- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalவாழ்க்கையை மாற்றும் ஆஷாட நவராத்திரி நெய்வேத்யம்

வாழ்க்கையை மாற்றும் ஆஷாட நவராத்திரி நெய்வேத்யம்

- Advertisement -

ஆனி மாதம் அமாவாசை முடிந்த மறுநாள் தொடங்கக் கூடியது தான் ஆஷாட நவராத்திரி. இந்த ஆஷாட நவராத்திரி நாளில் வாராகி அம்மனை நாம் வழிபாடு செய்வது என்பது நம் வாழ்க்கையை மாற்றக்கூடிய ஒன்றாகவே திகழும். எவ்வளவு கஷ்டங்கள் இருந்தாலும், எவ்வளவு துக்கங்கள் இருந்தாலும், எவ்வளவு துயரங்கள் இருந்தாலும் அவை அனைத்தும் நீங்கி மகிழ்ச்சியான நிம்மதியான வாழ்க்கையை தரக்கூடிய வாராகி அம்மனுக்கு எந்த பொருளை நெய்வேத்யமாக ஆஷாட நவராத்திரி நாட்களில் வைத்து வழிபாடு செய்ய வேண்டும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.

ஆஷாட நவராத்திரி நெய்வேத்யம்

ஆஷாட நவராத்திரியில் பலரும் பல விதங்களில் வழிபாடு செய்வார்கள். ஒரு சிலர் கலசம் வைப்பார்கள். ஒரு சிலர் விரதம் இருப்பார்கள். ஒரு சிலர் தீபம் ஏற்றுவார்கள். ஒரு சிலர் அர்ச்சனை செய்து வழிபாடு செய்வார்கள். இவற்றில் நம்மால் இயன்றதை நாம் முழுமனதோடு செய்தோம் என்றால் வாராகி அருளை பரிபூரணமாக பெற முடியும். எப்படி வழிபாடு செய்தாலும் கண்டிப்பான முறையில் வாராகி அம்மனுக்காக ஏதாவது ஒரு நெய்வேத்தியத்தை வைக்க வேண்டும். அந்த வகையில் இந்த பதிவில் எந்த நெய்வேத்தியத்தை வைத்தால் வாராகியின் அருளால் வாழ்க்கையில் நல்ல மாற்றம் உண்டாகும் என்றுதான் பார்க்கப் போகிறோம்.

- Advertisement -

முதல் நாள் அம்பாளுக்கு நெய்யை நெய்வேத்தியமாக வைத்து தங்களால் இயன்ற நெய்யை பிறருக்கு தானமாக தரவேண்டும். இப்படி செய்வதன் மூலம் உடல் ஆரோக்கியம் உண்டாகும். இரண்டாம் நாள் வெள்ளை சர்க்கரையை நெய்வேத்தியமாக வைத்து தானமாக தர வேண்டும். இதன் மூலம் ஆயுள் பெருகும். மூன்றாம் நாள் பாலை நெய்வேத்தியமாக வைத்து தானமாக தரவேண்டும். இதன் மூலம் நமக்கு இருக்கக்கூடிய துக்கங்கள் நீங்கும். நான்காவது நாள் பால் சம்பந்தப்பட்ட இனிப்பு பொருட்களை நெய்வேத்தியமாக வைத்து தானமாக தரவேண்டும். இதன் மூலம் நமக்கு இருக்கக்கூடிய தடைகள் விலகும். ஐந்தாவது நாள் செவ்வாழையை நெய்வேத்தியமாக வைத்து தானம் தர வேண்டும். இதன் மூலம் மன நிம்மதி கிடைக்கும்.

ஆறாவது நாள் தேனை நெய்வேத்தியமாக வைத்து தானம் தர வேண்டும். இதன் மூலம் பண வரவு அதிகரிக்கும். ஏழாவது நாள் வெல்லத்தை நெய்வேத்தியமாக வைத்து தானம் தர வேண்டும். இதன் மூலம் நம்மிடம் இருக்கக்கூடிய ஏழ்மை விலகும். எட்டாவது நாள் தேங்காயை உடைத்து நெய்வேத்தியமாக வைத்து முழு தேங்காயை தானமாக தர வேண்டும். இதன் மூலம் நம் வாழ்க்கையில் இருக்கக் கூடிய தேவையற்றவை அனைத்தும் நீங்கும். ஒன்பதாவது நாள் நவதானிய சுண்டலை நெய்வேத்தியமாக வைத்து தானமாக தரவேண்டும். இதன் மூலம் மேற் சொன்ன எட்டு நாட்களுக்குரிய பலனையும் பெற முடியும். பத்தாவது நாள் ஏதாவது ஒரு கிழங்கு வகைகளில் அல்வா செய்து நெய்வேத்தியம் வைத்து தானமாக தர வேண்டும். இதன் மூலம் நம் வாழ்க்கையில் வெற்றிகள் உண்டாகும்.

இதையும் படிக்கலாமே: கொடுத்த கடன் திரும்ப பெற
வாராகி அம்மனுக்கு நெய்வேத்தியமாக இந்த பொருளை வைத்து விட்டு அதில் சிறிதளவு மட்டும் பிரசாதமாக எடுத்துக்கொண்டு நம்மால் இயன்ற அளவு பிறருக்கு அந்த பொருட்களை தானமாக தருவதன் மூலம் நம்முடைய கர்ம வினைகளும் நீங்குவதோடு நம் வாழ்வில் நல்ல முன்னேற்றமும் உண்டாகும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்