நிறைவேறாத வேண்டுதலும் உடனே நிறைவேறும். கெட்ட நேரத்திலும், நல்லதே நடக்க, 1 டம்ளர் பாலை தினமும் இறைவனுக்கு இப்படி நைவேத்தியமாக வையுங்கள்.

milk
- Advertisement -

நம்முடைய வேண்டுதல் நிறைவேற, இறைவனுக்கு காணிக்கையாக, நைவேத்தியமாக ஏதாவது ஒரு பொருளை கொடுத்து தான் ஆக வேண்டும் என்ற எந்த அவசியமும் கிடையாது. ஆத்மார்த்தமாக, நம்முடைய வேண்டுதலை நேர்மறையாக, ஆழ் மனதில் நினைத்துக் கொண்டு இருந்தாலே போதும், அந்த வேண்டுதல் நிறைவேறிவிடும். இருப்பினும் சில பேருக்கு கர்ம வினையின் காரணமாக, பாவ புண்ணிய கணக்குகள் காரணமாக, வாழ்க்கையில் முன்னேற்றத் தடை இருக்கும். அந்த சமயத்தில் என்னதான் வேண்டிக் கொண்டாலும், அந்த வேண்டுதலுக்காக பலன் கிடைக்காது.

pray

உங்களுடைய வேண்டுதலில் தடை உள்ளதா? உங்களுக்கு டைம்மே சரி இல்லையா? நீண்ட நாள் கோரிக்கையை இறைவனிடம் வைத்தும், அந்த கோரிக்கை நிறைவேறாமல் உள்ளதா? இந்த முறையில் வேண்டுதலை வைத்து பாருங்கள்! எப்படிப்பட்ட தோஷத்தையும் நீக்கக் கூடிய சக்தி 1 டம்ளர் பாலுக்கு உண்டு. அந்தப் பாலை முறைப்படி இப்படி, இறைவனுக்கு நிவேதனமாக வைத்து வேண்டுதல் வைத்தால் போதும். நிச்சயம் உங்கள் கோரிக்கை நிறைவேறும் என்ற நம்பிக்கையோடு இந்த பதிவினை தொடங்கலாம்.

- Advertisement -

மனதில் எந்தவிதமான சஞ்சலமும் இல்லாமல், வீட்டில் இருக்கும் பெண்கள் இந்த வழிபாட்டு முறையை தொடர்ந்து செய்து வரவேண்டும். பூஜை செய்ய முடியாத அந்த 5 நாட்களை தவிர்த்து விடுங்கள். உங்களுடைய வேண்டுதல் நிறைவேறும் வரை இந்த சுலபமான வழிபாட்டை ஆத்மார்த்தமாக இறைவனுக்காக செய்ய வேண்டும்.

milk

ரொம்ப சுலபமான வேண்டுதல் வைக்கும் முறை இது. ஆனால் சக்தி வாய்ந்தது. காலையில் எழுந்து சுத்தமாக குளித்துவிட்டு, புதியதாக வாங்கிய பாலை எப்பவும் போல காய்ச்சி, எச்சில் பண்ணாமல் ஒரு டம்ளர் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் 1 ஸ்பூன் நாட்டு சர்க்கரை, இரண்டு ஏலக்காய்களை தட்டிப் போட்டுக் கொள்ள வேண்டும். ஏலக்காயை பொடி செய்தும் வைத்துக் கொள்ளலாம். 1/2 ஸ்பூன் ஏலக்காயை பாலில் போட்டு, நன்றாக கலந்து வெதுவெதுப்பாக  இறைவனுக்கு நிவேதனமாக வைத்து, தீபம் ஏற்றி உங்களது வேண்டுதலை வைக்க வேண்டும்.

- Advertisement -

இந்தப் பாலைக் காய்ச்சும்போது அந்தப் பால் போல் உங்களது மனதும் வெள்ளையாக இருக்க வேண்டும். அதாவது அடுத்தவர்களுக்கு மனதளவிலும் கெடுத்தில் நினைக்கக்கூடாது. நீங்கள் மட்டும் நன்றாக வாழவேண்டும் என்று நினைக்கக் கூடாது. அடுத்தவர்களுக்கு தீயது நினைக்கக்கூடிய வேண்டுதலை எல்லாம் வைத்துக் கொள்ளக்கூடாது. நிச்சயம் நடக்காது.

milk-boiling-stove

நேர்மறை எண்ணத்தோடு, நல்ல எண்ணத்தோடு, நீங்கள் வேண்டிக்கொள்ளும் வேண்டுதல்கள் நிச்சயம் கூடிய விரைவில் நிறைவேற, இந்த முறை வழிபாடு உங்களுக்கு துணையாக நிற்கும். இந்த ஒரு டம்ளர் பாலை முடிந்தால் வெள்ளி டம்ளரில் ஊற்றி இறைவனுக்கு நைவேத்தியம் ஆக வைப்பது மேலும் சிறப்பினை தேடித்தரும்.

- Advertisement -

glass

நிவேதனமாக, படைத்த பாலை வீட்டில் இருப்பவர்கள் பூஜை முடிந்தவுடன் பிரசாதமாக குடித்து விடலாம். அதில் எந்த ஒரு தவறும் கிடையாது. எப்படிப்பட்ட கெட்ட நேரத்தையும், எப்படிப்பட்ட தோஷத்தையும் நீக்கக் கூடிய, கர்மவினைகளை போக்கக் கூடியது பால். இதனால் தான் இறைவனுக்கு அபிஷேகம் செய்வதில் பால் அபிஷேகத்திற்கு முன்னுரிமை கொடுக்கப்படுகிறது என்பதையும் நாம் இந்த இடத்தில் நினைவு கூறவேண்டும்.

pasu

உங்களால் முடிந்தால் பசுவிடமிருந்து கறந்த பசும்பாலை, புது பாலை, காலை நேரத்தில், ஒரு சிறிய கப் அளவு இறைவனுக்கு நைவேத்தியம் செய்தால் கூட போதும். காய்ச்சாத சர்க்கரை போடாத சுத்தமான கறந்த பசும்பாலை இறைவனுக்கு நிவேதனமாக வைத்து நைவேத்யம் செய்வது நமக்கு பெரிய அளவிலான நல்ல பலனை தேடித்தரும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
முன்னோர்கள் சாபம் என்பது என்ன? நம்முடைய முன்னோர்கள் நமக்கு விட்ட சாபங்கள் தான் முன்னோர் சாபமா? சிந்திக்க வைக்கும் உண்மை காரணங்கள் இதோ!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -