வீட்டிற்குள் பூரான் வந்தால், வீட்டில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத கஷ்டங்கள் வருமா? வரக்கூடிய கஷ்டங்களில் இருந்து தப்பிக்க என்னதான் வழி?

pooran1

விஷ ஜந்துக்கள் நம்முடைய வீட்டில் வாசம் செய்ய வருகின்றது என்றால் நம்முடைய வீடு சுத்தம் இல்லை என்றுதானே அர்த்தம். குறிப்பாக நம்முடைய வீட்டிற்குள் எந்த பூச்சிகள் பறவைகள் வந்தால் நல்லது. எந்த உயிரினங்கள் நம்முடைய வீட்டிற்குள் வரவே கூடாது என்பதை பற்றிய சில விஷயங்களைத் தான் இன்று நாம் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள வேண்டும். வீடு என்றாலே அது லட்சுமி கடாட்சம் நிறைந்த ஒரு இடமாகத்தான் இருக்க வேண்டும். முடிந்தவரை அந்த இடத்தில் விஷ ஜந்துக்களை வரவிடாமல் பார்த்துக் கொள்வது வீட்டில் உள்ளவர்களுடைய பொறுப்பு. குறிப்பாக வீட்டு பெண்களுடைய பொறுப்பு என்றும் சொல்லலாம்.

butterfly

நம்முடைய வீடு தேடி காகம், சிட்டுக்குருவிகள், பட்டாம்பூச்சிகள், போன்ற பறவைகள் வருகிறது என்றால் நம்முடைய இல்லம் இனிமையான இல்லமாக உள்ளது என்று அர்த்தம். நம் வீடு சுத்தமாக இருக்கிறது என்பதும் அர்த்தம். இது தவிர வௌவ்வால்கள், கருவண்டுகள், ஓணான், அரணை இப்படிப்பட்ட ஜீவராசிகள் நம்முடைய வீடுகளில் வருகை தருகின்றது என்றால் நம்முடைய வீட்டில் தேவையற்ற பொருட்களை சேர்த்து வைத்திருக்கின்றோம். நம் வீட்டை சுத்தமாக வைக்க வில்லை என்பதும் ஒரு அர்த்தமும்.

நிறைய பேருடைய வீட்டிற்குள் குளியலறையில் அடிக்கடி பூரான் வந்து தொந்தரவு கொடுத்துக் கொண்டே இருக்கும். இந்தப் பூரான் வீட்டிற்குள் வருவது நன்மையா? தீமையா? பூரான் வீட்டிற்குள் வருவதற்கு முதல் விஷயம் நம் வீட்டை சுற்றி இருக்கக் கூடிய சூழ்நிலை, சேறும் சகதியுமாக இருக்கும் பட்சத்தில், நம்முடைய வீட்டிற்குள் பூரான் வருவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. ஏனென்றால் சுத்தம் இல்லாத, அசுத்தம் நிறைந்த ஈரம் நிறைந்த இடத்தில் தான் பூரான் வாசம் செய்யும்.

pooran

நம்முடைய வீட்டைச் சுற்றி சேறும் சகதியும் கிடையாது. ஆனால் நம் வீட்டு குளியல் அறைக்குள் பூரான் வருகின்றது என்றால் அது நம்முடைய வீட்டிற்கு கஷ்டத்தை கொண்டு வந்து சேர்க்கும். உங்கள் வீட்டை நீங்கள் சுத்தமாக வைக்க வில்லை என்பதை குறிக்கின்றது. உங்கள் வீட்டு கழிவறை குளியலறை வாஸ்பேசன், சிங்க் இந்த இடத்தை எல்லாம் சுத்தமாக கழுவி, வாரத்தில் இரண்டு முறையாவது ப்ளீச்சிங் பவுடரை கொட்டிக் கொண்டே இருக்க வேண்டும். அப்போது நம் வீட்டிற்குள் இந்த பூரான், சிறு பாம்பு, தேள் போன்ற விஷ ஜந்துக்கள் சாக்கடையிலிருந்து வராமல் தடுக்க முடியும்.

இதே போல வீட்டில் உள்ள பெண்கள் மாதவிலக்கு நேரத்தில் சுத்தமாக இல்லை என்றாலும் மாதவிலக்கான சமயத்தில் வரக்கூடிய வாடைக்கு இப்படிப்பட்ட விஷப்பூச்சிகள் நம் வீட்டிற்குள் வருகை தரும் என்றும் அந்த காலத்திலேயே நம் முன்னோர்கள் சொல்லி வைத்துள்ளார்கள். இதற்காகத்தான் மாதவிலக்கான பெண்கள் தினம்தோறும் தலைக்கு குளித்து, மஞ்சள் பூசி சுத்தமாக இருக்க வேண்டும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

manjal

சரி, இந்த பூரான் வீட்டுக்கு வருகை தந்தால் என்னென்ன பிரச்சினைகள் வரும். வீட்டில் பண கஷ்டம் ஏற்படும். மன கஷ்டம் ஏற்படும். வீட்டில் உள்ளவர்களுக்கு உடல்நிலை சரியில்லாமல் போக வாய்ப்பு உள்ளது. இப்படிப்பட்ட சில பிரச்சினைகள் உங்களை பின்தொடரும். இந்த விஷப்பூச்சிகள் உங்கள் வீட்டிற்குள் வராமல் இருக்க வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்வது முதல் வழி. வீட்டை சுத்தம் செய்த பின்பு கொஞ்சமாக சுத்தமான தண்ணீரில் மஞ்சளை கரைத்து வீடு முழுவதும் தெளித்து விட்டால், வீட்டிற்குள் விஷ ஜந்துக்களின் வருகை இருக்காது. முயற்சி செய்து பாருங்கள். நல்லதே நடக்கும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.