பண விரயத்தை விட மிகப் பெரிய விரயம் என்னவென்று தெரியுமா? இந்த விரயத்தை மட்டும் செய்யவே செய்யாதீர்கள் பெரிய இழப்பை சந்திப்பீர்கள்!

cash-anger
- Advertisement -

இந்த உலகில் பணம் தான் எல்லா விஷயத்திலும் பெரும்பங்கு வகிக்கிறது. பணம் இல்லை என்றால் எதையும் வாங்க முடியாது, எதையும் நாம் அனுபவிக்கவும் முடியாது என்கிற நிலை ஏற்பட்டுவிட்டது. இப்படியான சூழ்நிலையில் பண விரயத்தையும் விட எது நமக்கு பெரிய விரயமாக இருக்கக்கூடும்? அதனால் ஏற்படக்கூடிய இழப்புகள் என்னென்ன? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் நாம் அலச இருக்கிறோம்.

எல்லா விஷயத்திலும் ஆட்கொண்டு இருக்கும் இந்த பணத்தை விட, விரயம் செய்யக் கூடாத ஒரு முக்கியமான விஷயம் என்றால் அது கோபம் தான். கோபத்தை விரயம் செய்தால் உங்களுடைய சக்திகள் அனைத்தும் நீங்கள் இழக்க நேரிடும். ஒருவரிடம் நீங்கள் கோபத்தை காண்பிக்க வேண்டும் என்றால் உங்களுடைய மொத்த சக்தியும் உத்வேகத்துடன் வெளிப்படுகிறது. இதனால் ஏற்படக்கூடிய அதிர்வுகள் உங்களுடைய மனதை நிம்மதி இல்லாமல் செய்துவிடுகிறது. நீங்கள் அவர்கள் செய்த தவறுக்காக உங்களுக்கு நீங்களே கொடுத்துக் கொள்ளும் தண்டனை தான் இந்த கோபம் ஆனது என்பதை மனதில் கொள்ள வேண்டும். கோபத்தை விரையம் ஆக்கினால் தேவையில்லாத இழப்புகளையும் சந்திக்க நேரும்.

- Advertisement -

எத்தனையோ பேர் கோபப்பட்டு பல விஷயங்களை இழந்ததை நாம் கேள்விப்பட்டிருப்போம் அல்லது நாமே நம்முடைய அனுபவத்தில் நம்முடைய கோபத்தால் பலவற்றை இழந்திருப்போம். இருப்பினும் அந்த கோபத்தை கட்டுப்படுத்த முடியாமல் தவிப்பவர்கள் ஏராளமானோர் மன இறுக்கத்திற்கும், மன உளைச்சலுக்கும் ஆளாவது உண்டு.

கோபத்தால் நாம் சாதிக்கப் போவது எதுவுமே கிடையாது. மாறாக பொறுமையாக இருந்து பார்த்தால் எதையும் நாம் சாதிக்க முடியும். இது கோபப்படும் போது அந்த நேரத்தில் நமக்கு தெரிய தெரியாவிட்டாலும், நிதானமாக இருக்கும் பொழுது கோபப்படாமல் இருக்க வேண்டும் என்கிற மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளலாம்.

- Advertisement -

நீங்கள் கோபத்தை வெளியில் கொட்டாமல் உள்ளுக்குள்ளேயே வைத்து இருந்தாலும் அது மன அழுத்தத்தை ஏற்படுத்தும். மூளை நரம்புகளை பாதிக்கும். வெளிப்படுத்தும் கோபத்தை விட, இது போல உள்ளுக்குள் கோபத்தையும், வன்மத்தையும் வைத்துக் கொண்டிருந்தால் அது மற்றவர்களுக்கு எந்த விதத்திலும் பாதிப்பு இல்லை, அது உங்களுக்கு நீங்களே கொடுத்துக் கொள்ளக்கூடிய மிகப்பெரிய தண்டனை ஆகும் எனவே தேவையற்ற வன்மம், கோபம், குரோதம் போன்றவற்றை போட்டு மனதில் அழுத்தி கொள்ளாமல் இருப்பது நல்லது.

பண விரயத்தை விட நீங்கள் ஒவ்வொரு முறை கோபப்படும் போதும் உங்களுடைய சக்தியை இழக்கிறீர்கள். இதனால் வாழ்நாளில் கொஞ்ச ஆயுளையும் இழந்து கொண்டிருக்கிறீர்கள் எனவே கோப விரயம் என்பது பண விரயத்தை விட மிகப் பெரிய விரயமாக கருதப்படுகிறது. எந்த ஒரு சூழ்நிலையிலும் கோபப்படாமல் மனதை அமைதியாக வைத்திருக்க வேண்டும். கோபப்பட வேண்டும் என்கிற எண்ணத்தை விட, அந்த விஷயத்தில் நீங்கள் வெற்றி அடைய வேண்டும் என்கிற வைராக்கியத்தை அதிகமாக்கிக் கொள்ளுங்கள். வைராக்கியம் நமக்கு தெம்பையும், நம்பிக்கையையும் அதிகரிக்கச் செய்யும். ஆனால் கோபம் என்பது நம்முடைய உடல் ஆரோக்கியத்தையும், மன ஆரோக்கியத்தையும் சீரழிக்க கூடிய தேவையற்ற விரயமாகும். எனவே கோபத்தை இனியும் விரயம் செய்யாதீர்கள்! இதனால் பாதிக்கப்படுவது எதிராளி அல்ல, நீங்கள் தான் என்பதை அறிவுபூர்வமாக உணர வேண்டும்.

- Advertisement -