குபேர விளக்கை முறைப்படி ஏற்றி வழிபட்டு வந்தால் சகல செல்வங்களும் தானாக உங்களை தேடி வரும்

kuberan
- Advertisement -

செல்வங்களுக்கெல்லாம் அதிபதியாக இருப்பவர் குபேரர். ஆனால் பலரும் பெருமாளை தான் செல்வச் செழிப்புள்ள கடவுள் என்று சொல்வார்கள். இவ்வாறு செல்வந்தரான பெருமாளே அவரது ஒரு பிறவியில் தனது திருமணத்திற்காக குபேரரிடம் தான் கடன் வாங்கிஇருந்தார் என்று புராணங்கள் சொல்கின்றன. இந்த நிகழ்வின் காரணமாகவே பெருமாளுக்கே கடன் கொடுத்தவர் குபேரர் என்ற புகழும் குபேரருக்கு உண்டு. செல்வத்திற்குரிய கடவுளான குபேரரை வியாழக்கிழமை தோறும் குபேர விளக்கு ஏற்றி வணங்கி வந்தால் அவருடைய அருள் கிடைத்து செல்வ வளம் பெற்று நிம்மதியாக வாழ்ந்திடலாம். இவ்வாறு சிறப்பு மிக்க குபேர விளக்கை எப்படி முறையாக ஏற்றி குபேரரின் அருள் பெற வேண்டும் என்பதை பற்றிதான் இந்த பதிவில் தெளிவாக தெரிந்து கொள்ள போகிறோம்.

perumal-1

குபேர விளக்கு வழிபாடு:
குபேர விளக்கு ஏற்றுவதற்கு சிறந்த தினமாக வியாழக்கிழமை கருதப்படுகிறது. வியாழக்கிழமை காலை எழுந்தவுடன் குளித்துவிட்டு வீட்டை நன்றாக சுத்தம் செய்திட வேண்டும். பாத்திரங்களை சுத்தம் செய்து மஞ்சல் குங்குமம் பொட்டு வைக்க வேண்டும்.

- Advertisement -

வியாழக்கிழமை அன்று மாலை வீட்டு வாசலில் பச்சரிசி மாவில் கோலம் போட்டு, அதன்மீது செம்மண் பட்டையிட்டு அலங்காரம் செய்ய வேண்டும். பின்னர் வாசல் நிலை படிக்கு சந்தனம் தெளித்து மஞ்சள், குங்குமம் பொட்டு வைத்து அலங்காரம் செய்திட வேண்டும்.

kolam

அதன் பின்னர் கரும் புள்ளி இல்லாத ஒரு எலுமிச்சை பழத்தை எடுத்து இரண்டாக வெட்டிக் கொண்டு, அதன் ஒரு பாதியில் மஞ்சளையும், மறுபாதியில் குங்குமத்தையும் பூசி நிலைப்படியின் இருபுறங்களிலும் ஒவ்வொன்றாக வைத்துவிட்டு ,சிறிது மலர்களையும் நிலை வாசற் படியில் வைத்து விட வேண்டும்.

- Advertisement -

குபேர விளக்கு ஏற்றும் முறை:
குபேர விளக்கை நன்றாக சுத்தம் செய்து அதற்கும் மஞ்சள், குங்குமம் பொட்டு வைக்க வேண்டும். பின்னர் குபேர விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி இரண்டு பஞ்சு திரிகளை ஒன்றாக சேர்த்து ஒரே திரியாக்கி போட வேண்டும்.

manjal1

பின்னர் குபேர விளக்கில் சிறிய துண்டு பச்சை கற்பூரம், ஏலக்காய் ஒன்று, கிராம்பு ஒன்று இவை அனைத்தையும் சேர்த்து போட வேண்டும். இவை அனைத்திலும் மகாலட்சுமியின் அம்சம் பொருந்தியுள்ளதால் தீபம் ஏற்றும் பொழுது இவற்றிலிருந்து வரும் வாசனை மகாலட்சுமி தேவியை உங்கள் வீட்டிற்குள் தானாக வரவழைக்கும். அதன்பின் வீட்டின் வாசற்படியின் முன் நின்று கொண்டு உங்களுக்கு இடதுபுறம் ஒரு மர பலகை அல்லது தட்டினை வைத்து அதன் மீது குபேர விளக்கை வைத்து விட வேண்டும்.

- Advertisement -

பிறகு எப்பொழுதும் போல உங்கள் வீட்டின் பூஜை அறையில் தீபம் ஏற்றி விட்டு, அதன்பின் குபேர விளக்கிலும் தீபம் ஏற்ற வேண்டும். குபேர விளக்கில் தீபம் ஏற்றும் பொழுது குபேர காயத்ரி மந்திரத்தை சொல்லிக் கொண்டு தீபமேற்ற வேண்டும்.

Elakkai

குபேர காயத்ரி மந்திரம்:
“ஓம் யக்ஷராஜாய வித்மஹே
வைஸ்ரவணாய தீமஹி
தந்நோ குபேர ப்ரசோதயாத்”

kuberan

வாரந்தோறும் வியாழக்கிழமை அன்று இந்த குபேர மந்திரத்தை சொல்லிக்கொண்டே தீபம் ஏற்றி வர குபேர மகாலட்சுமியின் அருள் கிடைத்து உங்கள் வீட்டில் எப்பொழுதும் குறைவில்லாத செல்வம் பெருகிக் கொண்டே இருக்கும்.

- Advertisement -