- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalவீடு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் தீர பரிகாரம்

வீடு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் தீர பரிகாரம்

- Advertisement -

வீடு என்ற இந்த இரண்டு எழுத்தில் எத்தனை பிரச்சனைகள். சொந்தமாக வீடு இருந்தாலும் பிரச்சனை, வாடகைக்கு வீடு இருந்தாலும் பிரச்சனை, வாடகை வீட்டில் தங்குபவர்களுக்கு சொந்த வீடு இல்லையே என்று பிரச்சனை, சொந்த வீட்டில் வாழ்பவர்களுக்கு வீட்டில் வாஸ்து சரி இல்லை என்ற பிரச்சினை, கையில் பணம் வைத்துக்கொண்டு நிறைய பேர் சொந்த வீடு கட்ட முடியாமல் தவிக்கிறார்கள். சில பேருக்கு கட்டும் வீட்டில் வேலைகள் பாதியிலேயே நிற்கும்.

வேலை பாதிக்கு மேல் நகரவே நகராது. இந்த வீட்டை முழுமையாக கட்டி முடிப்போமா, என்ற சந்தேகம் வந்துவிடும். அந்த அளவுக்கு பண பற்றாக்குறை இருக்கும். ஏதோ ஒரு சூழ்நிலையில் வீடு சம்பந்தப்பட்ட பிரச்சனையில் நீங்க சிக்கி இருக்கீங்க. அதிலிருந்து விடுபட வேண்டும் அதுவும் வெறும் 48 நாளில் இந்த பிரச்சனைகளுக்கு எல்லாம் தீர்வு கிடைக்க வேண்டும் என்றால் என்ன பரிகாரம் செய்வது.

- Advertisement -

பிள்ளையாரை நினைத்து இந்த பரிகாரத்தை மட்டும் செய்யுங்கள். இந்த ஒரு பொருளை கொண்டு போய் பிள்ளையார் கோவில் உண்டியலில் போட்டு விடுங்கள். உங்களுடைய வீடு சம்பந்தப்பட்ட அத்தனை பிரச்சனைகளும் விலகும். அந்த சக்தி வாய்ந்த பரிகாரத்தை, ஆன்மீகம் சார்ந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோமா.

வீடு சம்பந்தப்பட்ட பிரச்சனை தீர பரிகாரம்

வெள்ளியில் சின்னதாக வீடு வாங்க வேண்டும். உடனே பயந்துடாதீங்க. 150 ரூபாய்க்கு கூட வெள்ளி தகட்டில் வீடு பதிந்து விற்கிறார்கள். கோவில் வாசலில் உண்டியலில் போடுவதற்காக கூட இது போல வீடு கிடைக்கும். கை உரு, கால் உரு என்று சொல்லுவார்கள். நமக்கு உடம்பு சரியில்லை என்றால் கால் வலி என்றால், கால் போல உருவம் வாங்கி உண்டியலில் செலுத்துகிறேன் என்று வேண்டுதல் வைப்போம்.

- Advertisement -

அதேபோல வெள்ளியில் உங்கள் வசதிக்கு தகுந்தபடி ஒரு சின்ன வீடு வாங்கிக் கொள்ளவும். நகைகள் விற்கும் கடையில் கேட்டால் நல்ல வெள்ளியில் இந்த வீடு மிகக் குறைந்த ரூபாயிலேயே உங்களுக்கு கிடைக்கும். வெள்ளி என்ற பெயரில் எவர்சில்வர் போலியான வீடுகளும் கிடைக்கிறது. அதை நீங்கள் வாங்கக் கூடாது. ஒரிஜினல் வெள்ளியால் செய்யப்பட்ட சின்ன வீடு வாங்கி வீட்டிற்கு கொண்டு வரவும்.

ஒரு சிவப்பு நிற வெல்வெட் துணி அல்லது மஞ்சள் நிற வெல்வெட் துணி ஏதாவது வாங்கி அதை பூஜை அறையில் விரித்து, அதன் மேலே இந்த வெள்ளி வீட்டினை வைத்து 48 நாள் தினமும் அர்ச்சனை செய்ய வேண்டும் பூக்களால் அர்ச்சனை செய்ய வேண்டும். “ஓம் வாஸ்து பகவானே போற்றி போற்றி” என்று வாஸ்து பகவானை நினைக்க வேண்டும். செவ்வாய் பகவானை நினைத்து, “அங்காரகனே போற்றி போற்றி” என்ற மந்திரத்தை சொல்லி முருகப்பெருமானை நினைத்து இரண்டு பூக்களைப் போட்டு ஒரு நிமிடம் ஊதுவத்தி காண்பித்து வழிபாட்டை நிறைவு செய்து சொல்லுங்கள்.

- Advertisement -

தினமும் 48 நாள் இந்த பூஜையை செய்ய வேண்டும். 48 நாள் முடிந்தவுடன் இந்த வெள்ளி சின்ன வீட்டை கொண்டு போய், வீட்டு பக்கத்தில் இருக்கும் பிள்ளையார் கோவில் உண்டியலில் சேர்த்து விட்டு வர வேண்டும். இந்த பூஜையை செய்யும் போது உங்களுக்கு வீடு சம்பந்தப்பட்ட பிரச்சனை என்ன இருக்கிறது அது சரியாக வேண்டும் என்று பிராத்தனை வைக்க வேண்டும். அவ்வளவுதான்.

இதையும் படிக்கலாமே: 20-02-2025 தேய்பிறை அஷ்டமி வழிபாடு

இந்த வழிபாட்டை 48 நாள் செய்தாலே உங்கள் வீட்டு பிரச்சனை 48 நாளில் நிச்சயம் சரியாகிவிடும். இந்த எளிமையான பரிகாரம் மிக மிக சக்தி வாய்ந்த பரிகாரம் நம்பிக்கை உள்ளவர்கள் இதை பின்பற்றி பலன் பெறவும்.

சற்று முன்