சூப்பரான வாழைக்காய் பொடிமாஸ்! ஒரு வாட்டி இப்படித்தான் செஞ்சு பாருங்களேன். திரும்பத் திரும்ப இதை செஞ்சு கிட்டே இருக்கீங்க.

vazhakai-fry

வாழைக்காயை வைத்து விதவிதமாக நிறைய ரெசிபிகளை செய்யலாம். அதில் ஒரு சிம்பிளான ரெசிபியை தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். உங்கள் வீட்டில் இருக்கும் சில பொருட்களை வைத்து வித்தியாசமான முறையில் ஒரு வாழைக்காய் பொடிமாஸ் எப்படி செய்வது என்று தெரிந்து கொள்வோம் வாருங்கள். இதை சமைத்து உங்கள் வீட்டில் இருப்பவர்களுக்கு கொடுத்தால் கட்டாயமாக வாழைக்காயை பிடிக்காதவர்கள் கூட இந்த வாழைக்காய் பொடிமாஸ் சாப்பிடுவார்கள். குழந்தைகளுக்கும் இந்த ரெசிபி மிகவும் பிடிக்கும்.

vazhakai-fry2

முதலில் ஒரு வாழைக்காயை தோல் சீவி வட்ட வட்டமாக வெட்டிக் கொள்ளுங்கள். வாழைக்காய்களை ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி, கொஞ்சம் உப்பு, மஞ்சள் தூள், 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அடுப்பில் வைத்து வேக வைக்க வேண்டும். அடுப்பை முழுமையான தீயில் வைத்து வாழைக்காய் ஒரு கொதி வந்ததும், அடுப்பை மிதமான தீயில் வைத்து விட்டு, அடுத்து மூன்று நிமிடத்தில் அடுப்பை அணைத்துவிட்டு, தண்ணீரை வடிகட்டி இந்த வாழை காய்களை தனித்தனியாக எடுத்து ஒரு தட்டில் அடுக்கி வைத்து விடுங்கள். இந்த வழக்கை அதிகமாக வெந்து விட்டால் இந்த டிஷ் நன்றாக இருக்காது.

அடுத்தபடியாக ஒரு பெரிய வெங்காயத்தை எடுத்து நான்கு துண்டுகளாக வெட்டி மிக்ஸி ஜாரில் போட்டு, பல்ஸ் பட்டனில் கொரகொரப்பாக அரைத்து ஒரு ஓரமாக வைத்து வைத்துக் கொள்ளுங்கள்.

அதே மிக்ஸி ஜாரில் சிறிதளவு இஞ்சி, 5 லிருந்து 6 பல் பூண்டு, 2 ஸ்பூன் அரிசி, இந்த பொருட்களை சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

அடுப்பில் ஒரு கடாயை வைத்துக்கொள்ளுங்கள். 2 லிருந்து 3 டேபிள் ஸ்பூன் அளவு நல்லெண்ணெயை ஊற்றி கொள்ளுங்கள். கடுகு – 1/2 ஸ்பூன், உளுந்து – 1/2 ஸ்பூன், சீரகம் – 1/2 ஸ்பூன், வெந்தயம் -1/4 ஸ்பூன், பெருங்காயம் – 1/4 ஸ்பூன் கருவேப்பிலை ஒரு கொத்து இந்த பொருட்களை சேர்த்து தாளித்து அரைத்து வைத்திருக்கும் வெங்காயத்தை போட்டு வதக்கவேண்டும். கூடவே அரைத்து வைத்திருக்கும் இஞ்சி பூண்டு அரிசி கலந்த பொடியையும் சேர்த்து சிறிதளவு உப்பு மிளகாய்த் தூள் – 1/2 ஸ்பூன், மஞ்சள்தூள் – 1/2 ஸ்பூன், மல்லித்தூள் – 1/2 ஸ்பூன், இந்த மசாலா பொருட்களை சேர்த்து இந்தக் கலவையை சுருள சுருள வதக்க வேண்டும்.

vazhakai-fry4

இறுதியாக வேக வைத்திருக்கும் வாழைக்காயை மசாலாவில், கடாயில் கொட்டி நன்றாக மசாலாவுடன் கலந்து, மசாலா அனைத்தும் வாழைக்காயில் ஓட்டும்படி சிவக்க வைக்க வேண்டும். மசாலா வாழைக்காய் உடன் ஒட்டாமல் ட்ரையாக இருக்கும் பட்சத்தில், ஒரு ஸ்பூன் அளவு தண்ணீரை ஊற்றி நன்றாக சிவக்க வைத்து எடுத்தால் வாழைக்காய் பொடிமாஸ் தயார். உங்களுக்கு இந்த குறிப்பு பிடித்திருந்தால் நீங்களும் தாராளமாக உங்கள் வீட்டில் முயற்சி செய்து பார்க்கலாம்.