அஷ்டமி திதி என்பது காலபைரவருக்கு உகந்த திதி என்று நம் அனைவருக்குமே தெரியும். அன்றைய தினத்தில் காலபைரவர் வழிபாடு என்பது மிகவும் சிறப்புக்குரியது. காலபைரவரை யார் ஒருவர் மனதார வழிபாடு செய்கிறார்களோ அவர்களின் வாழ்க்கையில் இருக்கக் கூடிய கஷ்டங்கள் அனைத்தும் நீங்கும் என்று கூறப்படுகிறது. அதுவும் சிவபெருமானுக்குரிய மாதமான கார்த்திகை மாதத்தில் ஞாயிற்றுக்கிழமையில் அஷ்டமி திதி வருவது என்பது பல மடங்கு பலனை தரக்கூடியதாக திகழ்கிறது. இந்த நாளில் பைரவரை வீட்டில் வழிபாடு செய்யும் முறையை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
காலபைரவர் வழிபாடு
சிவபெருமானின் மறு அவதாரமாக திகழக்கூடியவர் தான் கால பைரவர். இவர் சனீஸ்வர பகவானின் குருவாக கருதப்படுகிறார் என்பது நம் அனைவருக்குமே தெரியும். காலபைரவரை வழிபாடு செய்பவர்களுக்கு சனீஸ்வர பகவானால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் விலகும் என்றும் எதிரிகள் தொல்லை முற்றிலும் நீங்கும் என்றும் வாழ்க்கையில் இருக்கக்கூடிய கஷ்டங்கள் அனைத்தும் மாறும் என்றும் நமக்கு தெரியும். அவ்வளவு சிறப்பு வாய்ந்த காலபைரவர் வழிபாடு என்பது கார்த்திகை மாதத்தில் வளர்பிறை ஞாயிற்றுக்கிழமையோடு சேர்ந்து வருகிறது என்னும் பொழுது அதற்குரிய பலன் இன்னும் அதிகமாகவே இருக்கும். அன்றைய தினத்தில் வீட்டிலேயே காலபைரவரை வழிபாடு செய்யும் முறையைப் பற்றி தான் இப்பொழுது பார்க்கப் போகிறோம்.
டிசம்பர் மாதம் 8ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 7:43க்கு அஷ்டமி திதி என்பது ஆரம்பிக்கிறது. அதனால் அன்றைய தினத்தில் காலை 8 மணியில் இருந்து 8:45 க்குள் அல்லது 10:45 லிருந்து 11 45க்குள் அல்லது 1:30லிருந்து 2:30க்குள் அல்லது மாலை 6 மணியிலிருந்து 9:30 மணிக்குள் இந்த வழிபாட்டை நாம் வீட்டில் செய்யலாம். இதற்கு காலபைரவரின் படமோ சிலையோ இருக்க வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை. சிவபெருமானின் படத்திற்கு முன்பாக இந்த தீபத்தை நாம் ஏற்றுக் கொள்ளலாம்.
ஒரு தாம்பாலத்தை வைத்துக் கொள்ளுங்கள். அதில் ஐந்து அகல் விளக்குகளை வைத்துக் கொள்ளுங்கள். அந்த ஐந்து அகல் விளக்குகளில் இரண்டு விளக்கில் நல்லெண்ணெயும் மூன்று விளக்கில் நெய்யும் ஊற்ற வேண்டும். பிறகு இந்த விளக்குகளில் ஒரு விளக்கில் மட்டும் 27 மிளகுகளை போட வேண்டும். பிறகு பஞ்சுத்திரி போட்டு வடக்கு பார்த்தவாறு தீபம் ஏற்ற வேண்டும். காலபைரவருக்கு உப்பு கலக்காத தயிர் சாதத்தை நெய்வேத்தியமாக வைத்து செவ்வரளி மலர்களை வைத்து அர்ச்சனை செய்ய வேண்டும். காலபைரவரின் படத்திற்கோ அல்லது சிவபெருமானின் படத்திற்கோ இந்த அர்ச்சனையை செய்யலாம். இந்த அர்ச்சனையை செய்யும் பொழுது “ஓம் நமோ பைரவாய நமஹ” என்னும் மந்திரத்தை குறைந்தபட்சம் 27 முறையும் அதிகபட்சம் 108 முறையும் கூறி அர்ச்சனை செய்ய வேண்டும்.
இந்த முறையில் நாம் அர்ச்சனை செய்த பிறகு கற்பூர தீப தூப ஆராதனை காட்டி வழிபாட்டை நிறைவு செய்த விட வேண்டும். இந்த முறையில் நாம் கால பைரவரை வீட்டிலேயே வழிபாடு செய்யும் பொழுது நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய அனைத்து விதமான கஷ்டங்களும், போராட்டங்களும் நீங்குவதோடுநன்மைகள் நம்மை தேடி வர ஆரம்பிக்கும்.
இதையும் படிக்கலாமே:எதிரிகள் தொல்லை நீங்க தீப வழிபாடு
காலபைரவரை முழுமனதோடு நம்பி அவருக்குரிய திதியான அஷ்டமி தினத்தன்று இந்த தீபங்களை ஏற்றி முழுமனதோடு வழிபாடு செய்பவர்களுக்கு காலபைரவரின் அருளால் அனைத்து விதமான கஷ்டங்களும் நீங்கி சிறப்பான வாழ்க்கை வாழ்வார்கள் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.