- Advertisement -
Homeவீட்டு குறிப்புகள்வீட்டில் நறுமணம் வீச டிப்ஸ்

வீட்டில் நறுமணம் வீச டிப்ஸ்

- Advertisement -

ஒரு வீட்டிற்குள் நுழையும் பொழுது நம்மை அறியாமலேயே நம் மனம் மகிழ வேண்டும். அவ்வாறு மனம் மகிழ வேண்டும் என்றால் அதற்கு முதலும் முக்கியமான காரணமாக திகழ்வது நறுமணம் மிகுந்த வாசனை தான். எந்த ஒரு வீட்டில் நறுமணம் கமலுகிறதோ அந்த வீட்டில் தெய்வங்களின் அருள் இருக்கும் என்று ஆன்மீக ரீதியாக கூறப்படுகிறது. இந்த வீட்டு குறிப்பு குறித்த பகுதியில் அப்படி என்றென்றும் வீடு நறுமணமாக திகழ்வதற்கு என்ன செய்ய வேண்டும் என்று தான் பார்க்கப் போகிறோம்.

பொதுவார்த்தமாக பாத்ரூம் டாய்லெட்டில் கெட்ட வாடை வராமல் இருப்பதற்காக நாம் கடைகளில் இருந்து பலதரப்பட்ட வாசனை கட்டிகளை வாங்கி வைப்போம். அவை புதிதாக வைக்கும் பொழுது மட்டுமே தான் வாசனை வரும் ஒரு வாரத்திலேயே அந்த வாசனை அனைத்தும் காலியாகி விடும். பிறகு மறுபடியும் புதிதாக வேறொன்றை வைக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும்.

- Advertisement -

இப்படி செய்வதற்கு பதிலாக நாமே நம் வீட்டில் மிகவும் மலிவான விலையில் இப்படி செய்வதன் மூலம் பாத்ரூம் டாய்லெட் மட்டுமல்லாமல் நம் வீடு நறுமணத்துடன் திகழும். இதை நாம் ஒவ்வொரு அறையிலும் வைக்கலாம். நமக்கு எந்த இடத்தில் நறுமணம் தேவைப்படுகிறதோ அந்த இடத்திலும் வைக்கலாம். இதற்கு நமக்கு முதலில் ஒரு அகலமான பிளாஸ்டிக் டப்பா ஒன்று தேவைப்படும். எந்த அளவிற்கு அகலமாக இருக்கிறதோ அந்த அளவிற்கு வாசனையும் அதிகமாக வரும் என்பதால் உங்களுக்கு வாசனை எந்த அளவிற்கு தேவையோ அந்த அளவிற்கு அகலமான ஒரு பிளாஸ்டிக் டப்பாவை எடுத்துக் கொள்ளுங்கள்.

அதில் 100 கிராம் அளவிற்கு பேக்கிங் சோடாவை போட வேண்டும். அதில் கட்டிகள் இருந்தால் அந்த கட்டிகள் அனைத்தையும் உடைத்து விட்டு போட்டு கொள்ள வேண்டும். பிறகு அதில் உங்களுடைய விருப்பத்திற்கு தேவையான வாசனை எண்ணையை ஊற்ற வேண்டும் அல்லது வாசனை நிறைந்த எசென்ஸ் இருக்கும் அதையும் வாங்கி ஊற்றலாம் அல்லது அத்தர் போன்ற திரவமாக இருந்தாலும் அதையும் பயன்படுத்தலாம்.

- Advertisement -

அனைத்துமே உங்களின் விருப்பம் தான் இதை 15 இல் இருந்து 20 சொட்டுகள் வரை ஊற்றி நன்றாக கலந்து கொள்ள வேண்டும். பேக்கிங் சோடாவிற்கு நறுமணத்தை ஈர்க்கக்கூடிய தன்மை இருக்கிறது என்பதால் இந்த வாசனையை அவ்வளவு சீக்கிரத்தில் அது விட்டு விடாது என்பது குறிப்பிடத்தக்கது. இதை நன்றாக கலந்து விட்டு சீராக்கி கொள்ள வேண்டும். பிறகு இதற்கு மேல் மெல்லியதாக இருக்கக்கூடிய துணியை வைத்து மூடி ரப்பர் பேண்ட் போட்டு வைத்துக்கொள்ள வேண்டும்.

இதில் இருக்கும் வாசனை குறையும் பட்சத்தில் லேசாக அதை திறந்து கிளறிவிட்டு மறுபடியும் வைத்தால் வாசனை வந்து கொண்டே இருக்கும். அப்படி வாசனை முழுமையாக தீர்ந்து விட்டால் மறுபடியும் இதே பேக்கிங் சோடாவில் நாம் எசென்ஸ் ஊற்றி வைத்துக் கொள்ளலாம். ஆறு மாதங்களுக்கு ஒரு முறை மட்டும் பேக்கிங் சோடாவை மாற்றிக் கொண்டால் போதும் வேறு எதுவும் செய்ய வேண்டிய அவசியமே இல்லை.

இதையும் படிக்கலாமே: இந்த மழைக்காலத்துக்கு தேவையான வீட்டு குறிப்பு

மிகவும் எளிமையான முறையில் மலிவான விலையில் நாமே தயாரித்து நம் இல்லத்தை நறுமணம் மிகுந்த இல்லமாக மாற்றலாம்.

சற்று முன்