இதிலிருந்து 1 செங்கல் கிடைத்தால் கூட போதும். ஒரே வருடத்தில் சொந்த வீடு கட்டும் யோகம் உங்களை தேடிவரும்.

ganapathi1
- Advertisement -

ஒரு செங்கல்லை வைத்து வீடு கட்டி விட முடியுமா என்று கேட்டால், நிச்சயமாக முடியும். நம்பிக்கையோடு சேர்ந்த விடாமுயற்சி இருந்தால், ஒரு செங்கல் கிடைத்தாலும் அதை வைத்து வீடு கட்ட முடியும் என்பது சாத்தியமே, அது எப்படி என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். வீடு கட்டுவதற்கு உங்களுடைய ஜாதக கட்டத்தில் அமைப்பு இல்லை என்றாலும், பரவாயில்லை. வீடு கட்ட வேண்டியே ஆக வேண்டும் என்ற ஆசை, விடாமுயற்சி அதற்கான பணத்தை சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டும் இருந்தால் போதும். உங்களுடைய நம்பிக்கைக்கு பக்கபலமாக ஆன்மிக ரீதியாக இந்த ஒரு கல்லை வைத்து வழிபாடு செய்து வரும் பட்சத்தில், உங்களுக்கு வரும் தடைக்கற்கள் படிக்கற்களாக மாறும். சரி, நமக்கு வீடு கட்டும் யோகத்தை தரக்கூடிய அந்த ஒரு கல் எந்த கல் என்பதை இப்போது பார்த்து விடுவோமா.

homam

ஒரே ஒரு செங்கல் தான் அது. ஆனால் அது கடையிலிருந்து நீங்கள் காசு கொடுத்து வாங்கிய செங்கலாக இருக்கக் கூடாது. கிரகப்பிரவேசம் செய்யும் போது, அந்த வீடுகளில் கணபதி ஹோமம் நடத்தப்படும். அதற்கு செங்கலை அடுக்கி வைத்து கணபதி ஹோமத்தை செய்வார்கள். அந்த செங்கலில் இருந்து, ஒரு செங்கலை மட்டும் உங்கள் வீட்டிற்கு எடுத்து வந்து, உங்கள் வீட்டு பூஜை அறையில் வைத்து நீங்களும் வீடு கட்ட வேண்டும் என்ற வேண்டுதலை, அந்த விநாயகரிடம், உங்கள் குல தெய்வத்திடம் வைத்தாலே போதும். நிச்சயமாக உங்களுக்கு வீடு கட்டும் யோகம் கிடைக்கும்.

- Advertisement -

இதுதவிர கோவில்களில் கணபதி ஹோமம் செய்யும்போது, கோவில்களில் கும்பாபிஷேகம் செய்யும்போது, அங்கு ஹோமம் நடத்த பயன்படுத்தும் கற்கள் கிடைத்தாலும், நீங்கள் உங்களுடைய வீட்டில் அந்த கல்லை கொண்டு வந்து பூஜை அறையில் வைத்து தொடர்ந்து வழிபாடு செய்து வந்தால், சீக்கிரமே வீடு கட்டும் யோகம் உங்களுக்கு கிடைக்கும்.

Homam

வீடுகளில் ஹோமம் நடத்த பயன்படுத்திய செங்கல்லை அவ்வளவு சுலபமாக வெளி ஆட்களுக்கு கொடுக்கமாட்டார்கள். தங்களுடைய வீட்டிலேயேதான் அதை பத்திரப்படுத்தி வைத்துக் கொள்வார்கள் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. ஆனால் உங்களுடைய வீட்டில் நீங்கள் ஹோமம் நடத்தி இருந்தால், அப்படி ஒரு செங்கலை நீங்கள் வைத்திருந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு உங்கள் உறவினர்களுக்கோ அந்த செங்கலை தாராளமாகக் கொடுக்கலாம். உங்கள் வீட்டு ஐஸ்வர்யம் ஒரு துளி அளவும் குறைவதற்கு வாய்ப்பு கிடையாது.

- Advertisement -

நீங்கள் கொடுத்த கல்லின் மூலம் ஒருவர் சொந்த வீடு கட்டி தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கும் பட்சத்தில், அது உங்களுக்கு மேலும் புண்ணியத்தை சேர்க்கும் என்பதுதான் உண்மை. உங்களுடைய வீட்டில் இப்படி கல் வைத்து இருந்தால், நீங்கள் அடுத்தவர்களுக்கு தாராளமாகக் கொடுங்கள். மனதார அவர்களுக்கும் நன்மை நடக்க வேண்டும் என்று நினைத்து, கொடுக்கும் பட்சத்தில் உங்களுக்கு எந்த கஷ்டமும் வராது என்பதையும் இந்த இடத்தில் நாம் பதிவு செய்ய வேண்டும்.

house

நிறைய கோவில்களில் யாகம் நடத்திய செங்கற்கள் கட்டாயம் இருக்கும். நீங்கள் கோவில் உரிமையாளரிடம் அனுமதி கேட்டால், அவர்களுடைய அனுமதியோடு ஒரு கல்லை வாங்கி வந்து உங்களுடைய வீட்டில் வைத்து வழிபாடு செய்வது நல்லது. எப்படி வழிபாடு செய்வது? ஒரு தட்டின் மேல் தான் கல்லை வைக்கவேண்டும்.

- Advertisement -

தரையில் வைக்கக்கூடாது. பூஜை அறையில் அந்த கல்லை வைத்துக் கொள்ளுங்கள். வாரம் தோறும் வரும் வியாழக்கிழமைகளில் கல்லை துடைத்து மஞ்சள் குங்கும பொட்டு வைத்து, வெள்ளிக்கிழமை தோறும் சாதாரணமாக வீட்டில் எப்படி பூஜை செய்வீர்கலோ, அப்படி பூஜை செய்து இந்த செங்கல்லுக்கும் தீப, தூப ஆராதனை காட்டி, நீங்கள் வீடு கட்ட வேண்டுமென்று விநாயகரின் பெயரை சொல்லி குலதெய்வத்தின் பெயரைச் சொல்லி வேண்டுதல் வைக்க வேண்டும். அவ்வளவு தான். நிச்சயமாக நீங்கள் வீடு கட்டும் செங்கற்களோடு, பூஜை செய்த இந்தக் கலையும் வைத்து வீடு கட்டுவீர்கள் என்ற நம்பிக்கையோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
நீங்கள் அதீத குழப்பத்தில் இருக்கும் பொழுது சரியான முடிவை எடுக்க கால் கட்டை விரல்களை இப்படி செய்தால் போதுமே!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -