உங்கள் வீடு எப்போதும் தெய்வசக்தி நிறைந்த வீடாக இருக்க வரவேற்பறையில் இதை மட்டும் வைத்தாலே போதும்.

urili
- Advertisement -

நம்முடைய வீட்டில் எதிர்மறை ஆற்றல் குடி கொள்ளாமல் இருக்க வேண்டுமென்றால், நம் வீட்டை எப்போதும் நேர்மறையாக அதாவது பாசிட்டிவாக வைத்திருந்தாலே போதும். கெட்ட சக்தி நம் வீட்டிற்குள் நுழைவதற்கு வாய்ப்பே கிடையாது. வீட்டில் நேர்மறை ஆற்றல் நிறைந்திருக்க வேண்டுமென்றால், அந்த வீட்டில் தெய்வசக்தி நிறைந்திருக்க வேண்டும். தெய்வசக்தி நிறைவாக இருக்கும் இடத்தில் கெட்ட சக்தி குடி கொள்ளாது. இது நாம் எல்லோரும் அறிந்த ஒரு விஷயம் தான். மிக மிக சுலபமான முறையில் நம்முடைய இல்லத்தினை இறையருள் நிறைந்த கோவிலாக வைத்துக்கொள்வது எப்படி என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

pooja-room1

கெட்ட வாடை வீசுகின்ற இடத்தில் எதிர்மறை ஆற்றல் குடிகொள்ளும். நல்ல வாசம் இருக்கின்ற இடத்தில் நேர்மறை ஆற்றல் குடியிருக்கும். அவ்வளவு தான். இதைப் புரிந்து கொண்டாலே நம்முடைய வீட்டை எப்போதும் கோவில் போல வைத்துக் கொள்ளலாம்.

- Advertisement -

பெரும்பாலும் இப்போதெல்லாம் எல்லோருடைய வீட்டிலும் வரவேற்பரையில் உருளியில் தண்ணீர் வைத்து பூக்களை அதில் மிதக்க விடும் பழக்கம் உள்ளது. இதை வெறும் அழகிற்காக நாம் வைக்காமல் ஆன்மீக ரீதியாக இதில் சில பொருட்களை கலந்து வைத்தால் நம்முடைய வீடு இறை சக்தி நிறைந்ததாக மாறிவிடும்.

urili1

உருளியில் தண்ணீரை நிரப்பி விடுங்கள். அதில் வாசனை மிகுந்த பூக்களோடுடன், கைப்பிடி அளவு துளசி இலைகளை அப்படியே பொட்டு வைக்கவேண்டும். சிறுசிறு காம்புகளுடன் துளசி இலைகள் இருந்தாலும் பரவாயில்லை. அந்த துளசி காம்புகளை லேசாக உடைத்துவிட்டு தண்ணீரில் போட்டு வைத்தால் அந்த தண்ணீரில் இருந்து வெளிவரக்கூடிய வாசம் நம்முடைய வீட்டை இறையருள் நிறைந்த வீடாக மாற்றி விடும். இந்தத் தண்ணீரை மூன்று நாட்களுக்கு ஒருமுறை மாற்றினால் கூட போதும். வீட்டில் உருளி இல்லை என்றால் ஒரு கண்ணாடி பௌலில் கூட இப்படி துளசி இலைகளை தண்ணீரில் போட்டு வைக்கலாம்.

- Advertisement -

இதேபோல் அந்த உருளி இருக்கும் தண்ணீரில் அத்தர், அரகஜா, ஜவ்வாது, போன்ற வாசனை மிகுந்த பொருட்களை கலந்து ஒரு சிட்டிகை கஸ்தூரி மஞ்சளையும் சேர்த்து கலந்துவிட்டு அதன் பின்பு, துளசி இலைகளையும் வாசனை மிகுந்த பூக்களையும் மிதக்க விட்டால், உங்கள் வீடு நிச்சயம் கோவில் தான். அந்த கோவிலில் குடி கொண்டிருக்கும் தெய்வம் உங்களுடைய வீட்டிலும் குடிகொள்ளும். பிறகு உங்களுடைய வீட்டின் எதிர்மறை ஆற்றல் வந்து குடி கொள்ள வாய்ப்பே கிடையாது. (இந்த வாசனைப் பொருட்கள் வீட்டில் இல்லை என்றாலும் பரவாயில்லை. கஸ்தூரி மஞ்சள் கலந்த தண்ணீரில் துளசி இலைகளை போட்டு வைப்பதும் நல்ல பலனைத் தரும்.)

thulasi-theertham

எதிர்மறை ஆற்றல் நம் வீட்டில் உள்ளே நுழையாமல் இருப்பதற்கு, பாதுகாப்பாக நாம் எவ்வளவோ விஷயங்களை செய்வதை காட்டிலும் மிக மிக சுலபமான வழி இது. இதை மட்டும் பின்பற்றி பாருங்கள். வீட்டில் ஐஸ்வர்யமும் லட்சுமி கடாட்சமும் தாண்டவமாடும். வீட்டில் கஷ்டம் என்ற வார்த்தைக்கே இடம் இருக்காது. சண்டை சச்சரவுகள் குறைந்து, குடும்பத்தில் இருப்பவர்களுடைய ஆரோக்கியம் மேம்பட்டு சுபிட்சம் அடைய இதுவும் ஒரு சுலபமான வழி என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -