இனி வாழைப்பூ வடை சுடும் போது இந்த மாதிரி செய்து பாருங்க. நீங்க எவ்வளவு வடை சுட்டு போட்டாலும் பத்தவே பத்தாது. ரொம்பவே சூப்பரா மொறு மொறுன்னு இருக்கும்.

- Advertisement -

இந்த வாழைப் பூ உடம்புக்கு மிகவும் நல்லது அதை வைத்து கூட்டு, பொரியல், குழம்பு போன்றவைகளை எல்லாம் செய்யலாம். இவை அனைத்திலும் விட வாழைப் பூவை வைத்து செய்யப்படும் இந்த வடையானது மிகவும் ருசியாக இருக்கும். சாதாரணமாகவே வடை பிடிக்கும் என்று சொல்லும் வடை பிரியர்களுக்கு இந்த வாழைப்பூ வடை எல்லாம் அமிர்தமாகவே இருக்கும். அந்த அளவுக்கு இதன் சுவை பிரமாதமாக இருக்கும். அந்த வாழைப்பூ வடை வடை ரெசிபி உங்களுக்காக.

தேவையான பொருட்கள்

கடலைப்பருப்பு – 1 கப், வாழைப் பூ(சுத்தம் செய்தது) – 1 கப், பெரிய வெங்காயம் – 1, பச்சை மிளகாய் -2, மிளகாய் – 4, பூண்டு பல் – 4, இஞ்சி – 1 துண்டு, சோம்பு -1 ஸ்பூன், உப்பு – 1/2 ஸ்பூன், கருவேப்பிலை கொத்தமல்லி – ஒரு கொத்து, எண்ணெய் – 250.

- Advertisement -

வாழைப்பூ வடை செய்வதற்கு முன்பாக கடலை பருப்பை இரண்டு மணி நேரம் தண்ணீரை நன்றாக ஊற வைத்துக் கொள்ளுங்கள். (இந்த கடலை பருப்புக்கு பதிலாக பட்டாணி பருப்பில் செய்தால் வடை இன்னும் மொறு மொறுவென்று இருக்கும்) இந்த பருப்பு ஊறும் தண்ணீரிலே நான்கு காய்ந்த மிளகாயையும் சேர்த்து ஊற வைத்துக் கொள்ளுங்கள். பருப்பு ஊறிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் வாழை பூவை சுத்தம் செய்து தண்ணீரில் போட்டு அலசி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். வெங்காயம், பச்சை மிளகாய், கருவேப்பிலை, கொத்துமல்லி இலைகளை நல்ல பொடியாக பொடியாக நறுக்கி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

செய்முறை

இரண்டு மணி நேரம் ஊறிய பருப் நன்றாக கழுவி வடிக்கட்டி தண்ணீர் இல்லாமல் வடித்து எடுத்த பிறகு மிக்ஸி ஜாரில் சேர்த்து அத்துடன் ஊறிய காய்ந்த மிளகாய், பூண்டு தோல் உரிக்காமல் கூட சேர்த்துக் கொள்ளுங்கள். இஞ்சி, சோம்பு இவற்றையெல்லாம் சேர்த்து நன்றாக தண்ணீர் ஊற்றாமல் கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். அங்கே பருப்பு ஒன்று இரண்டாக இருந்தால் சாப்பிடும் போது நன்றாக இருக்கும்.

- Advertisement -

பருப்புபை அரைத்து எடுத்து அதை ஒரு பவுலில் மாற்றிய பிறகு அதே ஜாரில் சுத்தம் செய்து வைத்த வாழைப்பூவை தண்ணீர் இல்லாமல் வடித்த பிறகு அதையும் மிக்ஸி ஜாரில் சேர்த்து ஒரே ஒரு சுற்று மட்டும் விட்டு எடுத்து விடுங்கள்.

இப்போது அரைத்தெடுத்த பருப்பை ஒரு பவுலில் மாற்றிய பிறகு பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை கொத்தமல்லி உப்பு என அனைத்தையும் சேர்த்த பிறகு, அரைத்த வாழைப்பூ விழுதையும் இதில் சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளுங்கள். இப்போது வடை சுடுவதற்கான மாவு தயாராகி விட்டது. இனி வடையை சுட்டு எடுத்து விட வேண்டியது தான்.

- Advertisement -

அடுப்பை பற்ற வைத்து கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானவுடன் அடுப்பை மிதமான தீக்கு மாற்றி வைத்துக் கொள்ளுங்கள். தீ அதிகமாக இருந்தாலும் வடை போட்டவுடன் மேலே வெந்து விடும் உள்ளே பருப்பு வேகாது. குறைவான தீயில் இருந்தால் எண்ணெய் அதிகம் குடித்து விடும். எனவே எண்ணெய் நன்றாக காய்ந்தவுடன் அடுப்பை மிதமான தீயில் வைத்து வடைகளை சுட்டு எடுக்க வேண்டும்.

இதையும் படிக்கலாமே: வாயில் வைத்த உடனேயே கரையும் கோதுமை அல்வா செய்வது இவ்வளவு ஈஸியா? சட்டுனு நினைத்த போதெல்லாம் இந்த அல்வாவை செய்து சாப்பிடலாம்.

இப்போது கலந்து வைத்த மாவில் இருந்து ஒவ்வொரு உருண்டையாக பிடித்து எடுத்து மசால் வடை சுடுவது போல் தட்டி எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்து விடுங்கள். சுவையான வாழைப்பூ வடை தயார்.

- Advertisement -