இந்த 2 தவறை இனி தவறியும் செய்யாதீர்கள், வீட்டிற்கு வந்த மகாலட்சுமி வாசலோடு திரும்பிப் போய் விடுவாள்!

cleaning-lakshmi
- Advertisement -

வீட்டில் நீங்கள் தெரிந்தும், தெரியாமலும் செய்யும் சில தவறுகள் மகாலட்சுமி வீட்டை விட்டு வெளியேற காரணமாக அமைந்து விடுகிறது. இந்தந்த நாட்களில் இதைத்தான் செய்ய வேண்டும் என்ற வரைமுறை உண்டு. எந்த நாளில், எதை வேண்டுமானாலும் நாம் செய்து கொண்டிருந்தால், அந்த நாள் இனிமையாக அமைவது கிடையாது. வெள்ளிக்கிழமையில் மங்களகரமாக பூஜை அறையில் விளக்கு ஏற்றினால் தான் லட்சுமி கடாட்சம் நிலைக்கும். அதற்கு பதிலாக ஞாயிற்றுக்கிழமை தோறும் நீங்கள் விளக்கேற்றி வந்தால் எப்படி இருக்கும்? அது போல நாள் பார்த்து நாம் செய்யாத இந்த 2 காரியங்கள் நம் வீட்டிற்கு வரும் மகாலட்சுமியை வாசலோடு திரும்பிப் போகச் செய்து விடுமாம்! அது என்ன? என்பதை அறிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.

kadan

நாள் பார்த்து, நட்சத்திரம் பார்த்து செய்யும் சில விஷயங்கள் கூட தடுமாறுவது உண்டு. அப்படி இருக்க நாள், நட்சத்திரம் எதுவும் பார்க்காமல் வீட்டில் நீங்கள் செய்யும் சில விஷயங்கள் எதிர்மறை அதிர்வலைகளை உண்டு பண்ணுகின்றன. செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் பணத்தை கொடுக்க கூடாது. 6 மணிக்கு மேல் வீட்டை கூட்டக் கூடாது என்று நேரத்திற்கும் கூட கால வரையறை உண்டு.

- Advertisement -

அதிகாலையில் எழுந்தால் சகல, சவுபாக்கியங்களையும் பெறலாம். இப்படி நேரம் மற்றும் காலம் பார்த்து நாம் செய்யும் சில விஷயங்கள் கூட நமக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். ‘நாளும், கோளும் நமக்கு செய்யாதது, வேறு யார் செய்வார்?’ என்கிற பழமொழி ஜோதிடத்தில் உண்டு. அந்த பழமொழியில் இருப்பது போல் நேரம் நமக்கு நல்ல நன்றாக இருந்தால் தண்டவாளத்தில் தலை வைத்து படுத்தால் கூட நமக்கு ஒன்றுமே ஆகாது. நேரம் நன்றாக இல்லை என்றால் கல் தடுக்கி கூட இறந்து போய்விடலாம்.

ottadai

இவ்வகையில் செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமையில் வீட்டை ஒட்டடை அடித்தால் வீட்டில் இருக்கும் மகாலட்சுமியானவள் வாசலோடு சென்று விடுவாள் என்கிற ஐதீகம் உண்டு. செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமையில் மட்டுமல்ல, ஏகாதசி, சதுர்த்தி, சஷ்டி, அமாவாசை, பவுர்ணமி ஆகிய விரத தினங்களில் கூட வீட்டை ஒட்டடை அடிக்கக் கூடாது. வீட்டில் இருக்கும் குப்பைகளை அகற்றி இந்த நல்ல நாட்களில் வெளியில் வீசினால் செல்லப் போவது குப்பை மட்டுமல்ல, உங்கள் வீட்டில் தங்கி இருக்கும் மகாலட்சுமியும் கூட தான் என்பதை மறந்து விடாதீர்கள்.

- Advertisement -

விரதம் இருக்கும் நாட்களில் வீட்டை சுத்தம் செய்வது வீட்டில் இருக்கும் மகாலட்சுமியை அவமதிப்பதற்கு சமமாகும் எனவே நீங்கள் விரத நாட்களில் விரதம் இருந்தாலும், இல்லை என்றாலும் வீட்டை சுத்தம் செய்வதற்கு அந்த நாட்களை மட்டும் தவிர்த்து விடுங்கள். தினமும் கூட்டி பெருக்கும் பொழுதே சுவற்றில் இருக்கும் லேசான ஒட்டடைகளை தட்டி எடுத்து விடலாம். இல்லை என்றால் இந்த நாட்கள் அல்லாத மற்ற நாட்களில் ஒட்டடை அடிக்கலாம்.

toilet-cleaning

அதே போல வெள்ளிக்கிழமையில் குளியலறை மற்றும் கழிவறையை கட்டாயம் சுத்தம் செய்யக்கூடாது என்கிற நியதியும் உண்டு. வெள்ளிக்கிழமையை தவிர மற்ற நாட்களில் இவற்றை சுத்தம் செய்து வைத்துக் கொள்ளலாம். ஆனால் மகாலட்சுமிக்கு உகந்த வெள்ளிக்கிழமையில் இவற்றை சுத்தம் செய்தால் வந்த மகாலட்சுமி வீட்டோடு தங்காமல் வெளியில் சென்று விடுவாள். இதனால் குடும்பத்தில் வறுமையும், வருமான பற்றாக்குறையும் ஏற்படும்.

- Advertisement -