இந்த சூப்பை குடித்தாலே உடம்பில் இருக்கும் கெட்ட கொழுப்பு கரைந்து ஓடிவிடும். வாக்கிங் போக முடியாதவர்கள், வாக்கிங் போக மறந்தவர்கள், அதை சரி கட்ட, இந்த சூப் ட்ரை பண்ணி பார்க்கலாம்.

soup
- Advertisement -

உடம்பில் சேர்ந்து இருக்கக்கூடிய கெட்ட கொழுப்பினால் நிறைய பேருக்கு ஆரோக்கிய சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வருகிறது. இந்த கெட்ட கொழுப்பை குறைக்க தினமும் சில பேர் காலையில் எழுந்து வாக்கிங் போவாங்க. சில நேரங்களில் வாக்கிங் போகாத சூழ்நிலை இருக்கும். நீங்க வாக்கிங் போனாலும் சரி, வாக்கிங் போகவில்லை என்றாலும் சரி, வாரத்தில் மூன்று நாட்கள் இந்த சூப்பை குடித்து வந்தீர்கள் என்றால், உங்கள் உடம்பில் இருக்கும் கெட்ட கொழுப்பு நீங்கும். அது என்ன சூப்பாக இருக்கும். வாழைத்தண்டு சூப் தாங்க அது. வாழைத்தண்டு சூப்பை சூப்பராக சுவையாக செய்வது எப்படி என்பதை பற்றிய ரெசிபி இதோ உங்களுக்காக.

செய்முறை

இந்த சூப் செய்வதற்கு கொஞ்சம் இளசான வாழைத்தண்டை எடுத்து நாரையெல்லாம் நீக்கி, சுத்தம் செய்துவிட்டு, மிகப் பொடியாக நறுக்கி தண்ணீரில் போட்டு தனியாக வைத்துக் கொள்ளுங்கள். இது அப்படியே இருக்கட்டும்.

- Advertisement -

அடுத்து அடுப்பில் ஒரு கடாயை வைத்து, பொடியாக நறுக்கிய வெங்காயம் – 1 கைப்பிடி அளவு, இடித்த பூண்டு – 4 பல், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் – 1, போட்டு வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கி வந்ததும், நறுக்கி வைத்திருக்கும் வாழைத்தண்டை – 2 கைப்பிடி போட்டு, தேவையான அளவு – உப்பு போட்டு, லேசாக வதக்கி சீரக தூள் – 1/4 ஸ்பூன், சோம்பு தூள் – 1/4 ஸ்பூன், கரம் மசாலா – 1/4 ஸ்பூன், போட்டு 1/2 கப் அளவு – தண்ணீரை ஊற்றி வாழைத்தண்டை நன்றாக வேக வைக்கவும். இதை குக்கரில் வைத்து ஒரு விசில் வைத்துக் கொண்டாலும் உங்களுடைய விருப்பம்.

வாழைத்தண்டு நன்றாக வெந்தவுடன் அந்த தண்ணீரில் இருந்து வாழைத்தண்டை மட்டும் கரண்டியில் வடிகட்டி எடுத்து, மிக்ஸி ஜாரில் போட்டு கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி விழுதாக அரைத்து, இதை மீண்டும் வடிகட்டி குக்கரில் இருக்கும் சூப்பு தண்ணீருடன் கலந்து விடுங்கள். அரைத்த வாழைத்தண்டை பிழியும்போது நார் தனியாக வந்துவிடும். அந்த வாழைத்தண்டின் சத்துக்கள் எல்லாம் சூப்பில் இறங்கிவிடும்.

- Advertisement -

மீண்டும் இதை அடுப்பில் வைத்து கொதிக்க வைக்கவும். சூப் நன்றாக கொதித்து வரும்போது காரத்திற்கு ஏற்ப மிளகுத்தூள், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை, தூவி அடுப்பை அணைத்து சுடச்சுட இதை பரிமாறினால் சூப்பரான வாழை தண்டு சூப், சுவையாக தயார். இதற்கு மேலே தேவைப்பட்டால் கான் சிப்ஸ் தூவி குழந்தைகளுக்கும் கொடுக்கலாம். உடல் ஆரோக்கியத்திற்கு ரொம்ப ரொம்ப நல்லது. ஆரோக்கியம் தரும் இந்த ரெசிபி பிடிச்சிருந்தா மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க.

இதையும் படிக்கலாமே: கறி குழம்பு சுவையில சூப்பரான கொண்டைக்கடலை மசாலா கறியை ரொம்ப சிம்பிளா இப்படி செஞ்சு பாருங்க. சப்பாத்தி வெரைட்டி ரைஸ் என எல்லாத்துக்கும் பெஸ்ட் காம்பினேஷன்.

பின்குறிப்பு: வேகவைத்த வாழைத்தண்டை எடுக்கும்போது ஒரு சில வாழைத்தண்டுகளை சூப்பிலேயே விட்டுவிடுங்கள். குடிக்கும்போது அது வாயில் கடிபடும் போது இன்னும் கொஞ்சம் கூடுதலான ருசியை தரும்.

- Advertisement -