இந்த மழைக்காலத்துக்கு தேவையான வீட்டு குறிப்பு

mat
- Advertisement -

மழைக்காலத்தில் இல்லத்தரசிகளுக்கு தேவையான ஒரு சில சின்ன சின்ன வீடு குறிப்புகளை தான் இன்றைய பதிவில் பார்க்கப் போகின்றோம். இந்த குறிப்புகள் எல்லாம் எளிமையான குறிப்பாக இருந்தாலும், உங்களுக்கு அன்றாட வாழ்க்கையில் தேவைப்படக்கூடியவை தான். அது என்னென்ன குறிப்புகள் பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோமா.

குறிப்பு 1

ஒரு பழைய தலையணை உரை எடுத்துக்கோங்க. இப்போதெல்லாம் அரிசி கவர் திக்காக நமக்கு கிடைக்கிறது. அதையும் தலகாணி உரை சைஸுக்கு வெட்டி எடுத்துக்கோங்க. காட்டன் தலையணை உறைக்கு உள்ளே இந்த பிளாஸ்டிக் அரிசி கவரை வைக்கவும். இப்போது இந்த தலையணை உரையை பாத்ரூம் டோர் மேட் ஆக பயன்படுத்துவும்.

- Advertisement -

இந்த மேட்டுக்கு மேலே காலை துடைத்தால் தண்ணீர் கீழே வரை செல்லாமல் இருக்கும். அந்த பழைய அரிசி கவர் தடுத்துவிடும். மேல் பக்கம் ஈரம் ஆகிவிட்டால் மீண்டும் திரும்பி போட்டு ஒருமுறை பயன்படுத்தலாம். இந்த தலயணை உரையை காய வைப்பதில் நமக்கு சிரமம் இருக்காது சீக்கிரமாக துவைத்து காய வைத்துக் கொள்ளலாம்.

குறிப்பு 2


ஒரு பழைய இரும்பு தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடு செய்யுங்கள். அதில் 2 ஸ்பூன் மஞ்சள் பொடி போடுங்கள். 1/2 ஸ்பூன் காபித்தூள் போட்டு லேசாக வறுத்து விடும்போது இதிலிருந்து நல்ல புகையும் நல்ல மனமும் நமக்கு வெளிவரும். இந்தப் புகை வீட்டில் இருக்கும் துர்நாற்றத்தை நீக்கிவிடும்.

- Advertisement -

இப்படி சூடு செய்த பொடியை அப்படியே ஒரு ஸ்பூன் எடுத்து சின்ன மண் அகல் விளக்கில் போடுங்க. இதோடு வேப்ப எண்ணெய் ஊற்றுங்கள். கொஞ்சமாக கற்பூரத்தை நசுக்கி அந்த எண்ணெயில் போடுங்க. திக்கான விளக்கு திரியை இதில் போட்டு தீபம் ஏற்றி, இதை வீட்டில் வைத்தால் மழைக்காலத்தில் வரும் கொசு தொல்லை இருக்காது. மழை பெய்து முடித்தவுடன் பொடி கொசு நம்ம வீட்டுக்குள் சுற்றும் அந்த தொல்லையும் இருக்காது. ட்ரை பண்ணி பாருங்க.

குறிப்பு 3


குழந்தைகள் இருக்கும் வீட்டில் மழைக்காலத்தில் அவர்கள் மெத்தையை ஈரமாக்கி விட்டால், அதை காய வைப்பது ரொம்ப கஷ்டம். அதில் துர்நாற்றம் வீசும். இப்படி துர்நாற்றம் வீசக்கூடிய ஈரமான இடத்தில் அயன் பாக்ஸை வைத்து அயன் செய்தால் அந்த ஈரம் சீக்கிரம் காயும். அதன் மேலே ஆப்ப சோடா தூவி விட்டு விடுங்கள். துர்நாற்றம் நீங்கும்.

- Advertisement -

அயன் பாக்ஸ் போட முடியாது என்பவர்கள் குக்கருக்கு உள்ளே தண்ணியை ஊற்றி நன்றாக கொதிக்க வையுங்கள். தண்ணீர் சூடாகணும் ஆனதும் அதற்கு உள்ளே ஏதாவது எடை அதிகமான கல்லை வைத்து இந்த குக்கரை கொண்டு போய் ஈரமான மெத்தையில் சிறிது நேரம் வைத்தால் கூட ஈரம் எல்லாம் சீக்கிரம் காய்ந்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாமே: வெள்ளைத் துணிகள் பளிச்சென்று இருக்க

குறிப்பு 4


அலுமினியம் ஃபாயில் பேப்பர் எடுத்துக்கோங்க. பெரும்பாலும் ஹோட்டல்களில் சப்பாத்தியை இந்த பேப்பரில் இப்போது ரோல் பண்ணி தராங்க. அலுமினியம் ஃபாயில் கப்பில் கூட சாப்பாடு பேக் செய்து தரப்படுகிறது. மெழுகுவர்த்தியில் இந்த அலுமினியம் பேப்பர் ஃபாயிலை நன்றாக சுருட்டி அதன் பிறகு மெழுகுவர்த்தியை ஏற்றி வைத்தால், மெழுகுவர்த்தி நீண்ட நேரம் உருகாமல் நின்று எரியும்.

- Advertisement -