தேவையில்லாத செலவுகள் வந்து கொண்டே இருக்கிறதா? வீண் விரயங்கள் ஏற்படாமல் இருக்க 5 ரூபாய் நாணயத்தை இப்படி செய்து வையுங்கள்!

nelli-kuberan
- Advertisement -

ஒரு சில நேரங்களில் எல்லாம் நம்மால் எதையும் யூகித்து விட முடியாது. இந்த செலவுகள் மட்டும் தான் வரும் என்று ஒரு யூகமாக கூற முடியும். ஆனால் நாம் எதிர்பாராத வகையில் திடீரென வீண் விரயங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. எப்போதாவது இது போல் வீண் விரயங்கள் ஏற்பட்டால் பரவாயில்லை சமாளித்து விடலாம். ஆனால் அடிக்கடி தேவையில்லாத செலவுகள் தொடர்ந்து வந்து கொண்டே இருந்தால் அங்கு லட்சுமி கடாட்சம் குறைந்துள்ளது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இதற்கான எளிய பரிகாரத்தை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளவிருக்கிறோம், வாருங்கள் பதிவுக்கு போகலாம்.

வீண் விரயங்களும், தொடர் செலவுகளும் வந்து கொண்டே இருந்தால் அதுவும் நாம் எதிர்பாராத நேரத்தில் திடீர் திடீரென செலவுகள் ஏற்பட்டால் அங்கு லட்சுமி கடாட்சம் குறைந்துள்ளது என்று அர்த்தம் எனவே நாம் மகாலட்சுமி வழிபாடு செய்தால் நிச்சயம் நல்ல பலன்களை பெறலாம். லட்சுமி வழிபாடு செய்வது என்பது சிறப்பான பலன்களைக் கொடுக்கும் என்றாலும் அதை விட நீங்கள் குபேர வழிபாடு செய்வது இன்னும் கூடுதல் பலன்களை கொடுக்கும். லக்ஷ்மி குபேரர் படத்தை வைத்து லட்சுமி குபேரர் இருவரையும் வழிபட்டால் வீண் விரயங்கள் ஏற்படாது தடுக்கலாம்.

- Advertisement -

வெள்ளிக் கிழமையில் நல்ல நேரம் பார்த்துக் கொள்ளுங்கள். அந்த நேரத்தில் நீங்கள் பூஜை அறையில் லட்சுமி குபேரர் படத்தை வைத்து அதற்கு முன்பாக ஒரு வாழை இலையை விரித்து கொள்ள வேண்டும். அதில் ஒரு கை நிறைய கல் உப்பு, ஒரு கை நிறைய பச்சரிசி வைத்துக் கொள்ளுங்கள். கல் உப்பின் மீது ஐந்து ரூபாய் நாணயம் ஒன்றை வையுங்கள். பிறகு மகாலட்சுமிக்கு நைவேத்தியம் படைக்க நல்ல பசு நெய்யை ஊற்றி நன்கு பக்தி மிகுந்த ஒரு சக்கரை பொங்கலை செய்து வையுங்கள். தீர்த்த கிண்ணத்தில் 2 கிராம்பு, 2 ஏலக்காய், கொஞ்சம் பச்சை கற்பூரத்தை நொறுக்கி சேர்த்துக் கொள்ளுங்கள்.

lakshmi kubera

லட்சுமி குபேர மந்திரம்:
ஓம் ஹ்ரீம் ஷ்ரீம் க்ரீம் ஷ்ரீம் குபேராய அஷ்ட லஷ்மி
மம க்ரிஹே தனம் புராய புராய நமஹ!!

- Advertisement -

உங்களிடம் துளசி இலைகள் இருந்தால் நாலைந்து சேர்த்துக் கொள்ளுங்கள். தெய்வீக மணம் கமழும் தீர்த்தமும், மணக்க மணக்க சர்க்கரை பொங்கலின் வாசமும் வீடு முழுவதும் வர வேண்டும். மேற்கூறிய இந்த மந்திரத்தை உச்சரித்து தூப, தீப, ஆரத்தி காண்பிக்க வேண்டும். லட்சுமி குபேரருக்கு நெல்லிக்கனி என்பது மிகவும் பிடித்த ஒரு விஷயம் ஆகும் எனவே நெல்லிக்கனியை வையுங்கள். அப்படி நெல்லிக்கணி இல்லாதவர்கள் மாதுளை அல்லது கொய்யாப்பழம், வாழைப்பழம் போன்றவற்றை வைக்கலாம்.

nellikai1

வெற்றிலை, பாக்கு, பூ, பழம் போன்ற மங்கலப் பொருட்களையும் வைக்கலாம். அது அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப நீங்கள் செய்து கொள்ளலாம். சுவாமி படத்திற்கு மல்லிகை மலர் கொண்டு தொடுக்கப்பட்ட மாலையை சாற்றுங்கள். அதே போல ஏலக்காய் மாலை அல்லது கிராம்பு மாலை போன்றவற்றையும் சாற்றலாம். இப்படி பூஜையை நிறைவு செய்து முடித்த பின் அந்த ஐந்து ரூபாய் நாணயத்தை ஒரு மஞ்சள் துணியில் முடிந்து வைத்து கொள்ளுங்கள். உப்பு மற்றும் அரிசியை உபயோகித்துக் கொள்ளுங்கள். உங்கள் பிரச்சனைகள் தீர மனமாரப் பிரார்த்தித்து கொள்ளுங்கள். பின்னர் பிரச்சனைகள் தீர்ந்த பின்பு நாணயத்தை கொண்டு போய் கோவில் உண்டியலில் காணிக்கையாக செலுத்தி விடுங்கள். உங்களால் முடிந்த தான, தர்மங்களை செய்து வாருங்கள். இது போல் செய்து வருவதன் மூலம் தேவையற்ற வீண் விரயங்கள் ஏற்படாமல், சுபவிரயங்கள் ஆக மாறும்.

- Advertisement -