வீட்டில் ஐஸ்வரியம் நிறைந்திருக்க இந்த பொருட்களை பிறர் பார்வையில் படும்படி வையுங்கள்.

vinayagar uruli
- Advertisement -

வீடு எப்போதும் மங்களகரமாக இருக்க வேண்டும். லட்சுமி கடாட்சம் பெருக வேண்டும் என்பதால் தான் வீட்டில் நாம் பூஜை வழிபாடுகள் போன்றவற்றை செய்வோம். இதையெல்லாம் பார்த்து பார்த்து செய்தாலும் கூட சில நேரங்களில் எதிர்பாராத துன்பங்கள் நேர்ந்து பொருளாதாரத்திலும் சரிவு ஏற்படும். இதை தவிர்க்க சில வழிமுறைகளை ஆன்மீகம் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

நம்முடைய வழக்கத்தில் நாம் பயன்படுத்தும் சில பொருட்களை மங்களகரமானது என்று சொல்லப்படுகிறது. அப்படியான சில மங்கல பொருட்களை வீட்டில் நுழைவாயில் நாம் வைக்கும் பொழுது வீடு என்றென்றைக்கும் லட்சுமி கடாட்சம் நிறைந்ததாக இருப்பதுடன், பிறர் பார்வையில் அது படும் பொழுது வீடு மேலும் மங்களகரமாக மாறி லட்சுமி கடாட்சம் அதிகரிக்கும். அது குறித்தான தகவலை ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

வீட்டில் பிறர் பார்வையில் படும்படி வைக்க வேண்டிய பொருள்

இந்த வகையில் முதன்மையான இடத்தை பெறுவது கண்ணாடி தான். இந்த கண்ணாடி மங்களகரமான பொருட்களில் ஒன்று. இந்த கண்ணாடியை வாயிலில் மாட்டி வைக்கும் பொழுது வீட்டிற்கு வரும் பிறருடைய எதிர்மறை ஆற்றலை தன்னுள் கிரகித்துக் கொள்கிறது. அது மட்டும் இன்றி இந்த கண்ணாடி பூஜையறையில் வைப்பதன் மூலம் தெய்வ அனுகிரகமும் கிடைக்கும்.

இன்றளவும் பெரும்பாலான ஆலயங்களில் அலங்காரம் முடிந்த பிறகு தெய்வத்திற்கு கண்ணாடி காட்டும் வழக்கம் நடைமுறையில் உள்ளது. இந்த கண்ணாடியை வாயிலில் வைப்பதன் மூலம் வீட்டிற்கு வரும் எதிர்மறை எண்ணங்கள் நீங்குவதுடன் தெய்வ சக்தியும் அதிகரிக்கும். தெய்வசக்தி இருந்தாலே லட்சுமி கடாட்சத்திற்கும் குறைவிருக்காது.

- Advertisement -

அடுத்து வாயிலில் வைக்க வேண்டிய முக்கியமானது விநாயகர் படம். கண்ணாடி வைக்க முடியாதவர்கள் விநாயகர் படத்தை மாட்டி வைப்பது பல விசேஷமான பலன்களைத் தரும். இந்த விநாயகர் படமும் இதே போல தான் வீட்டிற்கு வருபவர்களுடைய கண் திருஷ்டி எதிர்மறை எண்ணங்களை நீக்கி வீட்டிற்குள் எப்போதும் நேர்மறை ஆற்றலையும் இறை சக்தியும் தரும்.

இது மட்டும் இன்றி மங்களப் பொருளாக கருதப்படும் உருளி, வாழைமரம், பூரண கும்பம், தோரணம், உப்பு, மஞ்சள், எலுமிச்சை பழம் போன்றவற்றையெல்லாம் நாம் வீட்டில் வாயிலில் வைப்பது வீட்டிற்கு லட்சுமி கடாட்சத்தை தருவதுடன், நம் வீட்டை கண் திருஷ்டி போன்றவற்றில் இருந்து காத்து கொள்ள முடியும்.

- Advertisement -

ஆகையால் தான் இன்றளவும் நம்முடைய வழிபாட்டு முறைகளில் வீட்டு வாசலில் எலுமிச்சை பழத்தை வைப்பது, தோரணம் கட்டுவது, மாவிலை வைப்பது, வாசலில் உருளி வைத்து அதில் மலர் வைத்து வைப்பது இப்படி பல முறைகளை கடைப்பிடித்து வருகிறோம். இதன் மூலம் வீடு மங்களகரமாக இருப்பதுடன் லட்சுமி கடாட்சம் பெருகும்.

அதுமட்டுமின்றி வீட்டிற்கு வருபவர்களுடைய பார்வை முதலில் இந்த பொருட்களின் மீது படும் பொழுது அவர்களுடைய தீய எண்ணங்களும், தீய பார்வைகளோ ஒரு கணம் மாறி விடும். அதன் பிறகு நம் வீட்டிற்குள் நுழையும் போது அதனுடைய தாக்கங்கள் நம்மை ஒன்றும் செய்யாது. இந்த மங்களப் பொருட்களை பார்த்தபின் வரும் போது எண்ணங்களின் மாறுதல் பலனாக லட்சுமி கடாட்சம் நம்மை வந்து அடையும் என்று சொல்லப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: காசு சேர அஞ்சறை பெட்டியில் இருக்கும் சிகப்பு ரகசியம் இது தான்.

நாம் பாடுபட்டு கடன் வாங்கி ஏதோ ஓரளவிற்கு அது வாழ்ந்து கொண்டிருப்போம். ஆனால் நம் வீட்டிற்கு வருபவர்களுக்கு நம்முடைய சூழ்நிலையை தெரியாது. நம்மை பார்த்தவுடன் இவர்களுக்கு என்ன என்று நினைப்பார்கள். இதையெல்லாம் தவிர்த்து நம் குடும்பம் நல்ல முறையில் வாழத் தான் நம் முன்னோர்கள் இந்த முறைகளை கடைப்பிடித்தார்கள். இதில் உங்களுக்கும் நம்பிக்கை இருப்பின் பின்பற்றி பலன் அடையுங்கள்.

- Advertisement -