வாங்கிய அசல் தொகையை விட பல மடங்கு வட்டி கட்டியும் கடன் அடிக்கவில்லை என்று பெரும் மன குழப்பத்திற்கு ஆளாகி மன சஞ்சலத்துடன் திகழக்கூடியவர்கள் இந்த உலகத்தில் பலர் இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களும் கடன் தொடர்பான அனைத்து பிரச்சினைகளும் தீர வேண்டும் என்று நினைப்பவர்களும் கரி நாளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதுவும் சனிக்கிழமையோடு சேர்ந்து வரும் கரிநாளுக்கு அதீத பலன் உண்டாகும். இந்த முறை சனிக்கிழமையோடு சேர்ந்து வரும் கரிநாள் அன்று மூன்றாம் பிறையும் சேர்ந்து வருகிறது என்பதால் இந்த நாளை தவற விடாமல் இந்த வழிபாட்டை செய்பவர்களுக்கு வட்டி கடன் தொடர்பான பிரச்சனைகள் தீரும். அந்த வழிபாட்டை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
வட்டி பிரச்சனை தீர வழிபாடு
கடன் தொடர்பான பிரச்சனைகளுக்கு முக்கியமான காரணமாக திகழக்கூடியவர்களுள் ஒருவராக இருப்பவர் தான் சனீஸ்வர பகவான். நம்முடைய கர்மவினையின் அடிப்படையில் முன் ஜென்மத்தில் நாம் யாருடைய பணத்தை அதிகளவில் வாங்கி வைத்திருந்தோமோ, அவர்களுக்கு இந்த ஜென்மத்தில் நாம் கடன் பட்டு அந்த கடனை திருப்பி செலுத்துகிறோம் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட சனீஸ்வர பகவானுக்குரிய நாளில் கரி நாளும் சேர்ந்து வரக்கூடிய நாள் மிகவும் சிறப்பு மிகுந்த நாளாக கருதப்படுகிறது. பொதுவாக கரிநாள் அன்று நல்ல காரியங்கள் எதையும் செய்யக்கூடாது என்று கூறுவார்கள். அதே சமயம் கரி நாளன்று நாம் வாங்கிய கடனை திருப்பி செலுத்தினோம் என்றால் விரைவிலேயே அந்த கடன் தீரும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த முறை மூன்றாம்பிறையும் சேர்ந்து வருவதால் இந்த நாளுக்கு அதிக பலன் இருக்கிறது.
ஆடி மாதத்தின் மூன்றாம் பிறை என்பது ஜூலை மாதம் 26 ஆம் தேதி சனிக்கிழமை அன்று வருகிறது. அன்று கரி நாளாகவும் இருக்கிறது என்பதால் நம்முடைய தீர்க்க முடியாத பிரச்சினைகளில் ஒன்றாக திகழக்கூடிய கடன் வட்டி தொடர்பான பிரச்சனைகள் தீருவதற்கு இந்த நாள் மிகவும் சிறப்பு மிகுந்த நாளாகவே அமையும். இந்த நாளில் காலை 6:00 மணியிலிருந்து 7 மணிக்குள் நாம் யார் யாருக்கு எல்லாம் வட்டி தர வேண்டியது இருக்கிறதோ அவர்களுக்கு வட்டிக்குரிய தொகையை சிறிதளவு எடுத்து பூஜையறையில் வைத்துக் கொள்ளுங்கள்.
பிறகு ஒரு வெள்ளை நிற பேப்பரை எடுத்து “ஓம் ஸ்ரீம் சந்திரமௌலீஸ்வராய நமஹ” என்னும் மந்திரத்தை 27முறையும் “ஓம் ஸ்ரீம் லலிதம் லம்போதரம்” என்னும் மந்திரத்தை 27 முறையும் எழுத வேண்டும். பிறகு கடன் தொடர்பான பிரச்சனைகள் தீர வேண்டும், வட்டி கட்டாமல் நிம்மதியாக வாழ வேண்டும் என்று முழு மனதோடு சிவபெருமானையும் பெருமாளையும் மனதார வேண்டிக் கொண்டு அந்த பணத்தை எடுத்து வட்டியை கட்டிவிட வேண்டும். இப்படி செய்வதன் மூலம் விரைவிலேயே வட்டி கட்டாமல் கடனையும் திருப்பி செலுத்துவதற்குரிய வாய்ப்புகள் உண்டாகும்.
இதையும் படிக்கலாமே: நிலைவாசல் எலுமிச்சை வழிபாடு
நமக்கு ஏற்படக்கூடிய கஷ்டங்கள் ஒவ்வொன்றிலும் இருந்து வெளியே வருவதற்கு ஒவ்வொரு விதமான பரிகாரங்களையும் வழிபாட்டு முறைகளையும் நம்முடைய முன்னோர்கள் வகுத்திருக்கிறார்கள், அந்த வகையில் கடன் வட்டி தொடர்பான பிரச்சனைகள் தீர்வதற்கு கரி நாளோடு சேர்ந்து வரக்கூடிய சனிக்கிழமை மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த நாளை முழுமையாக பயன்படுத்தி கடன் இல்லாத நிம்மதியான வாழ்க்கையை வாழ்வோம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.