மூட்டு வலி நீங்க உதவும் வாயு முத்திரை

mootu-vali

ஒருவர் நன்கு நடமாடி இயங்க அவரின் கால்களில் இருக்கும் மூட்டுகள் நல்ல நிலையில் இருக்க வேண்டும். ஒரு காலத்தில் வயதானவர்களுக்கே வந்த மூட்டுவலிப் பிரச்சனை தற்போது 30 வயதுடையவர்களுக்கும் வருகிறது. இதை போக்குவதற்க்கான முத்திரை தான் இந்த “வாயு முத்திரை”.

yoga

முத்திரை செய்யும் முறை:
உங்கள் முதுகும், கழுத்தும் நேராக இருக்கும் வகையில் தரையில் சம்மணமிட்டு அமர்ந்து கொள்ளவேண்டும். பிறகு உங்கள் இரு கைகளையும் உங்கள் தொடைகளின் மீது வைத்துக் கொள்ளவேண்டும்.

இப்போது உங்கள் இரு கைகளிலும் உள்ள ஆட்காட்டி விரல்களைப் பாதி மடக்கி அதன் மீது உங்கள் பெருவிரல்களை கீழே உள்ள படத்தில் காட்டியவாறு வைத்துக்கொள்ளுங்கள்.

vayu muthirai

இப்போது உங்கள் கண்களை மூடிக்கொண்டு, மூச்சுக்காற்றை மெதுவாகவும், ஆழமாகவும் உள்ளுக்கு சுவாசிக்க வேண்டும். பின்பு மெதுவாக மூச்சை வெளியிட வேண்டும். இதே முறையில் இந்த பயிற்சியை தினமும் காலையிலும் மாலையிலும் 15 முதல் 20 நிமிடங்கள் வரை செய்ய வேண்டும்.

- Advertisement -

பலன்கள்:
இம்முத்திரையை தொடர்ந்து செய்வதால் உங்களின் நெடுநாளைய மூட்டுவலிப் பிரச்சனை படிப்படியாக நீங்கும். வாயுக்கோளாறுகள் நீங்கும். முதுகுத்தண்டு நரம்புகள் வலுவடையும். அடிக்கடி மனம் பதைபதைக்கும் நிலை நீங்கும்.

இதையும் படிக்கலாமே:
உடலின் விஷக் கழிவுகளை நீக்கும் முத்திரை பற்றி தெரியுமா ?

இது போல மேலும் பல யோக முத்திரைகள், சித்த மருத்துவ குறிப்புக்கள் என பலவற்றை அறிய தெய்வீகம் முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்.

English Overview:
Here we have described about Vayu mudra in Tamil. If one do this mudra on regular basis then there will not be a knee pain.