நீங்கள் அதீத குழப்பத்தில் இருக்கும் பொழுது சரியான முடிவை எடுக்க கால் கட்டை விரல்களை இப்படி செய்தால் போதுமே!

kuladheivam-foot

நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விஷயத்திற்காக அனுதினமும் போராடிக் கொண்டிருப்போம். அப்படி போராடிக் கொண்டிருக்கும் விஷயங்களில் பலவும் சரியாகத் தான் இருக்கிறதா? என்பது நமக்கு தெரிவதில்லை. ஏதாவது ஒரு குழப்பமான சூழ்நிலையில் நாம் என்ன முடிவு எடுப்பது? என்று தெரியாத பொழுது நமக்கு துணையாக நிற்பது நம் வழி வழியாக நம் குலத்தை காப்பாற்றும் குலதெய்வம் தான். அத்தகைய குலதெய்வத்தை மனதில் இறுத்தி இந்த விஷயத்தை செய்யும் பொழுது நமக்கு எது சரியோ! அந்த முடிவை எடுக்கக்கூடிய வரத்தை பெறலாம். அத்தகைய சக்தி வாய்ந்த தாந்த்ரீக ஆன்மீக வழிமுறையை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

kula-dheivam

மற்ற தெய்வங்கள் அனைத்தும் நம் விஷயத்தில் தலையிட நம்முடைய குல தெய்வத்தின் உடைய கட்டளையை பெறுவதாக சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. எல்லா தெய்வங்களை காட்டிலும் குலதெய்வத்திற்கு தான் நம் மீது அன்பு அதிகம். அதனால் தான் எல்லா விஷயங்களிலும் குலதெய்வத்தை முன்னிறுத்தி நம் முன்னோர்கள் வழிபாடுகள் செய்து வந்தார்கள். அத்தகைய குலதெய்வத்திடம் குறி கேட்க இப்படி கால் கட்டை விரல்களை பயன்படுத்தி செய்ய வேண்டும். அது என்ன என்பதை இனி பார்ப்போம்.

நாம் எந்த ஒரு விஷயத்தில் முடிவெடுக்க முடியாமல் குழம்பி போய் இருக்கிறோமோ! அந்த விஷயத்திற்காக உங்களுடைய குல தெய்வத்தை முழுமையாக மனதிற்குள் கொண்டு வந்து அவருடைய பெயரை உச்சரித்து நம்முடைய வலது காலை பூமா தேவியின் மீது வேகமாக உதைக்க வேண்டும். அல்லது பூமாதேவியின் மீது கால் கட்டை விரல்களை அழுத்திக் கொண்டு நின்று, மனதார வேண்டிக் கொள்ள வேண்டும். உங்களுக்கு என்ன தேவையோ அதனை வேண்டிக் கொள்ளலாம்.

leg

உதாரணத்திற்கு உங்களுடைய குலதெய்வம் திருச்செந்தூர் முருகன் என்று வைத்துக் கொள்வோம். ‘ஓம் சரவணபவ’ என்கிற முருகனுடைய மந்திரத்தை உச்சரித்துக் கொள்ள வேண்டும். பின்னர் எந்த விஷயத்திற்காக முடிவு கேட்க விரும்புகிறீர்களோ! அந்த விஷயத்தை, ‘முருகா! நான் மிகவும் குழப்பமான மனநிலையில் இருக்கிறேன். எனக்கு இந்த விஷயங்கள் எல்லாம் நடந்தது. நீ தான் நல்ல வழி காட்ட வேண்டும்’. என்று கூறி விட்டு மீண்டும் ‘ஓம் சரவணபவ’ என்று மந்திரத்தை கூறி வேண்டுதலை முடிக்க வேண்டும். இப்படி செய்யும் பொழுது நம் பக்திக்கு இணங்க உடனே குலதெய்வம் ஓடோடி வருவதாக ஐதீகம் உள்ளது. ஒருமுறை செய்து பாருங்கள் உங்களுக்கே பலன் புரியும்.

- Advertisement -

குலதெய்வ வழிபாட்டிற்கு மிகவும் முக்கியமானது மனம் ஒருநிலைபடுவது தான். எதைப் பற்றிய சிந்தனையும் இல்லாமல், முதலில் குலதெய்வத்தை மனதில் கொண்டு வர வேண்டும். குலதெய்வம் தெரியாதவர்கள் பொதுவாக முருகனை குல தெய்வமாக ஏற்றுக் கொள்வது வழக்கம். எனவே முருகனை மனதில் நிறுத்தியும் இதனை செய்யலாம். குல தெய்வம் தெரிந்தவர்கள் அவரவர்களுடைய குல தெய்வத்தின் மந்திரத்தை தெரிந்து கொண்டு உச்சரிக்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

kula dheivam

வீடு, குடும்பம், மனைவி, மக்கள், தொழில், வியாபாரம், உத்தியோகம், காதல், நட்பு, சகோதரத்துவம், சொத்துக்கள், வழக்குகள் என்று எந்த விஷயத்தில் உங்களுக்கு தீர்வு கிடைக்க வேண்டும் என்றாலும் உங்களுடைய குல தெய்வத்தை அழைத்து கால்களை இப்படி வைத்து குறி கேட்கலாம். இதனால் நிச்சயமாக மனதில் ஒரு வைப்ரேஷன் உருவாகும். அந்த அதிர்வலைகள் உங்களுக்கு சரியான முடிவை எடுக்க சொல்லி தரும்.

இதையும் படிக்கலாமே
‘சிவன்’ படத்தை வீட்டில் வைத்திருக்கக் கூடாது என்று சொல்லுவதற்கு உண்மை பின்னணி என்ன? இந்த தவறை செய்தால் வீட்டில் தேவையில்லாத பாதிப்புகள் ஏற்படுமா?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.