ஜோதிடம் : இந்த ஆண்டு எந்த ராசியினருக்கு சொந்த வீடு, நிலம் அமையும்

12-rasi

இல்லம் என்பது ஒரு கோயில் என்று நம் முன்னோர்கள் கூறுகின்றனர். ஒரு மனிதன் நாள் முழுவதும் எங்கு அலைந்து திரிந்தாலும் இறுதியில் அவனுக்கென்று இருக்கும் வீடு அல்லது இல்லத்திற்கு சென்றாக தான் வேண்டும். அந்த இல்லம் தான் அவனின் அடையாளமாக இருக்கிறது. பொதுவாக அனைவருக்குமே சொந்த வீடு கட்டிக் கொள்ள வேண்டும் என்கிற ஆசை இருக்கும். இந்த ஆண்டு எந்தெந்த ராசியினர் புதிய வீட்டை கட்டி குடிபோகும் யோகம் பெறுவார்கள் என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்:

Mesham Rasi

மேஷ ராசியினருக்கு 2019 ஆம் ஆண்டு வரவிருக்கும் மாதங்களில் பல நன்மையான பலன்கள் உண்டாகும். புதிய வீடு வாங்க வேண்டும் என்கிற பலரின் ஆசைகளுக்கான செயலாக்கம் இந்த ஆண்டு தொடங்கும். பலருக்கு வீடு கட்ட முடியாவிட்டாலும் எதிர்காலத்தில் வீடு கட்டுவதற்காக வீட்டு மனை வாங்கும் யோகம் ஏற்படும். ஒருசிலருக்கு வாழ்க்கைத் துணை வழியாக வரும் தனலாபம் மூலம் தங்களின் புது வீட்டு கனவை நிறைவேற்றிக் கொள்ளும் சூழல் வாய்க்கும். சிலர் எல்லோரும் வியக்கும் வகையில் அழகான ஆடம்பரமான வீட்டை கட்டும் முயற்சியை மேற்கொள்வீர்கள்.

துலாம்:

Thulam Rasi

- Advertisement -

துலாம் ராசியினருக்கு இந்த 2019 ஆம் ஆண்டு மிகச் சிறப்பான ஆண்டாக இருக்கப் போகிறது. இந்த ராசியினருக்கு இந்த ஆண்டு தங்களின் புதிய வீட்டு கனவு நிறைவேறுவதற்கான சூழ்நிலை உண்டாகும். ஒரு சிலர் தங்கள் முன்னோர்கள் வாழ்ந்த ஊரிலேயே ஆடம்பரமான வீட்டை கட்டுவார்கள். சிலர் தாங்கள் வாழ்ந்த பழைய வீட்டை இடித்து விட்டு புதிதாக, மிகவும் ஆடம்பர முறையில் வீட்டைக் கட்டுவீர்கள். வீடு கட்டுவதற்கான வங்கிக் கடன்களும் இவர்களுக்கு உடனடியாக கிடைக்கும். திட்டமிட்ட செலவிற்குள்ளாக வீட்டை கட்டி முடிப்பீர்கள். இதற்கு முன் வாழ்ந்த வீட்டை விட பல வசதிகள் நிறைந்த வீடாக புதிய வீட்டை கட்டுவீர்கள்.

கும்பம்:

Kumbam Rasi

எதையும் திட்டமிட்டு செய்து முடிக்கும் கும்பம் ராசியினர் இந்த ஆண்டு தொடக்கத்திலேயே புதிய வீடு கட்டுவதற்கான முயற்சிகளை மேற்கொள்வார்கள். ஒரு சிலர் வீட்டு மனைகளை வாங்கும் யோகம் பெறுவார்கள். நிலம் வாங்குதல், வீடு கட்டுதல் போன்றவற்றில் இவ்வளவு காலம் நிலவி வந்த தடைகளும், தாமதங்களும் விலகும். சிலருக்கு தாங்கள் விரும்பிய இடத்தில் வீட்டுமனை அமைந்து அங்கேயே வீடு கட்டி குடியேறும் யோகம் ஏற்படும். புதிய வீடு கட்டுவதற்காக பிறரிடம் கடன் வாங்காமல் உங்களுடைய சொந்த உழைப்பின் மூலம் வந்த பணத்தைக் கொண்டும், உங்கள் வாழ்க்கைத் துணையின் மூலம் வந்த பணத்தை கொண்டும் வீட்டை கட்டி முடிப்பீர்கள். பிறர் பார்த்து வியக்கும் வண்ணம் நல்ல வசதிகள் மிக்க வீடாக கட்டி முடிப்பீர்கள்.

இதையும் படிக்கலாமே:
இந்த ஆண்டு செய்யும் வேலைகளில் கவனமாக இருக்க வேண்டிய ராசியினர் யார்

இது போன்று மேலும் பல ஜோதிடம் சார்ந்த குறிப்புக்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Veedu kattum rasigal in Tamil. It is also called as 12 rasis in Tamil or Sondha veedu jothidam in Tamil or Jothida palangal in Tamil or Veedu kattum yogam yarukku in Tamil.