வாழ்க்கையில் முன்னேற தாமதமோ, தடையோ இனி இருக்காது. எப்போதும் உங்களுடைய கையில் இந்த 2 பொருட்களை வைத்துக் கொண்டால்.

pachai-karpooram
- Advertisement -

யாரிடமாவது போய், வாழ்க்கையில் உங்களுக்கு ஏன் இவ்வளவு கஷ்டம் என்று கேட்டு பாருங்களேன். என்னுடைய வாழ்க்கையில் அந்த பிரச்சனை, இந்த பிரச்சனை என்று அடுத்தவர்களை குறை சொல்லுவார்கள். ஆனால் நம்முடைய வாழ்க்கையில் முன்னேற்றம் இல்லாமல் போனதற்கு அடுத்தவர்களை கை நீட்டி ஒருபோதும் நாம் குற்றம் சொல்லவே கூடாது. நம்முடைய வாழ்க்கை வீணா போனதற்கு காரணம் நாம் தான். நாம் முயற்சி எடுக்காமல் சோம்பேறித்தனமாக இருந்தது தானே தவிர, நம்முடைய வாழ்க்கை கெட்டுப் போவதற்கு என்றுமே அடுத்தவர்கள் காரணமாக இருக்க மாட்டார்கள். முதலில் இதை நீங்கள் மனதில் நிறுத்திக் கொள்ளுங்கள்.

உங்கள் வாழ்க்கையை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என்றால், நீங்கள் தான் கஷ்டப்பட வேண்டும். உங்களுக்காக அடுத்தவர்கள் யாரும் கஷ்டப்படவே மாட்டாங்க. ஆகவே உங்களுடைய கனவுகளை நினைவாக்க நீங்கள் தான் அயராது உழைக்க வேண்டும். யார் என்ன சொன்னாலும், எந்த தடை வந்தாலும் எல்லாவற்றையும் தூக்கி போட்டுவிட்டு இலக்கை நோக்கி செல்ல வேண்டும். அவ்வளவுதான்.

- Advertisement -

சரி அயராது உழைத்து கஷ்டப்பட்டும் ஜெயிக்க முடியவில்லை. என்னுடைய கனவு நினைவாக எவ்வளவோ போராட்டங்களை கடந்து வந்து விட்டேன். வாழ்க்கையை தொடங்கிய புள்ளியில் தான் நிற்கின்றேன். மேலும் மேலும் முன்னேறுவதற்கு வாய்ப்புகளும் வரவில்லை. சந்தர்ப்பங்களும் கிடைக்கவில்லை. எல்லாவற்றிலும் தாமதம் இருக்கிறது. எல்லாவற்றிலும் தடைகள் இருக்கிறது. என்னதான் செய்வது இந்த தடைகளை உடைப்பதற்கு ஆன்மீகத்தில் ஏதாவது பரிகாரம் இருக்கிறதா என்று கேட்பவர்களுக்கு இதோ ஒரு எளிமையான ஆன்மீகம் சொல்லும் பரிகாரம்.

வாழ்க்கையில் தாமதம் இல்லாமல் தடைகள் இல்லாமல் முன்னேற செய்ய வேண்டியவை:
முன்னேற்றத்தில் வரும் தடைகளை தகர்த்தெறிய உங்களுடைய கையில் எப்போதும் நீங்கள் இந்த இரண்டு பொருட்களை வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு வெள்ளை துணியில் வைத்து மடித்து பர்சிலோ அல்லது ஹேண்ட்பேகிலோ வைத்துக் கொண்டால் கூட போதும். சிறிய துண்டு பச்சை கற்பூரம், இரண்டு துளசி இலைகள். அவ்வளவுதான்.

- Advertisement -

தினமும் பச்சைக் கற்பூரத்தை புதுசாக மாற்ற தேவை இல்லை. உங்களுடைய வீட்டிலேயே துளசி செடி இருந்தால் தினமும் இரண்டு இலைகளை புதுசாக பறித்து வைத்துக் கொள்ளலாம். இல்லையென்றால் வாரம் ஒரு முறை இந்த துளசி இலையை மட்டும் மாற்றிக் கொள்ளுங்கள். பச்சை கற்பூரத்தில் வாசம் நீங்கி கரைந்து போய்விட்டால் மீண்டும் புதியதாக பச்சை கற்பூரத்தை வைத்துக் கொள்ளலாம்.

இந்த இரண்டு பொருட்களும், இந்த இரண்டு பொருட்களில் இருக்கும் வாசமும் உங்களை சுற்றி இருக்க நீங்கள் எந்த ஒரு விஷயத்தையும் சுறுசுறுப்பாக செய்ய தொடங்கி விடுவீர்கள். சோம்பேறித்தனம் உங்களை நெருங்காது. இந்த வாசம் கெடுதலை உங்கள் பக்கத்தில் நெருங்கவே விடாது. ஏதாவது புதிய முயற்சிகள் மேற்கொண்டாலும் புதிய வேலைக்கு சென்றாலும் அல்லது இருக்கின்ற வேலையை சிறப்பாக செய்ய வேண்டும் என்றாலும் இந்த வாசம் உங்களுக்கு ஒரு ஊக்கத்தை கொடுக்கும். மன குழப்பத்தை நீக்கிவிடும். நிறைய வாய்ப்புகள் தானாக வீடு தேடி வரும். செய்யும் வேலையை தெளிவாக ஊக்கத்தோடு செய்யும்போது வெற்றி சீக்கிரம் நம் பக்கத்தில் வந்துவிடும்.

இதையும் படிக்கலாமே: அடைக்கவே முடியாத கடனையும் படிப்படியாக அடைக்க நிலை வாசல் படியில் செய்ய வேண்டியது என்ன தெரியுமா? இதை செய்தால் கோடி கடனும் கரைந்தே போகுமே!

இவ்வளவுதான் இது ஒரு எளிமையான சூட்சமமான பரிகாரம்தான். நல்ல வாசம் நமக்கு நல்லதை மட்டும் தானே செய்யும். அதிலும் பச்சை கற்பூரத்திலும் துளசி இலையிலும் இருக்கக்கூடிய பாஸிடிவ் எனர்ஜியை வார்த்தைகளால் சொல்லி முடித்து விட முடியாது. ஒரு பத்து நாட்கள் தொடர்ந்து இந்த இரண்டு பொருட்களையும் கையோடு வைத்து உங்களுடைய முயற்சிகளை மேற்கொண்டு பாருங்கள். நிச்சயம் வாழ்க்கையில் நல்லது மட்டுமே நடக்கும். நீங்களும் தாமதம் இல்லாமல் தடைகள் இல்லாமல் வாழ்க்கையில் முன்னேறி செல்வந்தர்கள் ஆகலாம் என்ற இந்த தகவலோடு இன்றைய பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -