நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு முறை வழிபாடுகளையோ அல்லது பரிகாரங்களையோ மேற்கொள்ளும் பொழுது நம்முடைய வாழ்க்கையில் ஏதாவது ஒரு நல்ல மாற்றம் ஏற்படாதா என்று நினைத்துக் கொண்டுதான் செய்கிறோம். அவ்வாறு செய்தும் பலருக்கும் அவர்கள் வாழ்க்கையில் நல்ல மாற்றம் என்பது ஏற்படாமல் கஷ்டத்திற்கு மேல் கஷ்டத்தை மட்டுமே அனுபவித்துக் கொண்டு இருப்பார்கள். அப்படிப்பட்டவர்கள் பௌர்ணமி தினத்தன்று இந்த ஒரு தீபத்தை ஏற்றி வைத்து வழிபாடு செய்தால் போதும் கண்டிப்பான முறையில் அவர்களின் வாழ்க்கையில் ஒரு நல்ல மாற்றம் உண்டாகும். அந்த தீப வழிபாட்டை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
வாழ்க்கையை மாற்றும் பௌர்ணமி தீபம்
ஒவ்வொரு தெய்வத்தையும் நாம் வழிபாடு செய்யும் பொழுதும் கண்டிப்பான முறையில் ஒரு தீபத்தை ஏற்றி வைத்து வழிபாடு செய்வோம். தீபத்தை ஏற்றி வைத்து வழிபாடு செய்யாத எந்த ஒரு வழிப்பாடும் முழு பலனை தராது. மேலும் அதை வழிப்பாடாகவே கருத முடியாது என்று கூட கூறலாம். அந்த அளவிற்கு தீபத்திற்கு பலன் என்பது இருக்கிறது. பொதுவாக இந்த தீபச் சுடரொளியில் முப்பெரும் தேவியரும், முப்பெரும் தேவர்களும் வீற்றிருக்கிறார்கள் என்று பொருள்படும். எந்த தெய்வத்தை நினைத்து நாம் தீபம் ஏற்றினாலும் அந்த தீபத்தில் அந்த தெய்வம் ஆகாவணம் செய்யப்படும். பலருக்கும் அந்த தீபச்சுடரொளியில் பலவிதமான தெய்வங்களின் அருள் கிடைத்திருக்கிறது என்று கூட கூறலாம். அவ்வளவு சிறப்பு வாய்ந்த தீபத்தை நம்முடைய வாழ்க்கையை மாற்றுவதற்கு எந்த முறையில் ஏற்ற வேண்டும் என்பதை இப்பொழுது பார்ப்போம்.
தீபச்சுடரொளியாக திகழக்கூடியவர் சிவபெருமான் என்று நம் அனைவருக்கும் தெரியும். அடி முடி காணாத அண்ணாமலையாக தீபச்சுடரொளியாக அனைவருக்கும் காட்சியளிக்க கூடிய ஒரு அற்புதமான தெய்வம் என்றால் அவர் சிவபெருமான்தான். அப்படிப்பட்ட சிவபெருமானுக்கு சரி நிகர் சமானமாக கருதப்படக் கூடியது தான் தேங்காய். முக்கண்ணனாக வீற்றிருக்கக்கூடிய சிவபெருமானை போன்று தேங்காய்க்கும் முக்கண் என்பது இருக்கிறது. பல விதங்களில் சிவபெருமானையும் தேங்காயையும் நாம் ஒப்பிட்டு பார்க்கலாம். அப்படி சிவாம்சம் பொருந்திய தேங்காயையும் தீபத்தையும் வைத்து தான் இந்த ஆனி பௌர்ணமி நாளன்று நாம் வழிபாடு செய்யப் போகிறோம்.
இந்த வழிபாட்டை மாலை 6:00 மணிக்கு மேல் செய்வது என்பது மிகவும் சிறப்பு. இதற்கு நல்ல நிலையில் இருக்கக்கூடிய ஒரு தேங்காய் வேண்டும். அந்த தேங்காயை தண்ணீரில் கழுவி சுத்தம் செய்து கொள்ளுங்கள். வீட்டு பூஜை அறையில் ஒரு சிறிய அகல் விளக்கை வைத்து அதற்கு மேல் இந்த தேங்காயை வைத்துக் கொள்ளுங்கள். தேங்காயின் குடும்பி கிழக்கு பார்த்தவாறு இருப்பது போல் வைக்க வேண்டும். இந்த தேங்காயின் நடுப்பகுதியில் சிறிது மஞ்சளை கட்டியாக உருட்டி வைத்து விடுங்கள். அதற்கு மேல் ஒரு அகல் விளக்கை வைக்க வேண்டும். இந்த மஞ்சளை வைப்பதற்கு முக்கியமான காரணம் அகல் விளக்கு தேங்காயின் மேல் நிற்க வேண்டும் என்பதற்காக தான். மஞ்சள் கிடைக்கவில்லை என்பவர்கள் சந்தனத்தைக் கூட வைக்கலாம். அகல் விளக்கை வைத்து அதில் நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும்.
இந்த தீபமும் கிழக்கு திசை பார்த்தவாறு தான் இருக்க வேண்டும். இப்படி தீபம் ஏற்றி வைத்துவிட்டு சிவபெருமானை முழுமனதோடு நினைத்து “ஓம் சந்திரமௌலீஸ்வராய போற்றி ஓம்” என்னும் மந்திரத்தை கூறி வழிபாடு செய்ய வேண்டும். இயன்றவர்கள் 108 முறை கூறி அர்ச்சனையும் செய்யலாம். இந்த தீபம் குறைந்தது ஒரு மணி நேரமாவது எரிய வேண்டும். ஒரு மணி நேரம் கழித்து தீபத்தை குளிர வைத்து விடலாம். இந்த தீபமும் தேங்காயும் அன்று இரவு முழுவதும் பூஜை அறையில் இருக்கட்டும். மறுநாள் காலையில் பூஜை செய்ய போகும்பொழுது அந்த அகல் விளக்கை எடுத்து சுத்தம் செய்து வைத்துக் கொள்ளுங்கள். தேங்காயை சமையலுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். இப்படி தேங்காயின் மீது தீபமேற்றி சிவபெருமானை நாம் வழிபாடு செய்யும்பொழுது சிவ பெருமானின் அருளால் சகலவிதமான நன்மைகளும் உண்டாகும்.
இதையும் படிக்கலாமே: செல்வ செழிப்புடன் வாழ பைரவர் வழிபாடு
சிறப்பு வாய்ந்த இந்த ஆனி பௌர்ணமி நாளன்று இந்த தீபத்தை ஏற்றி வழிபாடு செய்ய ஆரம்பிப்பவர்கள் தொடர்ச்சியாக ஏதாவது ஒரு கோரிக்கையை மனதில் நினைத்துக் கொண்டு இத்தனை பௌர்ணமிகள் தீபம் ஏற்றுகிறேன் என்று வேண்டிக் கொண்டால் சிவபெருமானின் அருளால் அவர்களுடைய வேண்டுதல் விரைவில் நிறைவேறும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.