அசைவ சுவையில் வித்தியாசமான சைவ உருண்டையை இவ்வளவு சுவையாக கூட செய்யலாம் தெரியுமா? அசைவ கோலா உருண்டையே தோற்றுப் போகும் அளவிற்கு ஒரு சூப்பரான வாழைக்காய் கோலா உருண்டை ரெசிபி இதோ உங்களுக்காக.

vazhakkai kola urundai
- Advertisement -

கோலா உருண்டை என்றதுமே நமக்கெல்லாம் ஞாபகத்திற்கு வருவது மட்டன் வைத்து செய்யப்படும் கோலா உருண்டை தான். ஆனால் அசைவத்திலும் கூட அதிலும் வாழைக்காய் வைத்து இவ்வளவு சுவையான ஒரு கோலா உருண்டையை செய்ய முடியுமா என்பதை நீங்கள் நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டீர்கள். அவ்வளவு சுவை மிகுந்த ஒரு சூப்பரான கோலா உருண்டையை எப்படி செய்வது என்று இந்த சமையல் குறிப்பு பதிவில் தெரிந்து கொள்ளலாம் வாங்க.

தேவையான பொருட்கள்

வாழைக்காய் – 3, பொட்டுக்கடலை – 1 கைப்பிடி, சோம்பு – 1 ஸ்பூன், இஞ்சி – 1 இன்ச், பூண்டு – 10 பல், கிராம்பு – 1, பட்டை – சிறிய துண்டு, ஏலக்காய் -3, தேங்காய் – 1/4 மூடி துருவியது, பச்சை மிளகாய் – 3, கசகசா – 1 ஸ்பூன், வெங்காயம் – 2, கொத்தமல்லி – 1/2 கைப்பிடி, மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன், உப்பு – 1/2 ஸ்பூன், இத்துடன் பொரிப்பதற்கு எண்ணெய்.

- Advertisement -

செய்முறை

முதலில் வாழைக்காயை தோல் உரித்து அதை நன்றாக கேரட் துருவுவது போல் துருவி கொள்ள வேண்டும். மிக்ஸி ஜாரை எடுத்து அதில் பொட்டுக்கடலை, சோம்பு, இஞ்சி, பூண்டு, கிராம்பு, பட்டை, ஏலக்காய், தேங்காய், பச்சை மிளகாய், கசகசா, வெங்காயம், கொத்தமல்லி, பெருங்காயம், மஞ்சள் தூள் இவை அனைத்தையும் சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் அரைக்க வேண்டும்.

இந்த விழுதை தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு அதே மிக்ஸி ஜாரில் துருவி வைத்திருக்கும் வாழைக்காயை சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் அதையும் நைசாக அரைத்துக் கொள்ள வேண்டும். இப்போது ஏற்கனவே அரைத்து வைத்திருக்கும் விழுதை இத்துடன் சேர்ந்து உப்பையும் சேர்த்து மறுபடியும் நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

அரைத்த விழுதை ஒரு பாத்திரத்தில் எடுத்து வைக்க வேண்டும். ஒரு வேளை தண்ணீர் அதிகமாக இருப்பது போல் தெரிந்தால், அதனுடன் நாம் பொட்டுக்கடலை மாவையோ அல்லது அரிசி மாவையோ சேர்த்து பிசைந்து உருண்டை பிடித்து தனியாக ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

இப்பொழுது அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் எண்ணெயை ஊற்றி சூடான பிறகு அடுப்பை லோ ஃபிளேமில் மாற்றி வைத்துக் கொள்ளுங்கள். இப்போது அதில் நாம் ஏற்கனவே உருட்டி வைத்திருக்கும் உருண்டைகளை ஒவ்வொன்றாக போட வேண்டும்.

இதையும் படிக்கலாமே: கல்யாண வீட்டு கார குழம்பு செய்முறை விளக்கம்

அடுப்பை மிதமான தீயில் வைத்து பொரிக்கும் போது உள்ளிருக்கும் மாவானது நன்றாக வெந்து மேலே மொருமொருவென்று இருக்கும். இந்த உருண்டை பொன்னிறமாக வந்த பிறகு அதை எண்ணெயில் இருந்து எடுத்து வடிகட்டி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அவ்வளவு தான் வித்தியாசமான சுவையில் சைவ வாழைக்காய் கோலா உருண்டை தயாராகி விட்டது.

- Advertisement -