ஈ தொல்லை, எறும்பு தொல்லையிலிருந்து இனி சுலபமாக தப்பித்துக்கொள்ளலாம். உங்கள் வீட்டை எப்போதுமே நறுமணமாக வைத்துக் கொள்ள இந்த ட்ப்ஸ் ஃபாலோ பண்ணிக்கோங்க!

kitchen
- Advertisement -

Tip No 1:
முதலில் நம் சமயலறைக்கு ஈ எறும்புகள் வருவதற்கு காரணமாக இருப்பது நாம் சமைக்கும் பொருட்களின் வாசம் தான். நீங்கள் சமைத்த ஸ்டவ்வை சமைத்து முடித்த உடனேயே சுத்தம் செய்துவிட வேண்டும். இதற்காக மிகவும் கஷ்டப்பட வேண்டாம். ஒரு சிறிய கிண்ணத்தில் கொஞ்சமாக பேஸ்டை எடுத்துக் கொண்டு, அதில் கொஞ்சம் தண்ணீரை விட்டு கரைத்துக் கொள்ளுங்கள். இந்த தண்ணீரை ஸ்டவ்வில் நான்கு முனைகளிலும் கொஞ்சமாக தெளித்து விட்டு, வெறும் ஈரத் துண்டை வைத்து தொலைத்து விட்டாலே போதும். உங்களது ஸ்டவ் பிசுபிசுப்பு இல்லாமல், எந்த உணவு வாடையும் இல்லாமல் சுத்தமாக இருக்கும். இறுதியாக காய்ந்த காட்டன் துண்டை வைத்து அடுப்பை துடைத்துக் கொள்ளலாம். 2 நிமிட வேலைதான்.

gas-stove1

Tip No 2:
வேலைக்குச் செல்லும் பெண்களுக்காக இந்த டிப்ஸ். உங்களால் விசேஷ நாட்களில் சமையலறையில் உள்ள எல்லா டப்பாக்களையும் எடுத்துப் போட்டு கழுவ முடியாது. சமையலுக்கு பயன்படுத்தும் பொருட்களை கொட்டி வைத்திருக்கும் பிளாஸ்டிக் டப்பாவாக இருந்தாலும் சரி, எவர்சில்வர் டப்பாவாக இருந்தாலும் சரி, அதை அப்படியே எப்படி சுத்தம் செய்வது?

- Advertisement -

ஒரு சிறிய கிண்ணத்தில் 1/2 ஸ்பூன் அளவு பல் துலக்கும் பேஸ்டை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் 5 டேபிள் ஸ்பூன் அளவு தண்ணீரை விட்டு, நன்றாக கரைத்து விடுங்கள். இந்த கலவையை இலேசாக காட்டன் துணியில் தொட்டு உங்கள் டப்பாக்களில் மேல்பகுதியில் துடைத்து விடுங்கள். அவ்வளவுதான். உங்கள் டப்பா பளபளப்பாக மாறிவிடும். இந்த பேஸ்டின் வாசத்திற்கு ஈ தொல்லை எறும்பு தொல்லை வராது என்பதும் குறிப்பிடத்தக்க ஒன்று. பேஸ்ட் கலந்த தண்ணீரை லேசாக தொடுங்க! நிறைய தொட்டுவிட்டால் நுரை வர ஆரம்பித்துவிடும். வெள்ளைத் திட்டுக்கள் படியும்.

paste

Tip No 3:
உங்களுடைய வீடு எப்போதும் வாசமாக இருக்க ரூம்ஸ் பிரிவைத் தான் பயன்படுத்த வேண்டும் என்ற எந்த அவசியமும் கிடையாது. துணி வாசமாக இருப்பதற்கு பயன்படுத்தும் ஃபேப்ரிக் கண்டிஷனர் இப்போதெல்லாம் 10 ரூபாய்க்கு கூட சிறிய பாக்கெட்டுகளில் கிடைக்கிறது. அதை வாங்கி கொள்ளுங்கள். இதில் உங்களுக்கு எந்த பிராண்ட் தேவையோ அந்த பிராண்டை நீங்கள் வாங்கிக் கொள்ளலாம்.

- Advertisement -

ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் எடுத்துக்கொள்ளுங்கள். 4 டேபில் ஸ்பூன் அளவு(2 மூடி) ஃபேப்ரிக் கண்டிஷனர், 1/2 லிட்டர் அளவு சுடு தண்ணியை ஊற்றி நன்றாக குலுக்கி விட்டு, ரூம்ஸ்ரேவை நீங்களே தயாரித்துக் கொள்ளலாம். இந்த ஸ்பிரே வை உங்கள் வீட்டு ஸ்க்ரீன், மேட், செருப்புகள் வைக்கும் இடம், சிங்க் அடியில், இப்படிப்பட்ட இடங்களிலெல்லாம் ஸ்பிரே செய்துவிட்டால் போதும். வீடு நறுமணத்தோடு இருக்கும். அதிக காசு கொடுத்து இனி ரூம் ஸ்ப்ரே வாங்க வேண்டிய அவசியம் கிடையாது.

silver-box

Tip No 4:
மழைக்காலம் வந்து விட்டாலே நம் செருப்பு வைக்கும், இடம் துணி வைக்கும் கபோர்டு, பீரோ இந்த இடங்களில் எல்லாம் கெட்ட வாடை வீச தொடங்கிவிடும். சில சமயங்களில் பூசனம் பிடிக்கக் கூட வாய்ப்பு உள்ளது. அதிகமாக மழை பெய்து கொண்டே இருந்தால், வெயில் இல்லாமல் இருக்கும் பட்சத்தில் நம் வீட்டில் இப்படிப்பட்ட பிரச்சனைகள் கட்டாயம் வருவதற்கு வாய்ப்பு உள்ளது.

- Advertisement -

rack

ஒரு சிறிய பிளாஸ்டிக் டப்பாவை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் ஆப்ப சோடா என்று சொல்லப்படும் சோடா உப்பை 2 டேபிள் ஸ்பூன் அளவு போட்டுக்கொள்ள வேண்டும். சிறிது சாக்பீஸ் துண்டுகளையும் இதோடு போட்டு விடுங்கள். அதன் மேலே மூன்றிலிருந்து நான்கு நாப்தலின் உருண்டைகளை போடலாம். சிலபேர் இதை பூச்சு கற்பூரம் என்று கூட சொல்வார்கள். நீங்கள் தயார் செய்த இந்த பிளாஸ்டிக் டப்பாவை திருந்த படி, உங்கள் வீட்டில் செருப்பு ஸ்டாண்ட், பீரோ கபோர்டு எல்லா இடங்களிலும் வைக்கலாம். இரண்டு, மூன்று டப்பாக்களில் தனித்தனியாக இதேபோல தயார் செய்து, ஒவ்வொரு இடங்களில் ஒவ்வொன்று வைத்துக்கொள்ளுங்கள். துணிகளில் இருந்து கெட்டவாடை அடிக்காது. பூசணம் பிடிக்காது. ஷூ, செருப்புகளில் இருந்தும் வரும் கெட்டவாடை தவிர்க்கப்படும் ட்ரை பண்ணி பாருங்க!

இதையும் படிக்கலாமே
நம்பவே முடியல! வெறும் 1 பொருளை வைத்து, இந்த பொருட்களை எல்லாம் இவ்வளவு புதுசு போல, பளபளப்பாக சுத்தம் செய்ய முடியுமா?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -