வீட்டில் தெய்வீக சக்தி அதிகரிக்க

dheiveega sakthi
- Advertisement -

நம் உள்ளத்தில் எந்த தெய்வத்தை மனதார நினைத்து பூஜை செய்கிறோமோ அந்த பூஜைக்குரிய பலனை நம்மால் பெற முடியும். அதேபோல் நம் இல்லத்தில் செய்யக்கூடிய பூஜைகளுக்கும் பலன் இருக்கிறது. இவை இரண்டையும் கோவிலாகவே கருத வேண்டும் என்பதுதான் நம்முடைய முன்னோர்கள் வகுத்த வழி. அந்த வகையில் வீட்டில் பூஜை செய்யும் பொழுது தெய்வீக சக்தி என்பது அதிகரித்துக் கொண்டே செல்லும் என்றும் கூறியிருக்கிறார்கள்.

என்னதான் பூஜை செய்தாலும் எந்தவித பலனும் இல்லை, செய்யும் காரியங்களில் தடைகள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது, நல்ல பலன்கள் எதுவுமே கிடைக்கவில்லை என்று வருத்தப்படுபவர்கள் எந்த பூவை வீட்டு பூஜை அறையில் வைத்து வழிபட்டால் தெய்வீக சக்தி அதிகரிக்கும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

- Advertisement -

ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒவ்வொரு வகையான பூக்கள் மிகவும் சிறப்பான பலன்களை தரும். எந்த ஒரு பூஜையை எந்த தெய்வத்திற்காக நாம் செய்தாலும் அந்த தெய்வத்திற்குரிய பூக்களை தான் நாம் சமர்ப்பிப்போம். இது பலரும் தங்களுடைய அன்றாட வாழ்க்கையில் செய்து கொண்டு தான் இருப்பார்கள். வீட்டில் பொதுவாகவே தெய்வீக சக்தியை அதிகரிக்க வேண்டும் என்று நினைத்தால் எந்த பூவை வைத்து வழிபடலாம் என்று பார்ப்போம்.

தெய்வீக சக்தி என்பது வீட்டில் நிலையாக நிலைத்திருக்க வேண்டும் என்று நினைத்தால் முதலில் வீட்டில் இருக்கக் கூடிய எதிர்மறை ஆற்றல்கள் விலக வேண்டும். எந்த வீட்டில் எதிர்மறை ஆற்றல்கள் இருக்கிறதோ அந்த வீட்டில் தெய்வீக சக்தி என்பது இருக்கவே இருக்காது. சரி தெய்வீக சக்தி அதிகரிக்க வேண்டும் அதே சமயம் எதிர்மறை ஆற்றல்களையும் விளக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும் என்று பார்ப்போம்.

- Advertisement -

இந்த பரிகாரத்தை நாம் வெள்ளிக்கிழமையில் செய்வது மிகவும் சிறப்பு. ஏனென்றால் வியாழக்கிழமை வீட்டை சுத்தம் செய்து வைத்திருப்போம். வெள்ளிக்கிழமை இந்த பரிகாரத்தை செய்யும் பொழுது முழு பலனையும் நம்மால் பெற முடியும். இதற்கு ஒரு கண்ணாடி கிண்ணம் ஒன்று வேண்டும். அந்த கிண்ணம் நிறைய சுத்தமான தண்ணீரை பிடித்துக் கொள்ளுங்கள். பிறகு அதில் சிறிதளவு ஜவ்வாது பொடியைப் போட வேண்டும். அடுத்ததாக பச்சைக் கற்பூரத்தை நுணுக்கி போட வேண்டும். இதற்கு மேல் ஒரு செந்தாமரை மலரை விரித்து வைக்க வேண்டும்.

இந்த கண்ணாடி கிண்ணத்தை வீட்டு பூஜை அறையில் தான் வைக்க வேண்டும். வரவேற்பரையோ நிலை வாசலிலோ வைக்க கூடாது. தினமும் தங்களால் தாமரை மலரை வாங்க முடியும் அல்லது தங்களுக்கு கிடைக்கும் என்று நினைப்பவர்கள் தினமும் இந்த பூவை மாற்றலாம். அவ்வாறு கிடைக்காது என்று நினைப்பவர்கள் வாரத்திற்கு ஒருமுறை இந்த பூவை மாற்றி விட வேண்டும். பழைய பூவை எடுத்து கால் படாத இடத்தில் போட்டு விட வேண்டும்.

- Advertisement -

இவ்வாறு நாம் ஜவ்வாது, பச்சை கற்பூரம் கலந்த தண்ணீரை பூஜை அறையில் வைக்கும் பொழுது அந்த பூஜை அறையை நறுமணத்துடன் திகழும். தாமரை என்பது தோஷங்கள் அற்ற மலராக கருதப்படுகிறது. இந்த மலரை எந்த தெய்வத்திற்கு வேண்டுமானாலும் நாம் வைத்து வழிபடலாம். இந்த மலரை நாம் இந்த முறையில் வைக்கும் பொழுது அந்த இடத்தில் தெய்வீக சக்தி என்பது அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் இந்த ஜவ்வாது பச்சை கற்பூரத்திற்குரிய வாசனைக்கு எதிர்மறை ஆற்றல்கள் விலகிப் போகும் என்றும் கூறப்படுகிறது.

வெள்ளிக்கிழமை காலையில் இப்படி நாம் வீட்டு பூஜை அறையில் வைத்து விட்டு சுத்தமான குங்கிலியத்தை பயன்படுத்தி வீடு முழுவதும் தூபம் போட வேண்டும். இந்த முறையில் வாரந்தோறும் நாம் செய்து வர நம் வீட்டில் தெய்வீக சக்தி அதிகரிக்கும். நினைத்தது நினைத்தபடி நல்ல விதமாக நடந்திடும்.

இதையும் படிக்கலாமே: பொன் பொருள் சேர அம்பாள் வழிபாடு
ஒரே ஒரு பூவை மட்டும் நம் வீட்டில் நாம் கொண்டு வந்து வைத்தால் அனைத்து நன்மைகளும் கிடைக்கும் என்றால் அந்த பூவை வாங்கி வைப்பதில் எந்த தவறும் இல்லையே முயற்சி செய்து பார்ப்போமா?

- Advertisement -