தினம் தினம் வீட்டில் இதை மட்டும் செய்தால் போதும். கெடுதல் செய்ய வேண்டும் என்று, உங்கள் வீட்டிற்குள் நுழைபவர்களுடைய கெட்ட எண்ணங்கள் கூட, நல்ல எண்ணமாக மாறும்.

deepam

நீங்கள் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கும் சந்தோஷமான வாழ்க்கையை பார்த்து, பொறாமை கொண்டு உங்களுக்கு கெடுதல் செய்ய வேண்டும் என்று நினைத்து, கெட்ட எண்ணத்தோடு உங்களுடைய வீட்டிற்கு வருகை தருபவர்கள் நிச்சயமாக இருப்பார்கள். எல்லோருக்கும் கெட்ட குணம் இல்லை என்றாலும், ஒரு சிலர் கட்டாயமாக தீய எண்ணத்தோடு, நம் வீட்டிற்கு வருகை தருவது இயற்கைதான். அவர்களுடைய பொறாமை குணமும், ‘நீங்கள் இவ்வளவு நன்றாக வாழ்கிறீர்கள் என்று!’ அவர்கள் விடக்கூடிய பெருமூச்சும் உங்களை தாக்காமல் இருக்க தினசரி உங்களுடைய வீட்டில் நீங்கள் என்ன செய்ய வேண்டும், என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

kamakshi vilakku

செய்வினை பில்லி சூனியம் கண் திருஷ்டி இப்படி பல பெரிய பெரிய எதிர்மறை ஆற்றலை கண்டு கூட நாம் பயப்படவே வேண்டாம். உங்களுடைய வீட்டில் காலை மாலை இரண்டு வேளை இதை மட்டும் செய்தால்! நாம் எல்லோரும் அறிந்த விஷயம் தான் இது. இருப்பினும் சில பேர் தங்களுடைய அலட்சியப் போக்கினால் இதை செய்யாமல் விட்டு விடுகிறார்கள். அதன் மூலம் அவர்களுடைய வீட்டில் பல கஷ்டங்கள் வந்து சூழ்ந்து விடுகிறது.

சுற்றி வளைக்க வேண்டாம். விஷயத்திற்கு சென்று விடுவோம். தினமும் நம் வீட்டில் செய்ய வேண்டிய தீப வழிபாட்டைப் பற்றியும், தீபம் ஏற்றும் போது எந்த மந்திரத்தை உச்சரிக்க வேண்டும் என்பதைப் பற்றியும் தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். தினமும் காலை மாலை இரண்டு வேளையும் கட்டாயமாக காமாட்சி அம்மன் தீபம் ஏற்றி இறைவனை வணங்க வேண்டும். ஏன் குறிப்பாக காமாட்சியம்மன் விளக்கை சொல்லுகிறார்கள். அதில் அலைமகள், கலைமகள், மலைமகள் முப்பெரும் தேவியரும் குடி கொண்டிருப்பதாக ஐதீகம்.

kamatchi-vilakku

தினமும் காலை எழுந்து குளித்த உடன் காமாட்சியம்மன் விளக்கில் நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றி இரண்டு திரிகளை ஒன்றாக இணைத்து அந்த எண்ணெயில் போட்டு, தீபம் ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும். வீட்டில் கணவன் மனைவி இருவரும் பிரியாமல் இணைந்து இருக்க வேண்டும் என்பதைத்தான் இந்த இரட்டை திரி குறிக்கின்றது. இந்த தீபச்சுடர் எரியும் வாசம் உங்கள் வீடு முழுவதும் பரவி இருக்கும்.

- Advertisement -

இந்த வாசத்தை சுவாசிப்பவர்களுடைய மனதில் கெட்ட எண்ணம் என்பது கட்டாயமாக வராது. கெடுதல் நினைத்து உங்கள் வீட்டிற்குள் நுழைபவர்களுடையை எண்ணமும் நிச்சயமாக பலிக்காது என்பது தான் உண்மை. இதனால் தான் அந்த காலத்தில் நம்முடைய முன்னோர்கள் தீப வழிபாட்டிற்கு அதிகப்படியான முக்கியத்துவத்தை கொடுத்து வந்தனர்.

deepam

நல்லெண்ணெய் தீபத்திலிருந்து வரக்கூடிய வாசத்தை நாம் சுவாசிப்பதன் மூலம் ஆரோக்கிய ரீதியாகவும் நமக்கு பல நன்மைகள் உண்டு. அதே சமயம் ஆன்மீக ரீதியாகவும் நமக்கு பல நன்மைகள் உண்டு. நிறைய பேர் இந்த முக்கியத்துவத்தை தெரிந்து கொள்ளாமலேயே விளக்கை ஏற்றி வைப்பதன் மூலம் ‘நம் தலையெழுத்து மாறிவிடுமா’ என்று தீபம் ஏற்றும் பழக்கத்தை விட்டு விடுகிறார்கள்.

vilaku

ஒரு வீட்டில் எவ்வளவு நேரம் தீபம் எரிந்து கொண்டே இருக்கின்றதோ, அந்த வீட்டில் அவளுக்கு அவ்வளவு தீய சக்திகள் அண்டாது என்பது உண்மைதான். தீபத்தை தீப்பந்தம் போல எரிய விடாதீர்கள். சிறுதீயில் வைத்து ஒரு மல்லிகை பூ மொட்டு எந்த அளவிற்கு இருக்குமோ, அந்த அளவிற்கு தான் வீட்டில் தீபம் ஒளிர வேண்டும் என்பதும் அவசியம். மேற்சொன்ன விஷயங்களை பின்பற்றி தீப வழிபாடு செய்யும் போது மனதை ஒரு நிலைப்படுத்தி மூன்று முறை ‘தீப ஒளியே நமஹ!’ என்ற மந்திரத்தை சொல்லி தீபம் ஏற்றுவதன் மூலம் நம்முடைய இல்லறம் இனிமையாக மாறும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.