முன்னோர்கள் சாபம் என்பது என்ன? நம்முடைய முன்னோர்கள் நமக்கு விட்ட சாபங்கள் தான் முன்னோர் சாபமா? சிந்திக்க வைக்கும் உண்மை காரணங்கள் இதோ!

pithru-tharpanam-karudan
- Advertisement -

ஒருவர் தன் வாழ்க்கையில் நிறைய கஷ்டங்களை அனுபவிக்கிறார். இதற்கெல்லாம் என்ன காரணமாக இருக்கும்? என்று ஒரு கட்டத்தில் யோசித்து பார்க்கிறார். எத்தனை கோவில்கள் சென்றாலும், அதனுடைய அர்த்தம் மட்டும் அவருக்கு புரிவது இல்லை. சரி இதற்கெல்லாம் என்ன தான் வழி? இதில் இருந்து பிழைக்க என்ன செய்யலாம்? என்று கேட்க ஒரு ஜோசியரை போய் பார்க்கிறார். அந்த ஜோசியக்காரர், அவருடைய ஜாதகத்தை பார்த்து விட்டு, உடனே இந்த ஜாதகத்தில் ‘முன்னோர் சாபம்’ இருக்கிறது என்று கூறி விடுகிறார்.

jathagam astro

அதற்கு பரிகாரம் செய்ய, ஒரு கோவிலின் பெயரை கூறி, அந்த கோவிலுக்கு சென்று பரிகாரங்கள் செய்யுமாறு சொல்லி விட்டு அவரை அனுப்பி வைக்கிறார். அவரும் ஜோசியர் சொன்ன கோவிலுக்கு சென்று பரிகாரங்கள் செய்கிறார். ஆனால் மீண்டும் அந்த கஷ்டம் தொடரத் தான் செய்கிறது. இது எதனால் தெரியுமா? அதைத் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்..

- Advertisement -

முன்னோர்கள் சாபம் என்றவுடன் ஏதோ நாம் தான் நம் முன்னோர்களுக்கு பாவங்கள் செய்து விட்டோம் போலிருக்கிறது! அதனால் அவர்கள் கோபப்பட்டு நமக்கு சாபம் விட்டிருக்கிறார்கள்! இந்த சாபத்தை நிவர்த்தி செய்ய அவர்களை சாந்தப்படுத்த வேண்டும் என்று பித்ரு பூஜைகளும், தர்ப்பணங்களும் செய்து விசேஷ கோவில்களுக்கு பரிகாரங்களும் செய்ய செல்கிறோம்.

tharpanam

பிள்ளைகள் முன்னோர்களுக்கு வருடம் தவறாமல் பித்ரு வழிபாடு செய்தாக வேண்டும் என்பது சாஸ்திர நியதி. தவறினால் கர்மா அவர்களை தொடரும். பித்ரு பரிகாரம் செய்ய பெரிய கோவில்கள் அமைக்கப்பட்டது உண்மையில், யாரால் பெற்றோர்களுக்கு அல்லது முன்னோர்களுக்கு கர்ம காரியங்களை, பித்ரு தர்ப்பணங்களை சரியாக, முறையாக செய்ய முடியாமல் போகிறதோ! அவர்கள் அந்த கர்ம பயனை அனுபவித்துக் விடக்கூடாது என்ற காரணத்தினால் உண்டானது என்று தான் சொல்ல வேண்டும். இதனை தவறாக புரிந்து கொண்ட சிலர் முன்னோர்கள் சாபத்திற்கும் இதே பரிகாரங்களை கூறி மக்களை குழப்பி விடுகிறார்கள்.

- Advertisement -

முன்னோர்கள் சாபம் என்பது நம்முடைய முன்னோர்கள் நமக்கு விட்ட சாபங்கள் அல்ல. அவர்கள் அனுபவித்து வந்த சாபத்தின் பலனை நாமும் அனுபவிக்க வேண்டியது விதி. முன்னோர்கள் சொத்துக்கள் எப்படி வழிவழியாக அடுத்த சந்ததிகளுக்கு தொடர்கிறதோ? அதே போல் தான் அவர்கள் செய்த பாவங்களும், அதனால் பெற்ற சாபங்களும் கூட அவர்களுடைய சந்ததிகளை தொடரும் என்பது விதி பயன். இதனை ஒவ்வொருவரும் அனுபவித்து ஆக வேண்டியது கட்டாயம். இதனால் தான் பெற்றோர்கள் செய்த பாவம் பிள்ளைகளை சேரும் என்று கூறப்பட்டது.

ஈன்றெடுத்த பிள்ளைகள் என்ன தான் தவறு செய்தாலும், பெற்றோர்கள் அவர்களை சபிப்பது இல்லை. கோபத்தில் வெறும் உதடுகளால் விடும் வார்த்தைகள் உண்மையில் சாபம் உண்டாகாது என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள். மனதால் ஆத்மார்த்தமாக அவர்கள் நொந்து, வலியை அனுபவித்து விடும் சாபம் உண்மையான வலிமையான சாப உருவை பெறுகிறது.

- Advertisement -

pithru

அந்த சாபமே சாபம் வாங்கியவர்களை வாட்டி வதைக்கிறது. எவ்வளவு மோசமான கொடூர பிள்ளைகளாக இருந்தாலும் எந்த ஒரு பெற்றோரும் தன்னுடைய பிள்ளைகளுக்கு சாபம் விடுவதில்லை. இது இயல்பாகவே பெற்றோர்களுக்கு இருக்கும் குணமாகும். அப்படி இருக்கும் பொழுது எப்படி முன்னோர்கள் நமக்கு சாபம் விட்டிருப்பார்கள்? என்பதையும் இங்கு சிந்திக்க வேண்டியது அவசியமாகிறது.

Garudan

தெரிந்தோ! தெரியாமலோ! நம்முடைய பெற்றோர்கள் அல்லது அதற்கு முந்தைய தலைமுறையில் இருக்கும் நம்முடைய முன்னோர்கள் பல்வேறு பாவங்களை செய்து இருப்பார்கள். கருட புராணத்தில் எதனால் நான் பாவம் செய்தோமோ! அதனால் அந்த பரிகாரத்தையும் செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மனதால் செய்த பாவத்தை மனதாலும், உடலால் செய்த பாவத்தை உடலாலும் பரிகாரம் செய்ய வேண்டும். நமக்கு முன்னோர்கள் செய்த பாவத்தில் பங்கு இருந்தால் அது முன்னோர்கள் சாபம் ஆகிறது. இதில் அவர்கள் என்ன பாவம் செய்தார்கள் என்று தெரிந்தால் பரவாயில்லை! தெரியாத பட்சத்தில் என்ன செய்ய முடியும்? இதனை நிவர்த்தி செய்ய நமக்கு ஒரே ஒரு வழி தான் இருக்கிறது.

dhanam

உங்கள் வாழ்வில் இருக்கும் இருட்டை நீக்க வேண்டுமென்றால் அதை வாரி வாரி வெளியில் கொட்டினால் எந்த பயனும் இல்லை. ஒரு சிறு தீபம் ஏற்றி வைத்தால் போதும் பிரச்சனை முடிந்து விடும். உடலாலும், மனதாலும் செய்த பாவத்திற்கு பரிகாரம் தேட உண்மையிலேயே சுயநலம் பார்க்காமல், மனதார இயலாதவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்தால் போதுமானது. கையிலேயே பதில் இருக்க, விடை தேடி அலைவது ஏன்? ஏழையில் சிரிப்பில் இறைவனை காணுங்கள்! உங்கள் கஷ்டம் ஒரு நாள் நிச்சயம் மாறும்.

இதையும் படிக்கலாமே
பைரவருக்கு 9 வாரங்கள் இந்த முறைப்படி, இந்த தீபத்தை, இந்த நேரத்தில், இப்படி ஏற்றி வந்தால், கழுத்தை நெறிக்கும் கடன் பிரச்சினையும் காணாமல் போகும்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -