சுவையான வீச்சு பரோட்டா வீட்டிலேயே செய்வது எப்படி?

parotta1
- Advertisement -

சாதாரணமாக பரோட்டா செய்வதை விட இந்த வீச்சு பரோட்டா செய்வது ரொம்ப ரொம்ப ஈஸிங்க. சிலோன் பரோட்டா என்றும் சிலர் இதை சொல்லுவார்கள். சிலோன் பக்கத்தில் இருந்து தான் இந்த பரோட்டாவை நாமும் கற்றுக் கொண்டோம். முட்டை சேர்க்காமல் தான் இன்று வீச்சு பரோட்டா செய்யப் போகின்றோம். நம்முடைய வீட்டிலேயே மிக மிக எளிமையான முறையில் இந்த பரோட்டாவை செய்து சுடச்சுட சாப்பிட்டு ருசிக்கலாம். இதற்கு சைட் டிஷ் ஆக சால்னா, சைவ குருமா, அசைவ குருமா, குழம்பு என்று உங்கள் விருப்பம் போல எதை வேண்டுமென்றாலும் பரிமாறிக் கொள்ளலாம். வாங்க இந்த அருமையான ரெசிபியை எப்படி செய்யறதுன்னு நாமும் தெரிந்து கொள்வோம்.

செய்முறை

ஒரு அகலமான பவுலை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் மைதா மாவு – 250 கிராம், சர்க்கரை – 1/2 ஸ்பூன், உப்பு – 1/2 ஸ்பூன், காய்ச்சி ஆற வைத்த பால் – 1/4 கப், கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் விட்டு இதை சாப்டான மாவு பதத்தில் பிசைந்து கொள்ள வேண்டும்.

- Advertisement -

ரொம்பவும் தண்ணீர் ஊற்றி விட வேண்டாம். அதேசமயம் மாவு ரொம்பவும் கட்டியாகவும் பிசைய கூடாது. பிசைந்த இந்த மாவை ஒரு மேடையின் மேல் வைத்து, உங்கள் உள்ளங்கைகளை மாவில் அழுத்தம் கொடுத்து, இழுத்து இழுத்து பரோட்டாவுக்கு மாவு பிசைவது போல 10 நிமிடங்களாவது கட்டாயம் பிசைய வேண்டும். அப்போதுதான் பரோட்டா சாப்டா கிடைக்கும்.

பத்து நிமிடங்கள் மாவை பிசைந்து வைத்த பிறகு, இந்த மாவின் மேலே 2 டேபிள் ஸ்பூன் எண்ணெயை ஊற்றி, மீண்டும் 5 நிமிடங்கள் பிசைய வேண்டும். கை வலிக்கத்தான் செய்யும். வேறு வழி கிடையாது. பிசைய பிசைய தான் மாவு சாஃப்ட்டாக கிடைக்கும். இந்த மாவை ஒரு பௌலில் வைத்து 3 லிருந்து 4 டேபிள் ஸ்பூன் எண்ணெயை இதன் மேலே ஊற்றி, தடவி, அப்படியே ஒரு ஈரத்துணியை போட்டு 3 லிருந்து 4 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

- Advertisement -

நான்கு மணி நேரத்திற்கு மேலே மாவு ஊறினால் கூட இன்னும் இன்னும் சாப்டாக பரோட்டா கிடைக்கும். எவ்வளவுக்கு எவ்வளவு மாவை ஊற வைக்கிறீர்களோ, அவ்வளவுக்கு அவ்வளவு சாஃப்ட் பரோட்டா கிடைக்கும். (இரவு பரோட்டா ரெசிபி செய்வதாக இருந்தால், காலை 12 மணி போல மாவை பிசைந்து வைத்து விடுங்கள்.)

ஊறிய இந்த மாவை எடுத்து 4 லிருந்து 5 உருண்டைகளாக தயார் செய்து எடுத்துக் கொள்ளுங்கள். இந்த உருண்டைகளை பலகை மேல் வைத்து, உங்கள் கையாலேயே இழுத்துவிட்டால் மெல்லிசாக வீச்சு பரோட்டா போல நமக்கு கிடைக்கும். கையால் தீட்ட முடியவில்லை என்றால், சப்பாத்தி கட்டையால் கூட தீட்டிக் கொள்ளலாம். ஆனால் கையால் இழுத்து இழுத்து தீட்டி விட்டால் தான் வீச்சு புரோட்டா மெல்லிசாக கிடைக்கும். இப்படி வீச்சு பரோட்டாவை தேய்க்கும் போது நடுநடுவே ஓட்டை விழுந்தால் கூட கவலைப்பட தேவையில்லை.

- Advertisement -

மெலிசான பரோட்டாவுக்கு நடுவில் கொஞ்சமாக எண்ணெய் தடவி. இந்த மாவை நான்கு பக்கங்களும் மடிக்க வேண்டும். கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தை பார்த்தால் உங்களுக்கே தெரியும். மாவை மடித்து அப்படியே எடுத்து சப்பாத்தி கல்லில் போட்டு மிதமான தீயில் பரோட்டாவை இரண்டு பக்கமும் திருப்பிப் போட்டு பொன்னிறமாக சிவக்க விட்டு எடுத்தால் சூப்பரான வீச்சு பரோட்டா தயார்.

இதையும் படிக்கலாமே: என்னங்க காலிஃ பிளவர் 65 எப்படி செஞ்சாலும் மொறு மொறுன்னு வரலையா? இந்த டிப்ஸ் பாலோ பண்ணி செய்யுங்க, இனி காலிஃ பிளவர் 65 எப்படி செய்யணும் உங்க கிட்ட தான் டிப்ஸ் கேப்பாங்க.

சூப்பரான ஒரு சிக்கன் கிரேவி, மட்டன் கிரேவி அல்லது சால்னா தொட்டு இதை சாப்பிட்டு பாருங்கள். சொல்ல வார்த்தையே கிடையாது. இந்த ரெசிபி பிடிச்சிருந்தா உங்க வீட்ல மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -