எதிர்மறை ஆற்றலை நீக்க, வீட்டில் லட்சுமி கடாட்சம் பெற, வீடு துடைக்கும் தண்ணீரில் இந்த 4 பொருட்கள் சேர்த்தாலே போதும்.

mahalakshmi
- Advertisement -

ஒரு வீடு நல்ல சுபிக்ஷமாக இருக்க வேண்டும் என்றால், முதலில் அந்த வீட்டில் நல்ல ஆற்றலானது நிறைந்து இருக்க வேண்டும். அப்படி நல்ல ஆற்றல் இல்லாமல் போவதற்கு, அந்த வீட்டில் உள்ளவர்களின் மேல் ஏற்படும் கண் திருஷ்டி, துர்தேவதைகளின் வாசம் போன்றவைகள் தான் காரணம். அந்த வீட்டில் எப்போதும் எதிர்மறை ஆற்றலை சூழ்ந்திருக்கும், எதிர் மறை ஆற்றல் சூழ்ந்த வீட்டில் உள்ளவர்களால் தெளிவான எந்த முடிவையும் எடுக்க முடியாது. அவர்கள் ஏப்போதும் சுறுசுறுப்பில்லாமல் சோம்பேறித்தனமாக இருப்பார்கள், ஏன் பணிக்கு செல்ல கூட விருப்பமில்லாமல் வீட்டிலே முடங்கி கிடப்பார்கள்.

இப்படி இருக்கும் பட்சத்தில் அவர்கள் வீடு எப்படி சுபிட்சமாக இருக்கும். சுறுசுறுப்பாக நல்ல எண்ணத்துடன் நல்லபடியாக உழைத்தால் தானே வீடு நன்றாக இருக்கும். சரி இப்படி நம் வீட்டிற்குள் இருக்கும் எதிர்மறை ஆற்றலை எப்படி விரட்டுவது. வீட்டை துடைக்கும் தண்ணீரில் எந்த நான்கு பொருட்களை சேர்ப்பது என்பதைப் பற்றிய பதிவைத்தான் இன்று நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

- Advertisement -

பொதுவாக நம் வீட்டில் கண் திருஷ்டி இருந்தால் வீடு துடைக்கும் தண்ணீரில் கல் உப்பு போட்டு வீடு துடைப்போம். இது எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான். இந்த கல் உப்பு சேர்த்து வீடு துடைக்கும் போது வீட்டில் இருக்கும் கண் திருஷ்டி மட்டும் தான் கழியும், இதில் உள்ள எதிர்மறையாற்றலோ, தீய சக்திகளோ போகாது. அப்படி அவைகளையும் சேர்த்து நாம் விரட்ட வேண்டும் எனில், இந்த கல்லுப்புடன் சில பொருட்களை சேர்த்து வீடு துடைக்க வேண்டும்.

முதலில் ஒரு பெரிய பக்கெட் முழுவதும் நல்ல சுத்தமான தண்ணீரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் கொஞ்சம் கல் உப்பு, சிறிதளவு மஞ்சள் தூள், கற்பூரம், பசுங்கோமியம் இவை நான்கையும் கலந்து வைத்து விடுங்கள். (அடுத்து வேறு ஒரு பக்கெட்டில் பாதி அளவு நல்ல தண்ணீரை எடுத்துக் கொண்டு, அதில் கொஞ்சம் நாம் கலந்து வைத்திருக்கும் இந்த எதிர்மறை ஆற்றல் நீக்கக்கூடிய சக்தி வாய்ந்த தண்ணீரை கலந்து கொள்ள வேண்டும்.) முதலில் பூஜை அறையை மட்டும் சுத்தமாக துடைத்து எடுத்து விடுங்கள். பிறகு அந்த தண்ணீரை வெளியே ஊற்றி விடுங்கள். மறுபடியும் பக்கெட்லில் புதியதாக தண்ணீர் எடுத்து, நாம் கலந்து வைத்திருக்கும் சக்தி வாய்ந்த நீரை அதில் கலந்து, அடுத்த அறையை சுத்தப்படுத்துங்கள்.

- Advertisement -

இதே போல் உங்கள் வீட்டில் எத்தனை அறை உள்ளதோ, அத்தனை அறைக்கும் தனித்தனியாக தண்ணீர் சேர்த்து துடைக்க வேண்டும். ஏனென்றால் நாம் ஒரே பக்கெட்டில் தண்ணீர் எடுத்து அனைத்து இடங்களையும் துடைக்கும் போது, ஓர் இடத்தில் இருந்து இந்த எதிர்மறையாற்றல் அடுத்த இடத்திற்கு போகுமே தவிர, முழுவதுமாக வீட்டை விட்டு வெளியேறாது. எனவே இந்த முறையில் வீடு துடைத்தால் தான் அனைத்து இடங்களில் உள்ள எதிர்மறை ஆற்றலும் வெளியேறும். அதே போல் வீடு துடைக்கும் போது உள்ளிருந்து வெளி புறமாக தான் துடைக்க வேண்டும்.

இதே போன்று தான் எப்போதும் துடைக்க வேண்டுமா, என்றால் தேவை இல்லை. எப்போதும் சாதாரண கல் உப்பை சேர்த்து துடைத்துக் கொள்ளுங்கள். மாதத்திற்கு ஒருமுறை இது போன்று துடைத்தால் போதும். ஆனால் விசேஷ நாட்களுக்கு முன், நாம் வீடு துடைக்கும் போது கட்டாயமாக இந்த முறையில் துடைத்தால் தான் நம் வீடு எதிர்மறை ஆற்றல் நீங்கி, அடுத்த நாள் நாம் செய்யும் பூஜைக்கான பலன் முழுவதுமாக கிடைக்கும்.

- Advertisement -