இன்றைய இக்கட்டான சூழ்நிலையில், கஷ்டங்கள் தீர குலதெய்வ கோயிலுக்கு செல்ல முடியவில்லையே என்று நினைப்பவர்கள், வீட்டிலிருந்தபடி இப்படி குலதெய்வ வழிபாடு செய்யலாம்.

Amman-Manthiram
- Advertisement -

நமக்கு வரக்கூடிய தீர்க்கமுடியாத துயரங்களுக்கு, தீர்வு கிடைக்க வேண்டுமென்றால், அந்த சமயத்தில் நம் குடும்பத்தோடு சேர்ந்து, குலதெய்வ கோவிலுக்கு சென்று குலதெய்வ வழிபாடு செய்ய வேண்டும். கடந்த சில நாட்களாக நோய் தொற்று காரணமாகவும், லாக்டவுன் காரணமாகவும் சிலரால் குலதெய்வ கோவிலுக்கு சென்று குல தெய்வத்தை வழிபட முடியாத சூழ்நிலை நிலவி வருகிறது. இந்த சமயத்தில் உங்களுக்கு இருக்கக்கூடிய கஷ்டங்கள் தீர, உங்களுடைய வீட்டில் இந்த இக்கட்டான சூழ்நிலையில் யாருக்கேனும் பாதிப்பு ஏற்பட்டிருந்தால், அது சரியாக வேண்டும் என்றும், இனி வரக்கூடிய காலகட்டத்தில் உங்கள் குடும்பம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காகவும் வீட்டில் இருந்தபடியே குலதெய்வ வழிபாட்டை எப்படி செய்யலாம் என்பதை பற்றிய ஒரு வழிபாட்டு முறையை தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

kuladheivam

வீட்டில் குலதெய்வ வழிபாடு செய்வது எப்படி

உங்களுடைய குல தெய்வத்திற்கு உகந்த நாளை இந்த பூஜைக்காக தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். அம்மன் தெய்வமாக இருந்தால் வெள்ளிக்கிழமை, சில தெய்வங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை, சில தெய்வங்களுக்கு சனிக்கிழமை, என்று ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒவ்வொரு கிழமை உகந்ததாக இருக்கும் அல்லவா.

- Advertisement -

பூஜை செய்ய முடிவு செய்துவிட்டீர்கள் என்றால், உங்கள் வீட்டை பூஜைக்கு முந்தைய நாளே சுத்தம் செய்து விடுங்கள். உங்கள் வீட்டில் இருக்கும் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் இந்த பூஜையில் ஒன்றாக கலந்து கொள்ள வேண்டும். பூஜையை காலை 6 மணி அளவில் செய்வது சிறப்பாக இருக்கும். அதிகாலை வேளையிலேயே வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் எழுந்து சுத்தமாக குளித்துவிட்டு பூஜை அறையில் அமர்ந்து தீபம் ஏற்றி வைத்து குலதெய்வத்தை, குலதெய்வ கோவிலுக்கு சென்று வழிபடுவதாக நினைத்து மனதார, மனமுருகி வழிபாடு செய்ய வேண்டும்.

poojai

பூஜை அறையில் குல தெய்வத்திற்கு என்று மண் அகல் விளக்கில் தனியாக ஒரு தீபத்தை ஏற்றி வைத்து, ஒரு சொம்பில் சுத்தமான தண்ணீரை ஊற்றி அதில் துளசி இலைகளைப் போட்டு குலதெய்வத்திற்கு சமர்ப்பணம் செய்யுங்கள். முடிந்தால் குலதெய்வத்திற்கு இஷ்டமான பிரசாதத்தை நெய்வேதியம் ஆக வைக்கலாம்.

- Advertisement -

அடுத்தபடியாக, ஒரு மஞ்சள் நிற துணியை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த மஞ்சள் நிற துணியில் குலதெய்வத்தை வேண்டி உங்களால் இயன்ற அளவு காணிக்கையை வைக்க வேண்டும். குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவரது கையின் மூலமாகவும் இந்த காணிக்கையை வைப்பது மிகவும் சிறப்பு வாய்ந்தது. ‘குலதெய்வ கோவிலுக்கு வரக்கூடிய சூழ்நிலை அமையவில்லை, எப்போது குலதெய்வ கோவிலுக்கு வர கூடிய சூழ்நிலை ஏற்படுகின்றதோ அந்த சமயம் இந்த காணிக்கையை உண்டியலில் சேர்த்து விடுகிறோம்’, என்று சொல்லி அந்த காணிக்கையை முடிந்து பூஜையறையில் குலதெய்வ படத்திற்கு முன்பாக வைத்து விடுங்கள்.

manjal-mudichu

இப்படி வருடம்தோறும் உங்களுடைய குல தெய்வத்திற்கு நீங்கள் என்ன செய்வீர்களோ, சில பேர் குலதெய்வ கோவிலுக்கு அபிஷேகம் செய்து வைப்பார்கள், குலதெய்வ கோவிலுக்கு வஸ்திரதானம் கொடுப்பார்கள், குலதெய்வ கோவிலில் அன்னதானம் செய்வார்கள், அதற்கான தொகையையும் அந்த மஞ்சள் துணியில் வைத்து, குலதெய்வத்திற்கு நீங்கள் செய்யும் வேண்டுதல்களை செய்து விட்டதாக நினைத்து, மஞ்சள் துணியில் முடிந்து பூஜை அறையில் வைத்தால் போதும் அந்த வேண்டுதல் குலதெய்வத்தை சேர்ந்துவிடும்.

praying-god1

கட்டாயமாக குலதெய்வ கோவிலுக்கு செல்லும்போது, செல்லக்கூடிய சூழ்நிலை ஏற்படும்போது இந்த மஞ்சள் நிற துணியில் முடிந்து வைத்திருக்கும் காணிக்கையை குலதெய்வ கோவிலில் சேர்த்து விட வேண்டியது மட்டும் உங்களுடைய பொறுப்பு. இப்படி செய்து பாருங்கள் வீட்டில் இருக்கக் கூடிய கஷ்டங்களுக்கு நிச்சயமாக சீக்கிரம் விடிவு காலம் பிறந்து விடும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -