வாயில் வைத்த உடனேயே கரையும் கோதுமை அல்வா செய்வது இவ்வளவு ஈஸியா? சட்டுனு நினைத்த போதெல்லாம் இந்த அல்வாவை செய்து சாப்பிடலாம்.

halwa
- Advertisement -

அல்வா என்றால் யாருக்குத்தான் பிடிக்காது. அதிலும் மணக்க மணக்க ஆரோக்கியத்தோடு நெய் சேர்த்து, கோதுமை மாவு சேர்த்து நம் கையாலேயே அல்வா செய்து கொடுத்தால், வீட்டில் இருப்பவர்கள் நிச்சயம் வேண்டாம் என்று சொல்ல மாட்டார்கள். ஈவினிங் ஏதாவது ஸ்வீட் சாப்பிடனும் போல தோணுது. அப்படின்னா உடனடியாக கோதுமை மாவை வைத்து இந்த அல்வாவை தயார் செய்து விடலாம். வாங்க நேரத்தை கடத்தாமல் இந்த அருமையான அல்வா ரெசிபியை நாமும் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்

கோதுமை மாவு – 1 கப், வெல்லம் – 1 கப், முந்திரி பருப்பு – 10 லிருந்து 15, நெய் – 3/4 கப், தண்ணீர் – 3 கப், ஏலக்காய் பொடி – தேவையான அளவு, இந்த பொருட்கள் தான் நமக்கு தேவை. (இனிப்பு கொஞ்சம் குறைவாக தேவை என்றால் முக்கால் கப் வெல்லம் பயன்படுத்திக் கொள்ளலாம்.)

- Advertisement -

செய்முறை

முதலில் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து, 1 கப் வெல்லத்தை போட்டு, 3 கப் தண்ணீரை ஊற்றி வெல்லத்தை நன்றாக கரைத்து வடிகட்டி தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த வெல்ல கரைசல் அப்படியே இருக்கட்டும்.

அடுப்பில் அடி கனமான ஒரு கடாயை வைத்து, அதில் 3/4 கப் நெய் ஊற்றி, எடுத்து வைத்திருக்கும் முந்திரி பருப்புகளை போட்டு வறுத்து தனியாக எடுத்துக் கொள்ளுங்கள். அதன் பின்பு அடுப்பை சிம்மில் வைத்துவிட்டு, காய்ந்த இந்த நெய்யில் எடுத்து வைத்திருக்கும் கோதுமை மாவை போட்டு கைவிடாமல் கலக்க வேண்டும். அடுப்பு சிம்மில் தான் இருக்க வேண்டும்.

- Advertisement -

கோதுமை மாவு கருகக் கூடாது. 10 லிருந்து 12 நிமிடங்கள் அந்த நெய்யில் கோதுமை மாவு சிவந்து நல்ல வாசம் வரும். அதன் பிறகு எடுத்து வைத்திருக்கும் வெல்ல கரைசலை கொஞ்சம் கொஞ்சமாக கடாயில் இருக்கும் கோதுமை மாவில் ஊற்றி, கைவிடாமல் கலக்க வேண்டும். கொஞ்சம் கொஞ்சமாக வெல்ல கரைசலை ஊற்றி கலக்கும்போது, கட்டிகள் பிடிக்கும். ஜாக்கிரதையாக கட்டிகளை உடைத்து விட்டு கலந்து கொண்டே இருங்கள்.

இதையும் படிக்கலாமே: 4 வெங்காயம் இருந்தா போதும் காலை டிபன், முதல் இரவு டின்னர் வரை இந்த ஒரு டீஷ் வைச்சே சமாளிச்சுடலாம். கேட்கும் போதே செமையா இருக்கு இல்ல, வாங்க அது என்னன்னு தெரிஞ்சிக்கலாம்.

எல்லா வெல்லத் தண்ணீரையும் கோதுமை மாவில் ஊற்றிய பின்பு கைவிடாமல் மூன்று நிமிடம் கலந்தால் அல்வா அப்படியே கடாயில் ஒட்டாமல் சூப்பராக நமக்கு கிடைக்கும். இறுதியாக இதில் ஏலக்காய் பொடி தூவி, வறுத்து வைத்திருக்கும் முந்திரி பருப்புகளை போட்டு, நன்றாக கலந்து அடுப்பை அணைத்தால் சூப்பரான சுவையான அல்வா ரெடி. ரெசிபி பிடிச்சிருக்கா மிஸ் பண்ணாதீங்க இப்பவே சமையல் கட்டுக்கு போய் ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -