வீட்டில் இந்த எறும்புகள் நுழைந்தால், அந்த எறும்புகளுக்கு பின்னாலேயே மூதேவி வீட்டிற்குள் நுழைந்து விடுவாள். ஜாக்கிரதை!

ant

காலையில் எழுந்து வாசல் தெளித்து பச்சரிசி மாவில் கோலம் போடுவதே எறும்புகள் பசியாற வேண்டும் என்பதற்காகத் தான். அந்த எறும்புகள் நம் வீட்டிற்குள் நுழைந்தால் வீட்டிற்கு தரித்திரம் பிடிக்குமா? வீட்டில் மூதேவி குடிகொண்டு விடுவாளா? என்று நம்மில் பலருக்கு சந்தேகம் எழத்தான் செய்யும். ஆனால் வீட்டில் எறும்புகள் உள்ளே வந்து வாசம் செய்வதற்கும், அதனுடனே மூதேவி வீட்டிற்குள் நுழைவதற்கும் நிறையவே சம்பந்தம் உள்ளது. குறிப்பாக வீட்டில் உள்ளவர்களுக்கு உடல் நிலை சரியில்லாமல் போக, வீட்டில் வறுமை வருவதற்கும் இந்த எறும்புகள் ஒரு காரணமாக இருக்கின்றது. அதைப் பற்றிய சில விஷயங்களை இன்று இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்துகொள்வோம் வாருங்கள்.

ant-erumbu

எறுப்புகள் எந்த இடத்தை தேடி வரும். வெளியில் அதிகமாக வெளியில் இருக்கும் சமயத்தில், குறிப்பாக சித்திரை வைகாசி இந்த வெயில் கால கட்டத்தில் குளிர்ச்சியான இடங்களை தேடி வரும். ஈரப்பதம் அதிகமாக இருக்கும் இடத்தில் மூதேவி வாசம் செய்வாள் என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒரு விஷயம்.

உங்களுடைய வீடு எப்போதுமே ஈரப்பதமாக இருந்தால் அதாவது வீட்டுக்குள்ளேயே வெயில் காலத்தில் ஈரத் துணிகளை காயப் போட்டுக் கொண்டால், அந்த கொடிகளில் எறும்புகள் வரத் தொடங்கும். வீட்டில் வேறு எங்கெல்லாம் ஈரப்பதம் அதிகமாக இருக்கின்றதோ அந்த இடத்தை தேடி எறும்புகள் வரத் தொடங்கிவிடும். ஆகவே ஈரப்பதத்தை தேடி வரக்கூடிய எறும்புகள் உங்கள் வீட்டில் ஈரம் இருக்கின்றது என்பதை வலியுறுத்துகின்றது.

ant2

அடுத்தபடியாக எந்த ஒரு இடத்தில் சுத்தமில்லாமல் அசுத்தம் நிறைந்த சூழ்நிலை நிலவுகின்றதோ, உணவுப் பொருட்கள் பராமரிக்கப்படாமல் அப்படியே திறந்தபடி இருக்கின்றதோ, அந்த இடத்தில் எறும்புகள் வரத் தொடங்கிவிடும். அசுத்தமான இடத்தில்  மூதேவி குடி கொண்டு விடுவாள் என்பதும் நாம் எல்லோரும் அறிந்த ஒரு விஷயம்தான்.

அசுத்தம் நிறைந்த இடத்தில்,  ஆரோக்கியம் இருக்காது. உடல் நிலை பாதிக்கப்பட்டு விடும். ஸ்ரீதேவிக்கு மூத்தவளான இந்த மூத்த தேவி என்று சொல்லப்படும் மூதேவி வீட்டிற்குள் வந்து விட்டால் நிச்சயம் பணக் கஷ்டமும் வந்துவிடும். ஆக உங்கள் வீட்டைத் தேடி எறும்புகள் படை கிடைக்கின்றது என்றால் உங்களுடைய வீடு சுத்தம் இல்லை என்பதை நீங்களே புரிந்து கொண்டு, வீட்டை சுத்தம் செய்து விடுங்கள். வீட்டை எப்போதும் உலர்ந்த நிலையில் வைத்துக் கொள்ளுங்கள்.

ant1

இருப்பினும் உங்கள் வீட்டில் எறும்புகள் வந்தால் எறும்புகள் வராத அளவிற்கு எறும்புச் சாக், எறும்பு மருந்து போட்டு அந்த இடத்தை உடனடியாக சுத்தம் செய்துவிட வேண்டும். அப்போதுதான் வீடு சுபிட்சம் பெறும். உங்களுடைய வீட்டில் எறும்புகள் தொல்லை அதிகமாக இருந்தால் நீங்களே சோதித்து பாருங்கள். வாழ்க்கையில் இது நாள் வரை இல்லாத இன்னல்கள் கூட, இனி வரப்போகும் காலங்களில் வருவதை நிச்சயம் உங்களால் உணர முடியும். அதை தவிர்க்க வேண்டும் என்பதற்காக சொல்லப்பட்டுள்ள பதிவுதான் இது. நம்பிக்கை உள்ளவர்கள் இதைப் பின்பற்றி கொள்ளலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.