கறி குழம்பு சுவையில சூப்பரான கொண்டைக்கடலை மசாலா கறியை ரொம்ப சிம்பிளா இப்படி செஞ்சு பாருங்க. சப்பாத்தி வெரைட்டி ரைஸ் என எல்லாத்துக்கும் பெஸ்ட் காம்பினேஷன்.

- Advertisement -

கொண்டைக்கடலையை வைத்து பலவிதமான கிரேவி வகைகளை செய்யலாம். இந்த சமையல் குறிப்பு பதிவிலும் கொண்டக்கடலையை வைத்து கறிக்குழம்பு சுவையில் அதே நேரத்தில் வித்தியாசமான ஒரு மசாலா கிரேவியை எப்படி செய்வது என்று தான் தெரிந்து கொள்ளப் போகிறோம். இந்த கிரேவி வெரைட்டி ரைஸ் டிபன் என எல்லாத்திற்கும் ரொம்பவே நல்லா இருக்கும். வாங்க இப்போ அந்த கொண்டக்கடலை மசாலா கறி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

செய்முறை

இந்த கொண்டைக்கடலை மசாலா கறி செய்வதற்கு கொண்டை கடலையை 8 மணி நேரம் ஊற வைத்த பின் குக்கரில் மூன்று விசில் விட்டு வேக வைத்து எடுத்துக் கொள்ளுங்கள். அதே போல் ஒரு பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள். இரண்டு மீடியம் சைஸ் தக்காளியை மிக்ஸி ஜாரில் ஒரே ஒரு சுற்று மட்டும் விட்டு எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அடுத்து இந்த கிரேவிக்கு ஒரு மசாலா அரைக்க வேண்டும். அதற்கு மிக்ஸி ஜாரில் கால் கப் துருவிய தேங்காய், பத்து முந்திரி, ஒரு பட்டை, இரண்டு லவங்கம், இரண்டு ஏலக்காய், ஒரு பிரிஞ்சி இலை, ஒரு கைப்பிடி கொத்தமல்லி என அனைத்தையும் சேர்த்து பைன் பேஸ்ட் ஆக அரைத்து எடுத்து கொள்ளுங்கள்.

இந்த குழம்பை தாளிக்க அடுப்பில் குக்கரை வைத்து சூடான பிறகு ஐந்து டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஊற்றிக் கொள்ளுங்கள். இந்த மசாலா கறியை தேங்காய் எண்ணெயில் செய்யும் போது சுவை நன்றாக இருக்கும். எண்ணெய் காய்ந்த பிறகு ஒரு ஸ்பூன் சோம்பு சேர்த்து பொரிய விடுங்கள். அதன் பிறகு நறுக்கி வைத்த வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக ஆகும் வரை வதக்க வேண்டும்.

- Advertisement -

வெங்காயம் நன்றாக வதங்கிய பிறகு அதில் ஒரு ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து அதையும் ஒரு முறை வதக்கி கொள்ளுங்கள். அதன் பிறகு ஒன்னரை ஸ்பூன் மிளகாய்த் தூள், ஒரு ஸ்பூன் தனியா தூள், கால் ஸ்பூன் மஞ்சள் தூள், அரை ஸ்பூன் சீரகத் தூள், அரை ஸ்பூன் உப்பு என அனைத்தையும் சேர்த்த பிறகு ஒரு முறை வதக்கிக் கொள்ளுங்கள்.

இப்போது அரைத்து வைத்த தக்காளியை சேர்த்து ஒரு முறை வதக்கிய பின் அரைத்து வைத்த தேங்காய் மசாலாவை இதனுடன் சேர்த்துக் கொள்ளுங்கள். இந்த நேரத்தில் அரை ஸ்பூன் கரம் மசாலா, ஒரு ஸ்பூன் மிளகுத் தூள் சேர்த்து மறுபடியும் ஒரு முறை கலந்து விடுங்கள். இது ஒரு கொதி வந்த பிறகு வேக வைத்த கொண்டக்கடலையை தண்ணீர் வடித்து விட்டு சேர்த்துக் கொள்ளுங்கள்.

இதையும் படிக்காலமே: பச்சை பயிறு இருந்தா புரோட்டின் சத்துமிக்க இந்த தோசையை காலையில பிரேக் பாஸ்ட்க்கு டக்குனு இப்படி செஞ்சு கொடுங்க. நாள் முழுதும் தெம்பா இருக்க காலையிலேயே இத தான் சாப்பிட்டனும்.

மேலும் இத்துடன் கொண்டக்கடலை வேக வைத்த தண்ணீரையும் ஒரு கப் சேர்த்து மூடி போட்டு 5 நிமிடம் வரை விசில் போடாமல் கொதிக்க விடுங்கள். ஐந்து நிமிடம் கழித்து நறுக்கி வைத்த கொத்தமல்லி தழையை மேலே தூவி இறக்கி விடுங்கள். அருமையான கறி குழம்பு சுவையில் கொண்டைக்கடலை மசாலா கறி தயார்.

- Advertisement -