உடலின் விஷக் கழிவுகளை நீக்கும் முத்திரை பற்றி தெரியுமா ?

mudra

“யோகிகளும், சித்தர்களும்” கண்டுபிடித்த முறை தான் இந்த “முத்திரை தியான” முறை. பொதுவாக முத்திரை தியானத்தை 6 வயதிற்கு மேற்பட்ட எவரும் பயிற்சி செய்யலாம் என்றாலும் முன்னெச்சரிக்கையாக சில விதிகளை பின்பற்ற வேண்டும்.

yoga

இம்முத்திரைப் பயிற்சிகளை எப்போது வேண்டுமானாலும் செய்யலாம் என்றாலும், ஒவ்வொரு முறை உணவுண்ட பின் குறைந்தது 3 முதல் 4 மணி நேர இடைவெளி இருப்பது அவசியம். நீர்ரருந்தினால் குறைந்தது 30 நிமிட இடைவெளி இருக்க வேண்டும்.

தீவிரமான நோய்கள் பீடித்திருக்கும் போதோ, மிகுந்த சோர்விருக்கும் போதோ இதைச் செய்யக்கூடாது.

கருத்தரித்திருக்கும் பெண்கள் செய்யக் கூடாது.

முதல் முயற்சியிலேயே நீண்ட நேரம் செய்யக் கூடாது.

- Advertisement -

yoga

இம்முத்திரைக்கு தனிப்பெயர் எதுவும் இல்லையென்றாலும் “அபான முத்திரையின்” உப பிரிவு முத்திரையாகக் கருதப்படுகிறது. ஆங்கிலத்தில் இதை (Detox) “விஷநீக்கி” முத்திரை என்றழைக்கிறார்கள். எந்த ஒரு வைத்திய முறைக்கும் முதலில் உடலில் ஏற்கனவே தங்கியிருக்கின்ற கழிவுகளை நீக்க வேண்டியது அவசியம். அதுபோலவே மற்ற முத்திரைப் பயிற்சிகளை செய்வதற்கு முன்பாக செய்ய வேண்டிய முத்திரை தான் இது.

செய்முறை:

இம்முத்திரையை செய்ய முதலில் தரையில் சம்மணமிட்டு அமர்ந்து தலை, கழுத்து முதுகுத்தண்டு நேராக இருக்கும் படி அமரவேண்டும். நாற்காலியில் அமர்ந்து செய்தாலும் இதே விதியை பின்பற்ற வேண்டும்.

இப்போது உங்கள் இரு கைகளையும் உங்கள் தொடைகள் மீது வைத்துக் கொண்டு, உங்கள் இரு கைகளின் கட்டை விரலைகளை எடுத்து, உங்கள் மோதிர விரல்களின் அடியிலிருக்கும் மூன்றாவது கணுவில் மிருதுவான அழுத்தம் கொடுத்து தொட்டுக்கொண்டிருக்க வேண்டும்.

visha neeki mudhra

இப்போது கண்களை மூடி தியான நிலைக் கொண்டு, சுவாசத்தை மெதுவாகவும், உங்கள் அடிவயிறு நிரம்பும் வரை ஆழமாகவும் சுவாசிக்க வேண்டும். மீண்டும் சற்று விரைவாக உங்கள் அடிவயிறு காலியாகும் நிலைகொண்டு சுவாசக் காற்றை வெளியிட வேண்டும்.

இம்முறையிலேயே இம்முத்திரைப் பயிற்சியைத் தொடர்ந்து குறைந்த பட்சம் 15 நிமிடங்களாவது செய்ய வேண்டும்.

பலன்கள்:

இம்முத்திரையை செய்வதால் உங்கள் உடலிலுள்ள தீமை விளைவிக்கும் கழிவுகள் நீங்கும். உங்கள் உடல் புத்துணர்வைப் பெற்று, சுறுசுறுப்பு தன்மை பெறும் நீண்ட நாள் நோய்கள் படிப்படியாக நீங்கும்.

இம்முத்திரைகளைத் தொடர்ந்து 15 தினங்கள் செய்து வர சிலருக்கு பேதி, அதிக சிறு நீர் பிரிவது போன்ற பக்க விளைவுகள் ஏற்படலாம். ஆனால் இதற்கு அஞ்ச வேண்டியதில்லை காரணம் இத்தனைக் காலமாக உங்கள் உடலில் தங்கியிருந்த தீங்கு விளைவிக்கும் கழிவுகள் உங்கள் உடலிலிருந்து வெளியேறுவதற்கான அறிகுறி தான் இது.

இப்படிப்பட்ட காலத்தில் எளிதில் ஜீரணமாக கூடிய உணவுகளை உட்கொள்வதன் மூலம், இந்த பக்க விளைவுகளின் கடினத் தன்மையை குறைக்கலாம். இதைக் குறைந்தது ஒரு மாதக் காலமாவது செய்ய வேண்டும்.

இது போன்ற மேலும் பல யோக முத்திரைகள், தியான முத்திரைகள் பலவற்றை அறிய தெய்வீகம் முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்.