வீட்டில் துர்சக்திகள் தங்காமல் இருக்க, இறைசக்தி நிரந்தரமாக தங்கி இருக்க, ஒவ்வொரு வீட்டு பூஜை அறையிலும் 1 டம்ளர் தண்ணீர் இப்படி இருக்கணும்.

sembu-water-lakshmi
- Advertisement -

வீடு என்று இருந்தால் அந்த வீட்டில் இறைசக்தி மன நிறைவுடன், விருப்பத்தோடு தங்கி இருக்க வேண்டும். அந்த அளவிற்கு நம்முடைய வீட்டை நாம் சுத்தபத்தமாக வாசமாக பார்த்துக் கொள்ள வேண்டும். இறைவன் தான் நம்மை எப்போதுமே சந்தோஷமாக வைத்திருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறு. நாமும் நம் வீட்டில் குடியிருக்கும் இறை சக்தியை மனம் குளிர, சந்தோஷமாக வைத்திருக்க வேண்டும். அப்போதுதான் இறைசக்தி நிலைத்திருக்கும். இல்லை என்றால் இந்த வீட்டில் இருந்து எப்போது வெளியே செல்லலாம் என்று தான் அந்த இறைவனுக்கே தோன்றும்.

உங்களுடைய வீடு எப்போதுமே சோகத்தில் உள்ளதா. வீட்டில் உள்ளவர்கள் சண்டை போட்டுக்கொண்டே இருக்கிறார்களா. மனநிம்மதி இல்லையா. பணக்கஷ்டமா மனக்கஷ்டமா. எந்த தேவை இருந்தாலும் சரி அந்த தேவையை பூர்த்தி செய்ய உங்கள் வீட்டை முதலில் லட்சுமி கடாட்சம் நிறைந்ததாக மாற்ற வேண்டும். இறை சக்தி நிறைந்த வீடாக மாற்ற வேண்டும். அதற்கு உங்கள் வீட்டை பிடித்து ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் ஏதோ ஒரு கண்ணுக்குத் தெரியாத கெட்ட சக்தியை விரட்டியடிக்க வேண்டும். அதற்கு ஒரே ஒரு டம்ளர் தண்ணீரை பூஜை அறையில் இப்படி வையுங்கள் போதும்.

- Advertisement -

சுத்தமான கண்ணாடித் தம்ளர், பீங்கான் டம்ளர் அல்லது கண்ணாடி பவுல், எதை வேண்டுமென்றாலும் எடுத்துக்கொள்ளுங்கள். சில்வர் பாத்திரத்தை மட்டும் இந்த பரிகாரத்திற்கு பயன்படுத்த வேண்டாம். ஒரு சிறிய கண்ணாடி டம்ளரில் நல்ல தண்ணீரை ஊற்றி அந்த தண்ணீரில் சிறிதளவு அரகஜா போட்டு கலந்து கொள்ள வேண்டும். இந்த டம்ளர் தண்ணீரை பூஜை அறையில் வைத்து கொள்ளுங்கள்.

water

ஒரு எலுமிச்சம் பழத்தை உங்கள் கையில் வைத்துக்கொண்டு, இறைசக்தி இந்த எலுமிச்சம் பழத்தின் மூலம் எங்கள் வீட்டில் நிறைந்திருக்க வேண்டும். கெட்ட சக்தி எங்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று குலதெய்வத்தின் பெயரை மூன்று முறை உச்சரித்து, மனதார சங்கல்பம் எடுத்துக் கொண்டு அந்த எலுமிச்சம் பழத்தை டம்ளர் தண்ணீரில் போட்டு விடுங்கள். இந்த டம்ளர் எப்போதும் உங்கள் பூஜை அறையிலேயே இருக்கட்டும்.

- Advertisement -

தண்ணீரில் போட்டு வைத்திருக்கும் எலுமிச்சம்பழம் அவ்வளவு சீக்கிரத்தில் வாடியோ அல்லது கெட்டோ போகாது. தினம்தோறும் காலையில் தண்ணீரில் இருக்கும் எலுமிச்சம் பழத்தை தனியாக எடுத்து பூஜை அறையில் வைத்து விடுங்கள். தண்ணீரை மட்டும் கால் படாத இடத்தில் கொட்டி விட்டு, டம்ளரை கழுவிவிட்டு, மீண்டும் நல்ல தண்ணீரை ஊற்றி அதில் சிறிதளவை அரகஜா போட்டு, பழைய எலுமிச்சம் பழத்தை மீண்டும் தண்ணீரில் போட்டு பூஜை அறையில் வைக்கலாம். வாரம்தோறும் வரும் வெள்ளிக்கிழமை அன்று மட்டும் எலுமிச்சம்பழத்தை மாற்றிக் கொள்ளுங்கள். தினமும் இதை செய்து வரும்போது வீட்டில் நீங்கள் எதிர்பார்க்காத அபரிவிதமான சில நல்லது நடக்க தொடங்கும். இந்த வாசத்திற்கு அந்த எலுமிச்சம் பழத்தின் மூலம் உங்களுடைய வீட்டில் இறைசக்தி குடிகொண்டிருக்கும்.

vinayagar-pray

அந்த காலத்தில் வீடு இருந்த சூழ்நிலைக்கும் இந்த காலத்தில் நம் வீடு இருக்கும் சூழ்நிலைக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. அந்த காலத்தில் நம்முடைய பாட்டிமார்கள் அம்மாக்கள் செய்து வந்த பூஜை புனஸ்காரங்களை நாம் முறையாக வீட்டில் செய்து வருவது கிடையாது. காலமும் நேரமும் சூழ்நிலையும் நமக்கு அதற்கு தகுந்தவாறு இல்லை. இருப்பினும் நம்மால் முடிந்த அளவு வீட்டை எப்போதுமே சுத்தமாக வைத்துக்கொண்டு, பூஜை அறையை சுத்தம் செய்து, தீபம் ஏற்றி இறை வழிபாடு செய்வதை மட்டும் எக்காரணத்தைக் கொண்டும் எந்த சூழ்நிலையிலும் நிறுத்திவிடக் கூடாது என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -