- Advertisement -
Homeஅழகு குறிப்புகள் | Beauty tips in Tamilஇப்படி செய்தால் வழுக்கை தலையிலும் முடி வளரும்.

இப்படி செய்தால் வழுக்கை தலையிலும் முடி வளரும்.

- Advertisement -

உடல் ஆரோக்கியமாக இருக்கிறது என்பதற்கு சான்றே நம்முடைய வெளித்தோற்றம் சிறப்பாக இருப்பது தான். அதனால் தான் அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்று கூறுகிறார்கள். அதே போல் தான் முடி சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படுவதற்கும் நம்முடைய ஆரோக்கியம் முக்கியமான காரணமாக விளங்குகிறது. இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் எந்த முறையை பின்பற்றினால் வம்சாவளியாக வரக்கூடிய வழுக்கை தலையிலும் முடி வளரும் என்றுதான் பார்க்கப் போகிறோம்.

முடி உதிர்தல் பிரச்சனையை நாம் கவனிக்காமல் விட்டுவிட்டால் அது பிற்காலத்தில் வழுக்கை ஏற்படுவதற்கு கூட வாய்ப்பாக அமைந்துவிடும். சாதாரணமாக வழுக்கை விழுந்தாலே அதில் முடி முளைக்காது என்றுதான் கூறப்படுகிறது. அதேசமயம் வம்சாவளியாக சிலருக்கு வழுக்கை ஏற்படும். அப்படிப்பட்டவர்களுக்கு முடி வளர்வதற்குரிய வாய்ப்புகள் மிகவும் குறைவாகவே இருக்கிறது என்றுதான் கூறப்படுகிறது. ஆனால் இந்த முறையை பின்பற்றி செய்யும் பொழுது வம்சாவளியாக ஏற்பட்ட வழுக்கையாக இருந்தாலும் அதில் முடி வளரும்.

- Advertisement -

நம் உடலில் இருக்கக்கூடிய டிஎன்ஏ வை பொறுத்துதான் வம்சாவளி அமைகிறது என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட டிஎன்ஏவில் ஏதேனும் குறைகள் இருந்தால் அந்த குறைகளை நிறைவு செய்வதற்கு நமக்கு உதவக்கூடிய பொருள்தான் வில்வ இலை பொடி. வம்சாவளியாக வழுக்கை ஏற்படும் நபர்கள் தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன் அளவிற்கு வில்வ இலை பொடியை சுடுதண்ணீருடன் எடுத்துக்கொண்டு வரும்பொழுது டிஎன்ஏவில் இருக்கும் குறைபாடுகள் நீங்கி நன்மைகள் உண்டாகும் இது பரம்பரை வழுக்கை ஏற்படுபவர்கள் மட்டும் சாப்பிட வேண்டும் என்று இல்லாமல் அனைவருமே எடுத்துக் கொள்ளலாம். இந்த வில்வ பொடியால் பலவிதமான நன்மைகள் உடலுக்கு ஏற்படுகிறது.

அடுத்ததாக வாரத்தில் ஒரு நாள் தலைக்கு வாழைப்பழத்தை நன்றாக மாசித்து பேக் போட வேண்டும். அவ்வாறு பேக் போடும்போது சிலருக்கு அரிப்போ, எரிச்சலோ ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது. அப்படி இருந்தாலும் அதை பொறுத்துக் கொண்டு ஒரு மணி நேரம் அந்த பேக்கை தலையில் வைத்து பிறகு குளிர்ந்த நீரால் தலை குளிக்க வேண்டும். வாழைப்பழத்தில் பல அற்புதமான சக்திகள் இருப்பதால் அது தலையில் இருக்கக்கூடிய சருமத்தின் குறைபாடுகளை நீக்கி சருமத்தின் இருக்கக்கூடிய அடைப்புகளை நீக்கி அதற்குள் இருக்கும் முடியின் வேர்க்கால்களை தூண்டிவிட்டு முடி வளர்ச்சியை ஏற்படுத்த உதவுகிறது.

- Advertisement -

அடுத்ததாக தலைமுடி வளர்ச்சிக்கு உதவக் கூடிய எண்ணெயை எப்படி தயார் செய்வது என்று பார்ப்போம். ஒரு லிட்டர் நல்லெண்ணையை எடுத்து ஒரு இரும்பு கடாயில் ஊற்றி அது நன்றாக கொதிக்க ஆரம்பித்த உடன் அதில் பற்படாகம் – 250 கிராம், சின்ன வெங்காயம் – 2 ,கார்மேக அரிசி – 100 கிராம் போன்றவற்றை சேர்த்து நன்றாக கொதிக்க விட வேண்டும். 15 நிமிடம் கழித்து அடுப்பை அணைத்துவிட்டு அந்த எண்ணெய் நன்றாக ஆரிய பிறகு சுத்தமான அரை லிட்டர் தேங்காய் எண்ணெயை அந்த எண்ணையுடன் கலந்து மூன்று நாட்கள் வெயிலில் காயவைத்து பிறகு அந்த எண்ணெயை தலைக்கு தேய்க்கும் பொழுது தலையில் முடி வளர்ச்சி என்பது அதிகரிக்கும்.

இதையும் படிக்கலாமே: முக அழகைத் தரும் ரோஜாப்பூ ஃபேஸ் பேக்.

வாழைப்பழ பேக்கை வாரத்திற்கு ஒருநாளும் மீதமிருக்கும் ஆறு நாட்களில் இந்த எண்ணையையும் பயன்படுத்தி தினமும் வில்வ இலை பொடியை அருந்தி வருபவர்களுக்கு கண்டிப்பான முறையில் எப்பேர்ப்பட்ட வழுக்கையாக இருந்தாலும் அதில் முடி வளர ஆரம்பிக்கும். பொறுமையுடன் நிதானமாக இந்த முறையை தொடர்ந்து பின்பற்றி வந்தால் போதும்.

சற்று முன்