வாழைப்பூவே எனக்கு பிடிக்காது என்பவர்கள் கூட, இந்த வாழைப்பூ பொரியலை விரும்பி விரும்பி சாப்பிடுவாங்க. காரணம் இது முட்டை சேர்த்த வாழைப்பூ பொரியல்.

poriyal1
- Advertisement -

வாழைப்பூ. இது உடம்புக்கு ரொம்ப ரொம்ப நல்லதுங்க. வாரத்தில் ஒரு நாளாவது சிரமம் பார்க்காமல் இந்த வாழை பூவை வாங்கி சுத்தம் செய்து சமைத்து, வீட்டில் இருப்பவர்கள் சாப்பிட வேண்டும். ஆனால் சைவ பிரியர்கள் இதை செய்கிறார்கள். அசைவ பிரியர்கள் வாழைப்பூவெல்லாம் எனக்கு பிடிக்காது. நான் தொடவே மாட்டேன் என்று சொல்லுவார்கள். அப்படிப்பட்டவர்களையும் இந்த வாழைப்பூவை சாப்பிட வைக்க ஒரு ஐடியா இருக்குது. அதுதான் முட்டை சேர்த்த வாழைப்பூ பொரியல். சூப்பரான இந்த ரெசிபியை எப்படி செய்வது ரெசிபி தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

செய்முறை

மீடியம் சைஸில் இருக்கும் வாழைப்பூவை முதலில் சுத்தம் செய்து கொள்ளுங்கள். பெரும்பாலும் நமக்கு இந்த வாழைப்பூவை எப்படி சுத்தம் செய்வது எப்படி என்று தெரிந்திருக்கும். சுத்தம் செய்த வாழை பூவை நறுக்கி மோர் கலந்த தண்ணீரில் போட்டு வைத்தால் கருக்காது என்பது குறிப்பிடத்தக்கது‌.

- Advertisement -

வாழைப்பூவை தயார் செய்து வைத்த பிறகு பொரியலை தாளிக்கலாம். அடுப்பில் ஒரு கடாயை வைத்து 3 டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றிக் கொள்ளவும். எண்ணெய் காய்ந்ததும் சிறிது கடுகு உளுந்து போட்டு தாளித்து, அடுத்து சோம்பு 1/2 ஸ்பூன் போட்டு, தாளிக்கவும். கருவேப்பிலை ஒரு கொத்து போட்டுக்கோங்க. பிறகு மிகப் பொடியாக நறுக்கிய வெங்காயம் 2 போட்டு நன்றாக வதக்கவும்.

கூடவே 2 பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். வெங்காயம் கண்ணாடி பதத்தையும் தாண்டி வதங்கி வந்தவுடன் தண்ணீரில் போட்டு வைத்திருக்கும் வாழைப்பூவை தண்ணீரையெல்லாம் வடித்து விட்டு கடாயில் சேர்த்து வதக்க வேண்டும். மூன்றில் இருந்து நான்கு நிமிடங்கள் வாழைப்பூ வதங்கி வந்ததும், இதில் மிளகாய் தூள் 1/2 ஸ்பூன், உப்பு தேவையான அளவு, மஞ்சள் தூள் சிறிதளவு, போட்டு மீண்டும் எல்லா பொருட்களையும் கலந்து விட்டு 1/2 டம்ளர் அளவு தண்ணீரை வாழை பூவில் ஊற்றி வேக வைக்கவும்.

- Advertisement -

மூடி போடாமலேயே ஐந்து நிமிடத்தில் வாழைப்பூ தண்ணீர் எல்லாம் சுண்டி வெந்து வந்துவிடும். இப்படியே இந்த வாழைப்பூவுக்கு மேலே கொஞ்சமாக துருவிய தேங்காய் தூவி கலந்து சாப்பிட்டாலும் சுவைதரும். அல்லது வேக வைத்த பருப்பு சிறிதளவு இதில் சேர்த்து சாப்பிட்டால் வாழைப்பூ கூட்டு. தேங்காயும் வேண்டாம், பருப்பும் வேண்டாம் மூன்று முட்டையை உடைத்து இதில் ஊற்றுங்கள்.

இதையும் படிக்கலாமே: வாழைக்காயை இப்படி பொரியல் செய்து கொடுத்து பாருங்க இது வாழைக்காயில் செய்தது தான் சொன்னாலும் யாரும் நம்ப மாட்டாங்க. வாழக்காயே பிடிக்காதுன்னு சொல்றவங்க கூட தட்டு தட்டா சாப்பிடு காலி பண்ணிடுவாங்க.

முட்டைக்கு தேவையான அளவு உப்பை மட்டும் அதன் மேலே தூவி ஒரு 2 நிமிடம் விட்டுவிட்டு பிறகு முட்டையையும் வாழைப்பூவையும் நன்றாக கலந்து விட்டு, முட்டை வேகும் அளவுக்கு இந்த வாழைப்பூவை கடாயில் சிவக்க விட்டு இறுதியாக அடுப்பை அணைத்து சுட சுட சாப்பிட்டு பாருங்கள். இது வேற லெவல் டெஸ்ட்ங்க. வாழைப்பூவே பிடிக்காது என்பவர்கள் கூட இதை விரும்பி விரும்பி சாப்பிடுவாங்க.

- Advertisement -