன், 853. பகல்பல்லிறுத்தோன், 854. பகவன், 855. பாலைவனநாதன், 856. பாலன்னநீற்றன், 857. பாலர், 858. பலிச்செல்வன், 859. பாலீதாதை, 860. பலிகொண்டான், 861. பளிங்கின்மேனி, 862. பலித்தேர்செல்வன், 863. பல்லவநாதன்,864. பால்நீற்றன், 865. பாலுகந்தஈசன், 866. பால்வண்ணநாதன், 867. பால்வண்ணன், 868. பாம்பரையன், 869. பாம்புரநாதன், 870. பண்பன், 871. பண்டங்கன், 872. பண்டாரம், 873. பண்டரங்கன், 874. பாண்டரங்கன், 875. பாண்டிபிரான், 876. பங்கயபாதன், 877. பனிமதியோன், 878. பனிமலையன், 879. பணிவார்பற்று, 880. பராய்த்துறையண்ணல், 881. பரமமூர்த்தி, 882. பரமன், 883. பரமயோகி, 884. பரமேச்சுவரன், 885. பரமேட்டி, 886. பரம்பரன், 887. பரம்பொருள், 888. பரன், 889. பரஞ்சோதி, 890. பரஞ்சுடர், 891. பராபரன், 892. பரசுடைக்கடவுள், 893. பரசுபாணி, 894. பரதத்துவன், 895. பாரிடஞ்சூழன், 896.பரிதியப்பன், 897. பற்றற்றான், 898. பற்றறுப்பான், 899. பற்றவன், 900.பற்று, 901.பருப்பன், 902. பார்வதி, மணாளன், 903. பாசமிலி, 904. பாசநாசன், 905. பசுவேறி, 906. பசும்பொன், 907. பாசுபதன், 908. பசுபதி, 909. பத்தன், 910. பட்டன், 911. பவளவண்ணன், 912. பவளச்செய்யோன், 913. பவளம், 914. பவன், 915. பாவநாசன், 916. பாவநாசர், 917. பயற்றூரரன், 918. பழையான், 919. பழையோன், 920. பழகன், 921. பழமலைநாதன், 922. பழனப்பிரான், 923. பழவினையறுப்பான், 924.பெம்மான், 925. பெண்பாகன், 926. பெண்கூறன், 927. பெண்ணாகியபெருமான், 928. பெண்ணமர் மேனியன், 929. பெண்ணாணலியன், 930. பெண்ணாண்மேனி, 931. பெண்ணானுருவன், 932. பெண்ணிடத்தான், 933. பெண்ணொருபாகன், 934. பெண்ணொருபங்கன், 935. பெண்ணுடைப்பெருந்தகை, 936.பெண்பாற்றூதன், 937. பேராளன், 938. பேரம்பலவாணன், 939. பேரருளாளன், 940. பேராயிரவன், 941. பேர்ச்சடையன், 942. பேரெழுத்துடையான், 943. பேரின்பன், 944. பெரியகடவுள், 945. பெரியான், 946. பெரிய பெருமான், 947. பெரியபெருமான் அடிகள், 948. பெரியசிவம், 949. பெரியவன், 950. பேரொளி, 951. பேரொளிப்பிரான், 952. பெற்றமேறி, 953. பெற்றமூர்த்தி, 954. பெருமான், 955. பெருமானார், 956. பெரும் பொருள், 957. பெரும்பயன், 958. பெருந்தேவன், 959. பெருங்கருணையன், 960. பெருந்தகை, 961. பெருந்துணை, 962. பெருஞ்சோதி, 963. பெருவுடையார், 964. பேசற்கினியன், 965. பிச்சர், 966. பிச்சைத்தேவன், 967. பீடர், 968. பிஞ்ஞகன், 969. பிறைச்சென்னியன், 970. பிறைசூடன், 971. பிறைசூடி, 972. பிறைக்கண்ணியன், 973. பிறைக்கீற்றன், 974. பிறையாளன், 975. பிரான், 976. பிறப்பறுப்போன், 977. பிறப்பிலி, 978. பிறவாப்பெரியோன், 979. பிரியாதநாதன், 980. பிதா, 981. பித்தன், 982. பொடியாடி, 983. பொடியார்மேனி, 984. போகம், 985. போகத்தன், 986. பொன், 987. பொன்மலைவில்லான், 988. பொன்மானுரியான், 989. பொன்மேனி, 990. பொன்னம்பலக்கூத்தன், 991. பொன்னம்பலம், 992. பொன்னன், 993. பொன்னார்மேனி, 994. பொன்னாயிரமருள்வோன், 995. பொன்னுருவன், 996. பொன்வைத்தநாயகம், 997. போராழிஈந்தான், 998. பொற்சசையன், 999. பொருப்பினான், 1000. பொய்யிலி

siva thandava 1

சிவம் என்றால் மங்களம், உயர்வு, களிப்பு, நன்மை, முக்தி, இறைவனின் அருவமும், உருவமும் சேர்ந்த நிலை, சிவத்துவம் ஆகியவற்றை குறிக்கிறது. உலகியல் இன்பங்கள் நிலையற்றவை என்பதை உணர்ந்து, இறைவனுடன் கலந்திருக்கும் பேரின்ப நிலையை விரும்புபவர்கள் அனைவரும் சிவ வழிபாட்டை மேற்கொள்கின்றனர். அவர்களுக்கு அந்த சிவபெருமானும் முக்தி நிலையை அளிக்கிறார். அப்படிப்பட்ட சிவபெருமானுக்கு 1000 பெயர்கள் இருக்கின்றன. அதில் சில குறிப்பிட்ட பெயர்கள் அவரின் தனித்துவத்தை எடுத்துக் காட்டுவதாக உள்ளது. உதாரணமாக

தட்சிணாமூர்த்தி எனும் பெயர் கருணை நிறைந்த மூர்த்தியாக சிவபெருமான் இருப்பதைக் குறிக்கிறது.

ஆடற்கூத்தன் எனப்படும் பெயர் தில்லை நகரத்தில் ஆகாயத்தின் அம்சமாக நடராஜர் எனும் பெயரில் திருநடனம் புரிகின்ற சிவனைக் குறிக்கிறது.

ஆதிசித்தன் என்கிற பெயர் சித்தர் பெருமக்கள் அனைவருக்கும் தலைவனாக இருக்கின்ற சிவனை குறிக்கிறது.

அண்ணாமலை திருவண்ணாமலை என்னும் அக்னி தலத்தில் நெருப்பின் வடிவமாக இருக்கும் சிவபெருமானை குறிக்கிறது.

சந்திர சேகரன் எனும்பெயர் சந்திரனை தனது தலையில் அணிகலனாக சூடி இருப்பதால் சிவனுக்கு இப்பெயர் ஏற்பட்டது.

இப்படி சிவபெருமானுக்குரிய ஆயிரம் பெயர்கள் ஒவ்வொன்றும் ஒரு பொருளை கொண்டிருக்கிறது.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள சிவபெருமானின் பெயர்களில் ஒரு சிலவற்றை மட்டுமே பெரும்பான்மையான மக்கள் அறிந்திருக்கின்றனர். பெற்றோர்களும் தங்களின் குழந்தைகளுக்கு இவற்றில் இருக்கும் ஒரு சில சிவன் பெயர்களையே தங்கள் குழந்தைகளுக்கு சூட்டி வருகின்றனர். எனவே எல்லோரும் தெரிந்து கொள்ளும் வகையில் பலராலும் அறியப்படாத 1000 எண்ணிக்கை வரை கொண்ட சிவபெருமானுக்குரிய தமிழ் பெயர்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

sivan lingam

“தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி” என்கிற மாணிக்கவாசகரின் அற்புதமான பாடல் வரி தென் நாட்டினரான தமிழர்களின் தெய்வம் சிவபெருமான் என்பதை உறுதி செய்கிறது. சிவனை முழுமுதற் கடவுளாகக் கொண்டு வழிபடும் பிரிவினரை சைவர்கள் என்கின்றனர். அப்படி சைவ சமய வழிபாடு அதிகம் மேற்கொள்ளும் தமிழர்கள் பலருக்கும் சிவபெருமானின் பலவகையான பெயர்கள் சூட்டப்பட்டிருப்பது அதிசயம் ஒன்றுமில்லை. நம் நாட்டைப் போலவே சைவ வழிபாடு தீவிரமாக கடைபிடிக்கப்படும் இலங்கையில் பலருக்கும் தயாளன், சிவபாலன், சிவராசன் என்கிற சிவனின் பிரியர்கள் அதிகம் சுட்டப்படுகின்றன.

sivan

சிவனின் பெயர்கள் மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் பல புகழ்பெற்ற நிறுவனங்களுக்கும் சூட்டப்பட்டு உள்ளன. சிவனின் எந்த ஒரு பெயரையும் ஒவ்வொரு முறை உச்சரிக்கும் போதும் நமது பாவங்கள் நீங்குகின்றன. நமது குழந்தைகளுக்கும் சிவபெருமானின் பல பெயர்களில் நமக்கு விருப்பமான ஏதேனும் ஒரு பெயரை சூட்டி ஒவ்வொரு முறையும் அப்பெயர் சொல்லி குழந்தைகளை அழைக்கும் போதும், குழந்தைகளுக்கும் நமக்கும் சிவபெருமானின் முழுமையான அருள் கிடைக்க வழிவகை செய்கிறது.

இதையும் படிக்கலாமே:
முருகனின் 125 தமிழ் பெயர்கள்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview

This page has complete details about God Shiva names. God Shiva is a popular god in Tamil Nadu. He has many names like Nataraja, Annamalai and many others. Here we can see God shiva names in Tamil. This can also be a Tamil baby boy names or Sivan peyargal in Tamil or Lord Shiva names.  Many Tamil people are keeping these names for their baby. So it can also be Tamil baby boy names.